Friday, April 10, 2026

Abheethi Stavam - 28- தேசிகனின் விருப்பம் - Desikan’s Wish

    श्री:

जय गरुड सुपर्ण 
श्रीमते निगमान्त महादेशिकाय नम: 
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

 4.श्री अभीतिस्तवः Abheethi Stavam ஸ்ரீ அபீதிஸ்தவம்

28- தேசிகனின் விருப்பம் - Desikan’s Wish

यति प्रवर भारती रस भरेण नीतं वयः 
प्रफुल्ल पलितं शिरः परमिह क्षमं प्रार्थये । 
निरस्त रिपु संभवे क्वचन रङ्गमुख्ये विभो 
परस्पर हितैषिणां परिसरेषु मां वर्तय ॥ 28 ॥

पदच्छेदः
यति प्रवर भारती रस भरेण नीतं वयः 
प्रफुल्ल पलितं शिरः परम् इह क्षमं प्रार्थये । 
निरस्त रिपु संभवे क्वचन रङ्ग मुख्ये विभो 
परस्पर हितैषिणां परिसरेषु मां वर्तय ॥ 28 ॥

विभो - ப்ரபுவே!
यति प्रवर - ஸ்ரீ பாஷ்யகாரரின் 
भारती रस भरेण - ஸ்ரீஸூக்திகளின் மிகுதியான சுவையைப் பருகியே 
वयः - யௌவநப்பருவம் 
नीतं - கழிக்கப்பெற்றது. 
शिरः - தலை 
प्रफुल्ल पलितं - முற்றிலும் நரைத்துவிட்டது.
परम् - இனிமேல் 
इह - இவ்வுலகில்
क्षमं - எனக்கு ஏற்றதொன்றை 
प्रार्थये - வேண்டுகின்றேன்
निरस्त रिपु संभवे  - பகைவர் உதிப்பர் என்ற சங்கையே உண்டாகாத 
रङ्ग मुख्ये - திருவரங்கம் முதலிய 
क्वचन - எதாவது இடத்தில்
परस्पर - ஒருவருக்கொருவர் 
हितैषिणां - நன்மையையே விரும்புமவர்களின் 
परिसरेषु - அருகில்
मां - அடியேனை 
वर्तय - வாழச் செய்தருள வேண்டும்.

தேசிகனின் விருப்பம்

திருவரங்கப்பெருமானே ! எனது யௌவநப் பருவத்தை ஸ்ரீபாஷ்யம் முதலிய ஸ்ரீ பாஷ்யகார ஸுக்திகளின் ரஸத்தை ஆழ்ந்து அநுபவித்தே கழித்தேன். இப்பொழுது முதுமைப் பருவம் வந்து தலைமுழுதும் நரைத்து விட்டது. இனி இவ்வுலகில் அடியேன் வாழுமளவும் அடியேனுக்கு ஏற்ற ஒன்றை அருளுமாறு வேண்டுகின்றேன். அதாவது - திருவரங்கத்திலோ வேறு திவ்ய தேசத்திலோ உன்னை அநுபவிக்காது செய்யும் எதிரிகள் இல்லாத இடத்திலே ஒருவருக்கொருவர் அஸூயை கொள்ளாது நன்மையையே கோரும் ஸாத்விகர்களின் நடுவே அடியேன் வாழும்படி செய்தருளவேண்டும்.

 

Desikan’s Wish

O Lord Ranganatha! I spent my youth deeply enjoying the meanings and beauty of the teachings of the Sri Bhashya and other works of Bhagavad Ramanuja. Now old age has come, and my hair has turned grey. For the rest of my life, I pray that You grant me something suitable. That is—please bless me to live either in Srirangam or in any other Divya Desam, in a place free from enemies who disturb my experience of You, and among sattvic people who have no jealousy toward each other and seek only the good.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸