Wednesday, June 24, 2026

161 - Daya Shatakam - 74- சிறு புண்ணியங்களையும் பெரிதாக்கும் தயையின் பெருந்தன்மை - Daya That Magnifies Even the Smallest Merits

  श्री:

जय गरुड सुपर्ण 
श्रीमते निगमान्त महादेशिकाय नम: 
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

74- சிறு புண்ணியங்களையும் பெரிதாக்கும் தயையின் பெருந்தன்மை - Daya That Magnifies Even the Smallest Merits

 हितमिति जगत् दृष्ट्या कॢप्तैरकॢप्त फलान्तरैः 
अमति विहितैरन्यैर्धर्मायितैश्च यदृच्छया । 
परिणत बहुच्छद्मा पद्मासहाय दये स्वयं 
प्रदिशसि निजाभिप्रेतं नः प्रशाम्यदपत्रपा ॥ 74 ॥

पदच्छेदः
हितम् इति जगत् दृष्ट्या कॢप्तै: अकॢप्त फलान्तरैः 
अमति विहितै: अन्यै: धर्मायितै: च यदृच्छया । 
परिणत बहुच्छद्मा पद्मा सहाय दये स्वयं 
प्रदिशसि निज अभिप्रेतं नः प्रशाम्यत् अपत्रपा ॥ 74 ॥

पद्मा सहाय दये — ஸ்ரீநிவாஸனுடைய தயாதேவியே!
जगत् दृष्ट्या — உலகத்தின் நினைவுப்படி
हितम् इति — புண்ணியமென்று
कॢप्तै:  — கொள்ளப்பட்ட நற்காரியங்களாலும்
अकॢप्त फलान्तरैः  — (உன்னால்) வேறுபயனைத் தருவனவாக ஸங்கல்பிக்கப்படாத
अमति विहितै: — அறியாமல் செய்யப்பட்ட புண்ணியங்களாலும்
यदृच्छया — தற்செயலாக
धर्मायितै: — தர்மமாக ஆன புண்ணியங்களாலும்
अन्यै: च — இன்னும் மற்ற புண்ணியங்களாலும்
परिणत — பரிபக்குவமான (நேர்ந்த)
बहुच्छद्मा — பல காரணங்களை உள்ளனவாகக் கொண்ட நீ
प्रशाम्यत् अपत्रपा  — வெட்கம் நீங்கியவளாய்
स्वयं — தானாகவே
नः  — எங்களுக்கு
निज अभिप्रेतं  — நாங்கள் விரும்பியதை
प्रदिशसि — கொடுத்தருள்கின்றாய்.

சிறு புண்ணியங்களையும் பெரிதாக்கும் தயையின் பெருந்தன்மை

ஸ்ரீநிவாஸனுடைய தயாதேவியே! சேதநர்களுக்கு வரும் புண்ணியங்கள் பல்வகைப் படுவன.

1.      உலகில் ஆலயம் கட்டுதல் - குளம் வெட்டுதல் - தானம் செய்தல் முதலியவற்றைப் புண்ணியச் செயலாகக் கருதுகின்றனர் மக்கள். சில சேதநர் பொதுவாக இவையெல்லாம் நற்காரியங்கள் என்ற பிறருணர்வை மட்டும் கொண்டு, தாங்கள் தெளியாமல் சில நற்செயல்களைச் செய்கின்றனர். இவற்றால் வரும் புண்ணியம் ப்ராஸங்கிகம் எனப்படும்.

2.      ஒருவன் ஒரு பாகவதனுக்குக் களைப்பு நீங்க விசிறியால் வீசுகின்றான். அவனருகில் மற்றொரு பாகவதனும் அமர்ந்துள்ளான். இந்தக் காற்று அவனுக்கும் சேருகின்றது. ஆனால் இது விசிறுபவனது நோக்கமன்று. ஆயினும் அதனால் விசிறுபவனுக்குப் புண்ணியம் சேருகின்றது. இப்புண்ணியம் ஆநுஷங்கிகம் எனப்படும்.

3.      ஒருவனுக்குக் கங்கையில் மரணம் தன் அறிவோ முயற்சியோ இன்றித் தானாகவே தெய்வ வசத்தால் நேருகின்றது. இதனால் வரும் புண்ணியம் அபுத்திபூர்வம் எனப்படும்.

4.      ஒரு செம்படவன் மீன் பிடிக்கக் கடலில் மூழ்கின்றான். அச்சமயம் அர்த்தோதய புண்யகாலம். இக்காலத்தில் நீராடிப் புண்ணியம் சம்பாதிக்கும் நோக்கமே இவனுக்கு இல்லை. ஆயினும் காலத்தின் மஹிமையால் இவனுக்குத் தற்செயலாகப் புண்ணியம் கூடுகின்றது. இப்புண்ணியம் யாத்ருச்சிகம் எனப்படும்.

5.      ஒருவன் ஓர் அந்தணனை உபசரிக்கின்றான். இவன் அவனை அந்தணன் என்ற அளவுக்கே அறிவானேயன்றி அவனுடைய விசேஷப்பண்புகளை அறியான். அவன் உண்மையில் வேதவேதாந்தங்களில் கரைகண்ட பரமைகாந்தி. இவன் அறியாவிடினும் அவனுடைய பெருமையால் இவன் எதிர்பார்ப்பதற்கு மிகுதியான புண்ணியம் இவனுக்கு வருகின்றது. இப்புண்ணியம் ஸாமாந்ய புத்திமூலம் எனப்படும்.

தயாதேவியே! கீழ்க்கூறிய புண்ணியங்களெல்லாம் உண்மையில் மிகப் பெரிய புண்ணியங்களாகமாட்ட். நீ அந்தப் புண்ணியங்களுக்குச் சில அற்ப பலனைக் கொடுத்துத் தீர்க்கலாம். ஆனால் நீ அவ்வாறு செய்வதில்லை. உன்னுடைய பரந்த உள்ளத்தில் அப்புண்ணியங்கள் மிகப் பெரியவாகவும் சிறந்த பலன் கொடுக்கவல்ல பரிபக்குவ நிலையிலுள்ளனவாகவும் தோன்றுகின்றன. அப்புண்ணியங்களைக் கொண்டே மோக்ஷம் வரையுள்ள பலன்களைப் பெறுவதற்கு ஏற்ற உபாயங்களை நீ செய்வித்து அவரவர் விருப்பத்திற்கு ஏற்ற பலனையும் தானாகவே அளிக்கின்றாய். இதுவரை அவர்களைக் காக்க முற்படுவதற்கு வாய்ப்பு இல்லாமைபற்றி உன் உள்ளத்தில் இருந்த வெட்கமும் இப்பொழுது நீங்கிவிடுகின்றது. (74) 

Daya That Magnifies Even the Smallest Merits

O Daya Devi of Srinivasa!

The merits (Punyas) earned by Jeevathmas are of many kinds.

People generally regard actions such as building temples, digging ponds, and giving charity as virtuous deeds. Yet the merit obtained from such actions may arise in different ways.

1. Praasangika Punyam (Incidental Merit)

Some people perform good deeds merely because others consider them to be virtuous, without fully understanding their significance. The merit arising from such actions is called Praasangika Punyam.

2. Aanushangika Punyam (Indirect Merit)

A person fans a Bhagavatha to relieve his fatigue. Another Bhagavatha happens to be seated nearby and also benefits from the breeze. Though helping the second person was not the intention, merit still accrues to the one who performed the service. This is called Aanushangika Punyam.

3. Abuddhipoorva Punyam (Unintentional Merit)

A person dies in the sacred waters of the Ganga without any conscious effort or intention of his own, purely through divine arrangement. The merit resulting from such an occurrence is called Abuddhipoorva Punyam.

4. Yaadricchika Punyam (Accidental Merit)

A fisherman dives into the sea to catch fish. At that moment, it happens to be an exceptionally sacred time known as Arthodaya Punya Kaalam. He has no intention of performing a holy bath, yet due to the sanctity of the time, merit accrues to him accidentally. This is called Yaadricchika Punyam.

5. Saamaanya-Buddhi-Moola Punyam (Merit Arising from General Respect)

A person serves a Brahmana knowing only that he is a Brahmana. He is unaware that the person is actually a great scholar who has mastered the Vedas and Vedanta and is a Paramaikanti. Though the servant does not recognize his greatness, the extraordinary qualities of the recipient cause the merit earned to become much greater than expected. This is called Saamaanya-Buddhi-Moola Punyam. 

O Daya Devi!

Strictly speaking, none of these merits are great enough by themselves to deserve the highest reward. At most, You could grant some limited and temporary fruits for them.

But You do not look at them that way.

In Your vast and generous heart, even these small merits appear great and mature enough to yield exalted results.

Taking these little merits as a starting point, You arrange for the Jeeva to perform the means necessary for higher attainments. You guide him step by step toward the fruits appropriate to his aspirations, ultimately even leading him toward Moksha.

Thus, You transform insignificant merits into the beginning of a journey toward the highest good.

Moreover, until such merits appeared, You may have had no opportunity to intervene and protect that Jeevan. Once even a small merit arises, You seize upon it as an excuse to shower Your grace. In doing so, the hesitation You felt at being unable to help that Jeeva disappears.

Such is the greatness of Your compassion: You do not search for reasons to reject; You search for even the smallest reason to save. (74)

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸