श्री:
- Composed by Swami Vedanta Desikan
- Language - Sanskrit
- On Ranganathan
- Composed at Sathyakalam, Karnataka
- Slokas count 29
- Benefits: Those who recite this Stotra with faith and devotion will surely be freed from fear, and Lord Ranganatha will fulfill their wishes.
[முன்னுரை]
ஸ்ரீ அபீதிஸ்தவம் 29 சுலோகங்கள் கொண்டது. அச்சம்
நீக்குமாறு திருவரங்கனைப் பிரார்த்தித்த ஸ்தோத்ரமாதலின் இது இப்பெயர் பெற்றது.
ஸ்ரீதேசிகன் திருவரங்கத்தில் நெடுங்காலம் எழுந்தருளியிருந்து திருவரங்கனை நன்கு
அனுபவித்து க்ரந்தங்களை ப்ரவசநம் செய்துகொண்டிருந்தார். அப்பொழுது அங்கு
முகம்மதியர் படையெடுப்பால் பெருந்துன்பம் விளைந்தது. முகம்மதியர்படை கோவிலில்
புகுந்து பாழ்செய்ய முற்பட்டது. அங்கிருந்த புத்திமான்களான பக்தர்கள்
மூலஸ்தாநத்தைக் கற்சுவர் அமைத்து மறைத்து உத்ஸவ மூர்த்திகளைத் தந்திமாய்
வெளியே எழுந்தருளப் பண்ணிக்கொண்டு வடநாடு சென்று காத்தார்கள். ஸ்ரீதேசிகன்
திருவரங்கனைப் பிரிந்து அங்கே இருக்க விரும்பாது அவ்வூரை விட்டு வெளியே எழுந்தருளிவிட்டார்.
பின்பு ஸ்வாமி திருநாராயணபுரத்தில் இருந்த போது திருவுள்ளம் மிகப் புண்பட்டு
அவர் அபீதிஸ்தவம் என்னும் உயர்ந்த ஸ்தோத்ரத்தை அருளிச்செய்தார். பெரிய
பெருமாளுக்குத் திருவாராதநம் முதலியவை நின்றுவிட்டதையும் உத்ஸவமூர்த்திகள்
வெளிநாட்டுக்கு எழுந்தருள நேரிட்டதையும் நினைக்கும்போது ஸ்வாமிக்கு உண்டான மனநோவு
கூறுந்தரமன்று. இப்படித் திருவரங்கத்தில் ஏற்பட்ட ஆபத்தை நீக்கி அபயமளிக்குமாறும்
உத்ஸவமுர்த்திகள் மறுபடி பெரிய பெருமாளுடன் சேர்ந்து திருவாராதநாதிகள்
கண்டருளும்படியும் இந்த ஸ்தோத்ரத்தால்
பிரார்த்திக்கின்றார். பிறகு எதிரிகள் அழிந்துவிட, கொப்பணார்யன் என்ற பாகவதோத்தமனால் உத்ஸவ மூர்த்திகள்
ஸ்ரீரங்கம் எழுந்தருளிக் கைங்கர்யங்கள் முன்போல் முறைப்படி நடந்தன. ஸ்ரீ
தேசிகனும் மனமகிழ்ந்து திருவரங்கத்துக்கு எழுந்தருளிப் பெரிய பெருமாளை நன்கு
அநுபவித்து வந்தார். இந்த ஸ்தோத்ரத்தை நம்பிக்கையுடனும் பக்தியுடனும் பாராயணம்
செய்பவர்களுக்கு எத்தகைய அச்சமும் நிச்சயமாய் நீங்கும். அவர்களின் இஷ்டத்தைத்
திருவரங்கன் தலைக்கட்டி வைப்பது உறுதி.
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
[Preface]
This stotra has 39 verses. It is called Abheethi Stavam because it
is a prayer to Lord Ranganatha to remove fear. Sri Desika lived in Srirangam
for many years, joyfully experiencing the Lord and teaching sacred texts. At
that time, Muslim armies invaded Srirangam and caused great trouble. The
invaders tried to damage the temple. Wise and devoted people built a stone wall
to hide the main deity and safely took the Utsava Murti away to the north to
protect Him. Sri Desika could not bear to stay in Srirangam without Lord
Ranganatha, so he left the city. Later, while staying at Tirunarayanapuram, his
heart was deeply pained. Remembering that daily worship had stopped and that
the Utsava Murti had been taken away, he composed the great hymn Abheethi
Stavam, praying for protection and fearlessness. He prayed that the danger
in Srirangam be removed and that the Utsava Murti return and resume worship
with the main deity. Later, when the enemies were defeated, a great devotee
named Gopanna brought the Utsava Murti back to Srirangam, and temple services
began again as before. Sri Desika happily returned to Srirangam and continued
to enjoy the Lord. Those who recite this stotra with faith and devotion will
surely be freed from fear, and Lord Ranganatha will fulfill their wishes.
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
SarvamSriKrishnarpanam