Wednesday, April 29, 2026

105 - Daya Shatakam - 18 – அஞ்ஞான இருளை நீக்கி, உலகை வழிநடத்தும் கருணை தீபம் - DayaDevi Lamp that Removes Ignorance & guides the world

  श्री:

जय गरुड सुपर्ण 
श्रीमते निगमान्त महादेशिकाय नम: 
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

18 – அஞ்ஞான இருளை நீக்கி,  உலகை வழிநடத்தும் கருணை தீபம் - DayaDevi Lamp that Removes Ignorance & guides the world

अनुगुण दशार्पितेन श्रीधर करुणे समाहित स्नेहा । 
शमयसि तमः प्रजानां शास्त्रमयेन स्थिर प्रदीपेन ॥ 18 ॥
पदच्छेदः
अनुगुण दशा अर्पितेन श्रीधर करुणे समाहित स्नेहा । 
शमयसि तमः प्रजानां शास्त्र मयेन स्थिर प्रदीपेन ॥ 18 ॥

श्रीधर करुणे — ஸ்ரீநிவாஸனுடைய தயாதேவியே!
समाहित स्नेहा  — அன்பை மிகுதியாக வைத்தவளாய் (எண்ணெய் இடப்பட்டதாய்)
अनुगुण दशा अर्पितेन — உரிய நிலையில் கொடுக்கப்பட்ட (தக்க திரியில் ஏற்றப்பட்ட)
शास्त्र मयेन — சாஸ்த்ரங்களாகிய
स्थिर प्रदीपेन  — நிலையான தீபத்தால்
प्रजानां — மக்களின்
तमः — (அஞ்ஞானமெனும்) இருளை
शमयसि — ஒழிக்கின்றாய்.

அஞ்ஞான இருளை நீக்கி,  உலகை வழிநடத்தும் கருணை தீபம்

ஸ்ரீநிவாஸனுடைய தயாதேவியே! உலகில் இருளில் வழி தடுமாறாது இருப்பதற்காக எண்ணெய் வார்த்துத் திரியிட்டு விளக்கை ஏற்றி வைப்பர். அவ்வொளியால் மக்கள் தவறான வழியிற் சென்று தடுமாறாமல் நேர்வழியிற் செல்லலாகும். நீ உலகுக்கெல்லாம் தாயாயுள்ளாய். எல்லா மக்களும் உன் குழந்தைகள். அவர்கள்பால் நீ கொண்டுள்ள அன்புதான் நீ கொடுக்கும் விளக்குக்கு எண்ணெயாகும். அவர்களுக்கு ஸமயத்தில் தலையெடுக்கும் நற்குணமே திரியாகும். நீ வெளியிடும் வேதங்கள் முதலிய சாஸ்த்ரங்களே அவர்களுக்குக் கொடுக்கும் சாச்வதமான விளக்காகும். அவர்களின் அஞ்ஞானமே விளக்கால் ஒழியும் இருளாகும். மக்களுக்கு நற்குணம் வாய்க்கும் ஸமயம் பார்த்து, மிக்க அன்புடன் வெளியிடும் சாஸ்த்ரங்களின் கருத்தை அவர்கள் உணர்ந்து தங்கள் அஞ்ஞானம் ஒழிந்து நல்ல தெளிவு பெற்றுத் தவறான செயல்களை விலக்கி நேரிய வழியில் நடந்து நல்வாழ்வு பெறச் செய்கின்றாய். (படைக்கப்பட்ட மக்களுக்குச் சாஸ்த்ரமாகிற விளக்கைக் கொடுப்பதுவும் கருணையின் செயலே என்று தேறும்.) (18) 

DayaDevi - Lamp that Removes Ignorance & guides the world

O Goddess of Compassion of Lord Srinivasa! In this world, people light a lamp with oil and a wick so they do not lose their way in the dark. With that light, they avoid wrong paths and walk on the right path. In the same way, you are the mother of the whole world, and all people are your children. The love you have for them is like the oil for the lamp. The good qualities that arise in them at the right time are like the wick. The Vedas and Shastras that you reveal are the steady lamp you give them. Their ignorance is the darkness that this lamp removes. By choosing the right time when good qualities arise in people, and by your great love, you help them understand the teachings of the Shastras. This removes their ignorance, gives them clear understanding, keeps them away from wrong actions, and guides them on the right path so they may live well. Thus, giving the guiding lamp of Shastras to the created beings is itself an act of your compassion. (18) 

Notes by Sri :

இந்த ச்லோகத்தில் கூறப்பட்டுள்ள உவமைகள் :

உவமை (எடுத்துக்காட்டு)

ஆத்மார்த்தம் (உள்ளார்ந்த பொருள்)

இருளில் ஏற்றப்படும் விளக்கு

மக்களை வழிநடத்தும் சாஸ்திரங்கள்

விளக்கின் எண்ணெய்

தயாதேவியின் அன்பும் கருணையும்

விளக்கின் திரி

சரியான சமயத்தில் எழும் ஜீவனின் நற்குணங்கள்

விளக்கின் ஒளி

சாஸ்திரங்களால் கிடைக்கும் தெளிவான அறிவு

இருள்

அஞ்ஞானம்

நேர்வழியில் பாதுகாப்பாக நடப்பது

நல்லற வாழ்வு வாழ்தல்

 Similes explained in this sloka: 

Simile (Example)

Spiritual Meaning

Lamp lit in darkness

Shastras that guide people

Oil in the lamp

Compassion and love of Daya Devi

Wick in the lamp

Good qualities that arise in people at the right time

Light of the lamp

True understanding gained from Shastras

Darkness

Ignorance (Ajnana)

Walking safely on the right path

Living a righteous and good life

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸