श्री:
जय गरुड सुपर्ण
श्रीमते निगमान्त महादेशिकाय नम:
श्रीमते निगमान्त महादेशिकाय नम:
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
4.श्री अभीतिस्तवः Abheethi Stavam ஸ்ரீ அபீதிஸ்தவம்
1 - அச்சத்தை நீக்கும் பரமன் – The Supreme Remover of Fear
अभीतिरिह यज्जुषां यदवधीरितानां भयं
भयाभय विधायिनो जगति यन्निदेशे स्थिताः ।
तदेतदतिलङ्घित द्रुहिण शम्भु शक्रादिकं
रमासखमधीमहे किमपि रङ्गधुर्यं महः ॥ 1 ॥
पदच्छेदः
अभीति: इह यत् जुषां यत् अवधीरितानां भयं
भय अभय विधायिन: जगति यत् निदेशे स्थिताः ।
तत् एतत् अतिलङ्घित द्रुहिण शम्भु शक्र आदिकं
रमा सखम् अधीमहे किमपि रङ्गधुर्यं महः ॥ 1 ॥
इह - இவ்வுலகில்
यत् जुषां - எதை அண்டியவர்களுக்கு
अभीति- பயமில்லாமையும்
यत् अवधीरितानां - எதனால் புறக்கணிக்கப்பட்டவருக்கு
भयं - அச்சமும் (ஏற்படுமோ )
जगति - உலகில்
भय अभय - பயத்தையும் அபயத்தையும்
विधायिन: - உண்டாக்குமவர்கள்
यत् निदेशे - எதனுடைய கட்டளையில் ( அடங்கி )
स्थिताः - இருக்கின்றனரோ
तत् - அத்துணைப் பெருமையுடையதாய்
अतिलङ्घित द्रुहिण शम्भु शक्र आदिकं - பிரமன் சிவன் இந்திரன் முதலியவர்களுக்கும் மேம்பட்டதாய்
रमा सखम् - பெரிய பிராட்டியுடன் கூடியதாய்
रङ्गधुर्यं - திருவரங்கத்தில் தலைமை பெற்றதாய்
एतत् - கண்முன் புலப்படுகின்ற
किमपि - அற்புதமான
महः - தேஜஸ்ஸை
अधीमहे - ஓதி அநுஸந்திக்கின்றோம்.
அச்சத்தை நீக்கும் பரமன் திருவரங்கன்
திருவரங்கமென்னும் திவ்வியத் தலத்தில் திருவரங்கனென்னும் ஓர் அற்புதமான மஹாதேஜஸ் பெரிய பிராட்டியுடன் வந்து அமர்ந்து காட்சி தருகின்றது. இது இங்குத் தன் ஸங்கல்பத்தால் எல்லாச் செயல்களையும் நடத்திவருகின்றது; இப்படி சோதி வடிவங்கொண்டு நிற்கும் திருவரங்கனைப் பக்தியுடன் வந்தடைந்தால் ஸம்ஸார பந்தத்தால் வந்த அச்சங்கூட நீங்கி விடும். இவனை அணுகாது நிற்பவர்களை இவன் புறக்கணித்து விடுவான். அவர்களுக்கு ஸம்ஸார பயம் தொடர்ந்துகொண்டே நிற்கும். உலகில் மக்களுக்கு அச்சத்தைத் தருமவர்களாகவும் அச்சத்தை ஒழிப்பவர்களாகவும் நாம் கருதும் சேதநர்களெல்லாம் திருவரங்கன் கட்டளைக்குக் கீழ்ப் படிந்து நின்று ஏவல் புரிபவர்களேயாவர். இவ்வெம்பெருமான் பிரமன் - சிவன் -இந்திரன் முதலிய எல்லாத்தேவரினும் எல்லா வகையிலும் மேம்பட்ட பரதத்துவமாவான். இத்துணைப் பெருமை பெற்ற திருவரங்கனைப் பெரிய பிராட்டியோடு எப்போதும் அநுஸந்திக்கின்றோம்.
Ranganatha – The Supreme Remover of Fear
In the divine holy place of Srirangam, Lord Ranganatha, a wonderful and radiant Supreme Being, sits with Periya Piratti and gives darshan. By His own divine will, He carries out all activities in this world. If one approaches this shining Lord with devotion, even the fear that comes from the bondage of samsara will disappear. But those who do not come near Him are ignored by Him, and their fear of worldly life continues. The beings whom we think give fear or remove fear in this world are actually acting only under the command of Lord Ranganatha. This Lord is the Supreme Reality, greater in every way than Brahma, Shiva, Indra, and all other devas. We should always meditate upon this great Lord Ranganatha along with Periya Piratti.
Notes by Sri:
This slokam highlights a few key aspects:
• The supremacy of Ranganatha
• The divine will of Ranganatha, which decides who will be afraid and who will not
• The controlling power of Ranganatha and how all other devas act according to His will
• Ranganatha is none other than Lakshmi Pathi
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸