Thursday, April 9, 2026

Abheethi Stavam - 27- எதிரிகளை அடக்கும் திருவரங்கனின் வீர்யம் – Thiruvarangan’s Valor that Destroys All Obstacles

    श्री:

जय गरुड सुपर्ण 
श्रीमते निगमान्त महादेशिकाय नम: 
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

 4.श्री अभीतिस्तवः Abheethi Stavam ஸ்ரீ அபீதிஸ்தவம்

27- எதிரிகளை அடக்கும் திருவரங்கனின் வீர்யம் – Thiruvarangan’s Valor that Destroys All Obstacles

स कैटभ तमो रविर्मधु पराग झञ्झामरुत् 
हिरण्य गिरि दारणस्त्रुटित कालनेमि द्रुमः । 
किमत्र बहुना भजत् भव पयोधि मुष्टिन्धयः 
त्रिविक्रम भवत्क्रमः क्षिपतु मङ्क्षु रङ्गद्विषः ॥ 27 ॥

पदच्छेदः
स: कैटभ तम: रवि: मधु पराग झञ्झामरुत् 
हिरण्य गिरि दारण: त्रुटित कालनेमि द्रुमः । 
किम् अत्र बहुना भजत् भव पयोधि मुष्टिन्धयः 
त्रिविक्रम भवत् क्रमः क्षिपतु मङ्क्षु रङ्ग द्विषः ॥ 27 ॥

त्रिविक्रम - மூவடியால் உலகளந்தவனே ! 
कैटभ - கைடபனென்னும் 
तम: रवि: - இருளுக்குச் சூரியனாய் 
मधु पराग - மதுவென்னும் அசுரனாகிய புழுதிக்கு 
झञ्झामरुत् - சுழற்காற்றாய் 
हिरण्य गिरि - ஹிரண்யகசிபு என்னும் மலையை 
दारण:  - பிளந்ததாய் 
त्रुटित कालनेमि द्रुमः - காலநேமியென்னும் மரத்தை முறித்ததாய் 
अत्र - இவ்விஷயத்தில் 
बहुना - அதிகம் பேசுவது 
किम् - எதற்கு !
भजत् - அடியார்களின் 
भव पयोधि - ஸம்ஸார ஸமுத்ரத்தை
मुष्टिन्धयः - உறிஞ்சுவதாயுள்ள 
स: - அத்தகைய
भवत् क्रमः - உன் செயல் 
रङ्ग द्विषः - திருவரங்கத்துக்கு எதிரிகளை 
मङ्क्षु - விரைவில்
क्षिपतु - ஒழித்தருளவேண்டும்.

எதிரிகளை அடக்கும் திருவரங்கனின் வீர்யம்

திருவரங்கப்பெருமானே ! நீ த்ரிவிக்ரமனாக அவதரித்து மூன்றடிகளால் உலகங்களை அளந்தாய். கதிரவனைக் கண்டு இருள் அழிவதுபோல் உனது வீர்யத்தால் கைடப அஸுரன் ஒழிந்தான். சுழற்காற்றில் அகப்பட்ட புழுதி பறப்பதுபோல் மதுவென்னும் அசுரன் உன் வீர்யத்தைத் தாங்கமாட்டாது மடிந்தான். உனது வீர்யம் மலையை உடைப்பதுபோல் ஹிரண்ய கசிபுவின் மார்பைப் பிளந்து நின்றது. காலநேமி என்னும் அசுரனை மரத்தை முறிப்பது போல் உன் வீர்யம் மாள்வித்தது. அதிகமாய்க் கூறிக்கொண்டே போவது ஏன் ? உன் பராக்ரமம் உன்னை வந்தடைந்த அடியார்களின் ஸம்ஸாரமாகிய கடலை அடியோடு உறிஞ்சிவிடக்கூடியது. இத்துணைப் பெருமையுடைய உன் வீர்யம், திருவரங்கத்தில் உன்னை நாங்கள் அநுபவிக்க முடியாமல் தடைசெய்து எங்களை நலியும் எதிரிகளை விரைவில் அடக்கியருள வேண்டும். 

Thiruvarangan’s Valor that Destroys All Obstacles

O Lord Ranganatha! You took the Trivikrama form and measured the worlds in three steps. Just as darkness disappears before the sun, Your valor destroyed the asura Kaitabha. Like dust blown away in a whirlwind, the asura Madhu could not withstand Your power and perished. Your strength split open the chest of Hiranyakashipu like a mountain being broken. The asura Kalanemi was destroyed as easily as breaking a tree. Why say more? Your great valor can completely dry up the ocean of samsara for those who surrender to You. Such mighty power of Yours should now quickly subdue those enemies who trouble us and prevent us from experiencing You in Srirangam.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸