Friday, May 22, 2026

128 - Daya Shatakam - 41 - அழியும் பெருமையை விட கருணையையே பற்றும் ஞானிகள் - The Wise Choose Compassion Over Temporary Greatness

      श्री:

जय गरुड सुपर्ण 
श्रीमते निगमान्त महादेशिकाय नम: 
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

41 - அழியும் பெருமையை விட கருணையையே பற்றும் ஞானிகள் - The Wise Choose Compassion Over Temporary Greatness

आज्ञां ख्यातिं धनमनुचरानाधिराज्यादिकं वा
काले दृष्ट्वा कमल वसतेरप्यकिञ्चिर्कराणि ।
पद्मा कान्तं प्रणिहितवतीं पालनेऽनन्य साध्ये
साराभिज्ञा जगति कृतिनः संश्रयन्ते दये त्वाम् ॥ 41
 
पदच्छेदः
आज्ञां ख्यातिं धनम् अनुचरान् आधिराज्य आदिकं वा
काले दृष्ट्वा कमल वसते: अपि अकिञ्चित् कराणि ।
पद्मा कान्तं प्रणिहितवतीं पालने अनन्य साध्ये
सार अभिज्ञा: जगति कृतिनः संश्रयन्ते दये त्वाम् ॥ 41

 दये — தயாதேவியே!
जगति — உலகில்
सार अभिज्ञा: — ஸாரத்தை அறிந்த
कृतिनः  — பாக்யசாலிகள்
कमल वसते: अपि — தாமரையில் வாழும் பிரமனுக்குக் கூட
आज्ञां — கட்டளையையும்
ख्यातिं — புகழையும்
धनम् — செல்வத்தையும்
अनुचरान् — பணியாளர்களையும்
आधिराज्य आदिकं वा  — உலகத்தின் ஆட்சி முதலியவற்றையும்
काले  — ஒரு காலத்தில்
अकिञ्चित् कराणि — சிறுபயனையும் தராமற் போவனவாக
दृष्ट्वा — கண்டு
अनन्य साध्ये  — வேறொருவராலும் செய்யமுடியாத
पालने — காக்கும் தொழிலில்
पद्मा कान्तं  — ஸ்ரீநிவாஸனே
प्रणिहितवतीं — நியமித்த
त्वाम् — உன்னை
संश्रयन्ते — பற்றுகின்றனர்.    

அழியும் பெருமையை விட கருணையையே பற்றும் ஞானிகள்

தயாதேவியே! எல்லாவற்றிலும் மிக உயர்ந்தது பிரமனுடைய ஸ்தாநம். பிரமன் எல்லாவற்றையும் படைப்பவன்; அண்டாதிபதியாயிருப்பவன்; சிவன் இந்திரன் முதலிய எல்லாத் தேவரினும் மேம்பட்டவன்; எம்பெருமானது திருவுந்திக் கமலத்துத் தோன்றியவன். இவனுடைய கட்டளை செல்லாத இடமில்லை. இவன் புகழுக்கு எல்லையில்லை; செல்வமோ அளவற்றது. எல்லாத் தேவர்களுமே இவனுக்குத் தொண்டு புரிவர். இப்படி எல்லாப் பெருமைகளுடனும் இவனுடைய ஆட்சி நடைபெறுகின்றது. ஆனால் இத்துணைச் சிறப்புக்களும் பிரமனுக்கு இந்த அதிகாரம் உள்ளவரையிலுமே உண்டு! இந்த ஸ்தாநம் பெறக் காரணமான புண்ணியம் இப்பெருமைகளைக் கொடுத்து விட்டுக் கழிந்துவிடுமே! உடனே இவன் அதிகாரம் போய் விடுமே! அதோடு கீழ்க்கூறிய எல்லாப் பெருமைகளும் இருந்தவிடம் தெரியாமல் மறைந்துபோகுமே! வேதங்களைப் பறிகொடுத்துப் பிரமன் தவித்தானே! அப்பொழுது எம்பெருமான் தானே அவற்றை மீட்டுக்கொடுத்துக் காக்கவேண்டியதாயிற்று. பிரமனுக்கே இந்த நிலை வரும்போது மற்றவர்களைப் பற்றிக் கூறவும் வேண்டுமோ? ஆகவே ஸம்ஸார லோகத்தில் எத்துணைச் சிறப்புக்கள் வந்தாலும் அவை ஒரு காலத்தில் அழிந்துபோகக் கூடியனவே. இவ்வுண்மையைக் கண்டறிவர் சில பாக்கியசாலிகள். அவர்கள் இவையனைத்தும் அஸாரமானவையென்று தள்ளி ஸாரமான செயலைக் கைக்கொள்ளும் விவேகத்தைப் பெறுவர். ஆதலின் தயாதேவியே! அவர்கள் உன்னையே பற்றுகின்றனர். காரணம் என்ன? உலகைக் காப்பது எம்பெருமானையன்றி வேறொருவர்க்கும் இயலாது. ஸ்ரீநிவாஸனையும் பெரிய பிராட்டியையும் காத்தல் தொழிலை நேர்மையாய் நடத்தும்படி நீயே கட்டளையிடுகின்றாய். உன்னால்தான் எம்பெருமான் உலகம் முழுதயும் காத்தருள்கின்றான். இவ்வுண்மையை அறிந்தே உன்னையே முக்கியமாகப் பற்றுகின்றனர் புண்யசாலிகள். உன்னைப் பற்றினால் எந்நாளும் அழியாத மோக்ஷானந்தத்தையும் பெறலாமென்ற ஸாரார்த்தத்தை அவர்கள் உணர்ந்தவர். (41) 

The Wise Choose Compassion Over Temporary Greatness

O Goddess of Compassion! Among all positions in the universe, the highest is the position of Brahma. Brahma is the creator of all beings, the ruler of the universe, and greater than gods such as Shiva and Indra. He was born from the divine lotus arising from the navel of the Lord. There is no place where his command does not reach. His fame has no limit, and his wealth is immeasurable. All the devas serve him. Thus, his rule continues with great glory and honor.

But all these greatnesses remain only as long as Brahma holds that position. The punya that gave him this high status will one day become exhausted. The moment it ends, his authority disappears, and along with it all his greatness vanishes without a trace. Was it not Brahma himself who once lost the Vedas and became helpless? At that time, the Lord alone had to recover and restore them for him. If even Brahma can fall into such a state, what need is there to speak of others?

Therefore, all greatness in this Samsara world is temporary and will one day perish. A few fortunate people understand this truth clearly. They reject these unstable achievements and gain the wisdom to seek what is truly permanent and meaningful. Thus, O Goddess of Compassion, they hold on to you alone. Why? Because none other than the Lord can truly protect the world. And it is you who guide Lord Srinivasa and Periya Piratti in carrying out the work of protecting all beings. It is through you that the Lord protects the whole universe. Understanding this truth, wise and blessed Jeevans take refuge in you above all else. They know the true essence—that by holding on to you, one attains the eternal bliss of Moksha, which never perishes. (41)

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸