श्री:
श्रीमते निगमान्त महादेशिकाय नम:
4- அச்சமுள்ள தேவர்கள் & அச்சமிலா அடியார்கள் - Fearful Devas & Fearless Devotees
அச்சமுள்ள தேவர்கள் & அச்சமிலா அடியார்கள்
எவ்வகைக் குற்றமுமற்ற திருவரங்கப் பெருமானே! உலகம் முழுதும் உயரத்தில் ஓங்கிய வச்சிராயுதம் போன்றவனான உன் கட்டளையை மீறினால் என்ன தீங்கு வருமோ என்று மிகுதியான அச்சத்தால் தன் கடமையைச் செய்கின்றது. வாயு-ஸூர்யன்- அக்நி-இந்திரன்-யமன் முதலிய தேவர்களும் உன் கட்டளையை மீறுவதற்கு மிக்க அச்சத்தால் தத்தம் காரியத்தைச் செய்து வருகின்றனர். இவ்விஷயங்கள் உபநிஷத்தில் கூறப்பட்டுள்ளன. இவ்வாறு தேவர்களின் அதிகார நிகழ்ச்சிக்கும் காரணமாகக் கூறப்பட்டுள்ள அச்சத்தை, உன்னை இவ்வுலகில் பக்தியுடன் துதிப்பவன் கடந்துவிடுகின்றான். அவனை ப்ரபத்தியில் மூட்டி மோக்ஷத்தை அளித்துவிடுகின்றாய். பிறகு அவனுக்கு அச்சம் ஏது?
Fearful Devas & Fearless
Devotees
O Lord Ranganatha, who is completely free from any fault! The whole world performs its duties out of great fear of disobeying Your command, which stands tall and powerful like the thunderbolt weapon. Vayu, Surya, Agni, Indra, Yama, and the other devas also carry out their respective duties because they fear going against Your order. These truths are declared in the Upanishads. Such fear is said to be the reason behind the proper functioning of the devas in their roles. But the one who praises You with devotion in this world rises above that fear. You kindle in him the spirit of surrender (prapatti) and grant him moksha. After that, what fear can remain for him?