श्री:
श्रीमते निगमान्त महादेशिकाय नम:
கருணையை விட்டு கானலை நாடும் மூடன்
திருவேங்கடமுடையானுடைய தயாதேவியே! உன்னைக் காட்டிலும் உயர்ந்த வஸ்து இல்லை என்னும்படி மேன்மையுடையை நீ. நீ பாவிகளுக்கும் உதவி புரிகின்றாய். உன்னைப் பெறுவதில் சிறிதளவு கஷ்டமும் இல்லை. இத்தகைய உன்னிடம் பெருமதிப்புக் கொண்டு உன்னையே சரணமாகப் பற்றுவதே இவ்வுலகிலுள்ள சேதநர்களின் க்ஷேமத்திற்கு வழி. இப்படியிருக்க எவனாவது ஒருவன் உன்னை அன்றி வேறு யாரையாவது கதியெனக் கருதித் தனக்குப் பற்றாகக் கொண்டால் அவனிலும் மூடன் ஒருவனும் இலன். உதாரணமாய் — தேவநதியான கங்கை அருகில் ஓடிக்கொண்டிருக்கின்றது. அங்குள்ள ஒரு மூடன் தாகத்தால் வருந்துகின்றான்; தன் விடாயைத் தணித்துக் கொள்ள இந்தக் கங்கைநீர் ஏற்றதெனக் கருதுகின்றான். நெடுந்தூரத்தில் கானலாறு புலப்படுகின்றது. வெயிலின் மிகுதி தூரத்திலிருந்து நீர்நிலையின் அலை வீசுவதாகத் தோன்றுமன்றோ! அந்த நீரின் அலைத் தோற்றத்தைக்கொண்டு தன் விடாயைத் தணித்துக்கொள்ளச் செல்கின்றான் இந்த முழு மூடன். ஏதாவது பயன் உண்டோ? அவ்வாறே தயாதேவியாகிய உன்னையன்றி வேறு கதியிருப்பதாய் எண்ணுமவனும் முழு மூடன் ஆதலின் நற்பயனைப் பெறமாட்டான். (40)
Forsaking Compassion for
Illusion
O Goddess
of Compassion of Lord Tiruvengadamudaiyan! There is nothing greater than you.
You are so exalted that you even help sinners. There is not even the slightest
difficulty in attaining you. Therefore, the true welfare of all beings in this
world lies in honoring you greatly and taking refuge in you alone.
If anyone
leaves you and instead considers something else as their refuge and support,
there can be no greater fool than that person. Consider this example: the
sacred river Ganga flows nearby, full of pure water. A foolish man stands there
suffering from thirst. The Ganga water is right beside him and is perfectly
suited to quench his thirst. Yet, from far away, he sees a mirage in the
desert that appears like waves of water caused by the heat of the sun.
Mistaking it for real water, he runs toward it to quench his thirst. Will he
gain any benefit from it? Certainly not.
In the same
way, anyone who thinks there is another refuge apart from you, O Daya Devi, is
a complete fool. Such a person will never attain true benefit. (40)
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸