श्री:
जय गरुड सुपर्ण
श्रीमते निगमान्त महादेशिकाय नम:
श्रीमते निगमान्त महादेशिकाय नम:
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
4.श्री अभीतिस्तवः Abheethi Stavam ஸ்ரீ அபீதிஸ்தவம்
18 - சரணாகதன் மேல் பெருமாளின் அக்கறை - Care for the Surrendered Soul
निसर्ग निरनिष्टता तव निरंहसः श्रूयते
ततस्त्रियुग सृष्टिवत् भवति संहृतिः क्रीडितम् ।
तथाऽपि शरणागत प्रणय भङ्ग भीतो भवान्
मदिष्टमिह यद्भवेत् किमपि मास्म तज्जीहपत् ॥ 18 ॥
पदच्छेदः
निसर्ग निरनिष्ट ता तव निरंहसः श्रूयते
तत: त्रि युग सृष्टिवत् भवति संहृतिः क्रीडितम् ।
तथा अपि शरणागत प्रणय भङ्ग भीत: भवान्
मत् इष्टम् इह यत् भवेत् किमपि मास्म तत् जीहपत् ॥ 18 ॥
त्रि युग - ஆறு குணங்களையுடையனே!
निरंहसः - பாபமற்ற
तव -உனக்கு
निसर्ग - இயற்கையாகவே
निरनिष्ट ता - துக்கமற்ற தன்மை
श्रूयते - வேதத்தில் கூறப்படுகின்றது
तत: - ஆதலின்
सृष्टिवत् - படைத்தலைப் போல்
संहृतिः - அழித்தலும்
क्रीडितम् - விளையாட்டாக
भवति - ஆகின்றது.
तथा अपि - அப்படியிருந்தும்
शरणागत - சரணமடைந்தவனுடைய
प्रणय - விருப்பத்தை
भङ्ग - மறுப்பதற்கு
भीत: - அஞ்சிய
भवान् - நீ
इह - இவ்வுலகில்
यत् - எது
मत् इष्टम् - எனக்கு விரும்புவதற்கு ஏற்றதாக
भवेत् - இருக்குமோ
तत् - அதை
किमपि - ஒன்றையும்
मास्म जीहपत् - விடாமல் செய்தருள வேண்டும்.
சரணாகதன் மேல் பெருமாளின் அக்கறை
திருவரங்க நகரப்பனே! நீ ஜ்ஞாநம்-சக்தி-பலம்-ஐச்வர்யம்- வீர்யம் - தேஜஸ் என்னும் ஆறு குணங்கள் நிறைந்த பரம புருஷன். உனக்குப் பாபம் என்பது கிடையாது. ஆதலின் "நீ இயற்கையாகவே துக்கமற்றவன்" என்று உபநிஷத்துக் கூறு கின்றது. ஆகவே நீ என்னை அழித்தாலும் அதுவும் உலகத்தைப் படைத்தல் போலவே உன் ஸங்கல்பத்தால் நடக்கும் விளையாட்டுச் செயலாகவே ஆகுமன்றி அதனால் உனக்கு ஒரு தீங்கும் இல்லை. ஆனால் உனக்கும் ஓர் அச்சமுண்டு. அது உன்னைச் சரணமடைந்தவனுடைய விருப்பத்தை நிறைவேற்றாமல் மறுத்துவிட்டால் அவனுடைய நட்புக்கு முறிவு வந்துவிடுமே என்ற அச்சம்தான். ஆதலின் சரணமடைந்தவனுக்கு நன்மை புரிவதிலேயே கருத்துக் கொண்டிருப்பாய். அடியேன் உன்னைச் சரணமடைந்தவன். அடியேனுக்கு எது நன்மை என்பதை நீயே கண்டு அதைச் செய்யப் பின்வாங்காது செய்தருள வேண்டும்.
Care for the Surrendered Soul
O Lord of Srirangam! You are the Supreme Being, filled with the six divine qualities—Jnana (knowledge), Shakti (power), Bala (strength), Aishvarya (wealth), Veerya (valor), and Tejas (radiance). You have no sin, and so the Upanishads say that You are naturally free from sorrow. Even if You destroy me, it would only be like Your act of creation—done by Your divine will as a form of play, without causing You any harm. Yet, You have one kind of concern: if You fail to fulfill the wish of one who has surrendered to You, it would break that devotee’s trust and relationship with You. Therefore, You always focus on doing good to those who surrender to You. I am one such surrendered soul. Please decide what is truly good for me and grant it without holding back.
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸