Tuesday, June 23, 2026

160 - Daya Shatakam - 73 - ஐந்து திருமேனிகளுக்கும் சேதநருக்கும் இடையிலான தயையின் ஏணி - Daya as the Ladder Between the Lord’s Five Forms and the Jeevathma

   श्री:

जय गरुड सुपर्ण 
श्रीमते निगमान्त महादेशिकाय नम: 
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

73 -  ஐந்து திருமேனிகளுக்கும் சேதநருக்கும் இடையிலான தயையின் ஏணி - Daya as the Ladder Between the Lord’s Five Forms and the Jeevathma

 स्वयमुदयिनः सिद्धाद्याविष्कृताश्च शुभालयाः 
विविध विभव व्यूहावासाः परं च पदं विभोः । 
वृषगिरि मुखेष्वेतेष्विच्छावधि  प्रतिलब्धये 
दृढ विनिहिता निश्रेणिस्त्वं दये निज पर्वभिः ॥ 73 ॥

पदच्छेदः
स्वयम् उदयिनः सिद्ध आदि अविष्कृता: च  शुभ आलयाः 
विविध विभव व्यूह आवासाः परं च पदं विभोः । 
वृषगिरि मुखेषु एतेषु इच्छा अवधि प्रतिलब्धये 
दृढ विनिहिता निश्रेणि: त्वं दये निज पर्वभिः ॥ 73 ॥

दये — தயாதேவியே!
स्वयम् — தாமே
उदयिनः : — வந்து தோன்றினவும்
सिद्ध आदि— ஸித்தர் முதலியவர்களால்
अविष्कृता: च— வெளிப்படுத்தப்பெற்றனவுமான
शुभ आलयाः  — திவ்ய க்ஷேத்ரங்களும்
विविध — பல்வகையான
विभव — விபவ வடிவங்களும்
व्यूह — வ்யூஹத் திருமேனிகளும்
आवासाः  — உறைகின்ற இடங்களும்
विभोः  — பரவாஸுதேவனுடைய
परं  पदं  च — பரம பதமும் (ஆகிய) ஸ்தாநங்கள்
वृषगिरि मुखेषु  — திருவேங்கடம் முதலிய
एतेषु — இந்த இடங்களில்
इच्छा अवधि — விருப்பத்துக்கேற்ற பலனை
प्रतिलब्धये — பெறுவதற்கு
त्वं — நீ
निज पर्वभिः: — தன் படிச் சட்டங்களாலே
दृढ विनिहिता — இறுக அமைக்கப்பட்ட
निश्रेणि:  — ஏணியாக ஆகின்றாய்.

ஐந்து திருமேனிகளுக்கும் சேதநருக்கும் இடையிலான தயையின் ஏணி

தயாதேவியே! எம்பெருமான் ஜவகைத் திருமேனிகளுடன் விளங்கின்றான்.

(1) பல திவ்ய தேசங்களில் அர்ச்சை வடிவு கொண்டு அவதரிக்கின்றான். அவற்றுள் சில க்ஷேத்ரங்களில் ஒருவருடைய ப்ரார்த்தனையுமின்றித் தானாகவே வந்து அவதரிக்கின்றான். இந்த க்ஷேத்ரங்கள் ஸ்வயம்வ்யக்தமென்னப்படுகின்றன. திருவேங்கடமலை ஸ்வயம்வ்யக்த க்ஷேத்ரத்துள் முக்கியமாயுள்ளது. ஸித்தர்கள் - தேவர்கள் - முனிவர்கள் முதலியவரின் தவத்தாலும் வேண்டுகோளாலும் பல க்ஷேத்ரங்களில் அர்ச்சைவடிவு கொள்கின்றன. இந்த க்ஷேத்ரங்கள் ஸைத்தம் - தைவம் - ஆர்ஷம் முதலிய பெயர்களால் வழங்கும். இவையெல்லாம் அர்ச்சாவதாரமாகும்.

(2) மீனாயும் ஆமையாயும் பன்றியாயும் இராமனும் கண்ணனாயும் இப்படிப் பல் வேறு அவதாரங்களைச் செய்தருள்கின்றான் எம்பெருமான். இவை விபவாவதாரமெனப்படும்.

(3) வாஸுதேவன்-ஸங்கர்ஷணன் - ப்ரத்யும்நன் - அநிருத்தன் என்ற பெயருடன் சில திருமேனிகளை எடுத்துக் கொள்ளுகின்றான். இவை வ்யூஹமெனப்படும்.

(4) ஒவ்வொருவருடைய உள்ளத்திலும் அதற்கேற்ற வடிவு கொண்டு நிற்கின்றான். இது அந்தர்யாமிரூபமெனப்படும்.)

(5) ஸ்ரீவைகுண்டத்தில் பரவாஸுதேவனாய்க் காட்சி தருகின்றான். இதுவே பரரூபமெனப்படும். இதுவே மற்றைய நான்கு திருமேனிகளுக்கும் மூலமாகும்.

 

இப்படித் திருவேங்கடம் முதலிய அர்ச்சை தொடங்கிப் பரரூபம் வரை உள்ள திருமேனிகளைச் சேதநர் அவரவர் விருப்பத்துக்கு ஏற்றவாறு வழிபட்டுத் தாம் விரும்பிய பலனைப் பெறுகின்றனர். உலகில் உயரமான மரத்தில் ஏறிக் கனிகளைப் பறிப்பதற்குப் பல படிச்சட்டங்களால் இறுகப் பிணித்த ஏணி சாதனமாகின்றது. ஐந்து ரூபங்களைக் கொண்ட எம்பெருமான் கற்பகம் போன்றவன். தத்தம் விருப்பப்படி இவ்வடிவங்களை வழிபட விரும்புவார்க்கு எம்பெருமானாகிய கற்பக மரத்தை நெருங்க ஓர் ஏணி வேண்டும். ஸ்ரீநிவாஸனுடைய கருணையாகிய நீ அதற்கு ஏற்ற ஏணியாகின்றாய். அவரவர் வழிபடுதற்கு ஏற்றவாறு நீ நடுவே செய்யும் அநுகூலச்செயல்களே ஏணியின் படிச்சட்டங்களாகும். இந்தப் படிகளால் நீ இறுகப் பிணிக்கப் பட்டுள்ளாய். உன்னாலே சேதநர்கள் எம்பெருமானாகிய கற்பகமரத்தை அணுகித் தாம் விரும்பும் பலனாகிய கனிகளைப் பெறுகின்றனர். நீ இல்லாவிடில் சேதநர்கள் எம்பெருமானை அணுகவும் பலன் பெறவும் முடியாதே; மற்றொரு ரஸமான அம்சமும் உள்ளது. ஏணி உயரத்தில் ஏறப் பயன்படுவது போல் கீழே இறங்குதற்கும் பயன்படும். பரவாஸுதேவாயுள்ள பரமபுருஷன் கீழே இறங்கி மற்ற திருமேனிகளைக் கொள்கின்றானே; எப்படி? உன் வழியாகவே அவன் கீழே இறங்குகின்றான். ஆக அவன் இறங்கவும் பயன்படுகின்றாய். தயை இல்லாவிடில் எப்படி அவன் மற்ற திருமேனிகளை எடுத்துக்கொண்டு சேதநர்களுக்கு ஸுலபனாய் நிற்கமுடியும்? ஆக நீயே இரண்டு அம்சங்களுக்கும் சாதனமாய்த் திகழ்கின்றாய். (73)

 

Daya as the Ladder Between the Lord’s Five Forms and the Jeevathma

O Daya Devi!

Emperuman manifests Himself in five divine forms.

1. Archaa Roopam (Deity Form)

He appears in numerous Divya Desams as Archaa Murthy. In some sacred places, He manifests on His own without anyone's request. Such holy places are called Swayam Vyakta Kshetrams, among which Tiruvengadam is considered foremost.

In other places, He manifests in response to the prayers and penance of Siddhas, Devas, Rishis, and others. Such Kshetrams are known by names such as Saitham, Daivam, and Arsham. All these belong to His Archaa manifestation.

2. Vibhava Avatharams

He incarnates as Matsya (Fish), Kurma (Tortoise), Varaha (Boar), Rama, Krishna, and many other Avatharams. These are called Vibhava forms.

3. Vyuha Forms

He manifests as Vasudeva, Sankarshana, Pradyumna, and Aniruddha. These are known as the Vyuha forms.

4. Antharyami Form

He resides within every being, assuming the form appropriate to each one. This is called the Antharyami Roopam.

5. Para Roopam

In Sri Vaikuntham, He shines as Para Vasudeva. This is known as the Para form and serves as the source of all the other four manifestations.

 

Beginning from the Archaa form in Tiruvengadam and extending up to the Para form in Sri Vaikuntham, devotees worship these various manifestations according to their inclination and attain the fruits they desire.

Consider a tall tree laden with fruits. To climb it and gather its fruits, one requires a sturdy ladder with firmly fastened steps.

Similarly, the Lord who exists in these five forms is like a celestial Karpaga tree, capable of granting every worthy desire.

But those who wish to approach this divine Karpaga tree need a ladder.

That ladder is You, O Daya Devi!

The many acts of grace and assistance that You perform for seekers are like the steps of that ladder. Through these steps, You make it possible for them to climb upward and approach the Lord.

By means of You, Chethanas reach the divine Karpaga tree, Emperuman, and obtain the fruits they seek.

Without You, they would neither be able to approach Him nor receive His blessings.

There is yet another beautiful aspect to this analogy.

A ladder is useful not only for climbing up but also for coming down.

Likewise, Para Vasudeva, who resides in the highest realm, descends to assume the other forms—Vyuha, Vibhava, Antharyami, and Archaa.

How does He descend?

He descends through You.

It is through compassion that the Supreme Lord makes Himself accessible to ordinary beings. Without Daya, how could He take these forms and become so easily approachable?

Thus, You serve both purposes:

·        You enable Jeevathmas to ascend toward the Lord.

·        You enable the Lord to descend toward Jeevathmas.

Therefore, O Daya Devi, You alone are the bridge connecting the Supreme Lord and His devotees. (73)


🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸