Monday, March 16, 2026

Abheethi Stavam - 03- குறையுள்ள அடியேனை அருளால் ஏற்க வேண்டுதல் - A Humble Plea to Accept an Imperfect Devotee

  श्री:

जय गरुड सुपर्ण 
श्रीमते निगमान्त महादेशिकाय नम: 
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

 4.श्री अभीतिस्तवः Abheethi Stavam ஸ்ரீ அபீதிஸ்தவம்

3- குறையுள்ள அடியேனை அருளால் ஏற்க வேண்டுதல் - A Humble Plea to Accept an Imperfect Devotee

यदद्य मित बुद्धिना बहुळ मोह भाजा मया 
गुण ग्रथित काय वाङ्मनस वृत्ति वैचित्र्यतः । 
अतर्कित हिताहित क्रम विशेषमारभ्यते 
तदप्युचितमर्चनं परिगृहाण रङ्गेश्वर ॥ 3 ॥

पदच्छेदः
यत् अद्य मित बुद्धिना बहुळ मोह भाजा मया 
गुण ग्रथित काय वाक् मनस वृत्ति वैचित्र्यतः । 
अतर्कित हित अहित क्रम विशेषम् आरभ्यते 
तत् अपि  उचितम् अर्चनं परिगृहाण रङ्गेश्वर ॥ 3 ॥

रङ्गेश्वर - அரங்க நகரப்பனே ! 
मित बुद्धिना - சிற்றறிவினனாய் 
बहुळ मोह भाजा - மிகுதியான அஞ்ஞானத்தைப் பெற்ற 
मया - அடியேனால்
गुण ग्रथित - முக்குணங்களால் கட்டப்பெற்ற
काय वाक् मनस - சரீரம் வாக்கு மனம் ஆகியவற்றின் 
वृत्ति वैचित्र्यतः - செயல் பலவகையாயிருப்பதால் 
यत् - எந்தச் செயல் 
अद्य - இப்பொழுது 
अतर्कित हित अहित क्रम विशेषम् - நன்மை தீமைகளின் விசேஷ முறையைச் சிந்திக்காமல் 
आरभ्यते - தொடங்கப்படுகின்றதோ  
तत् अपि  - அதையும் 
उचितम् - ஏற்ற 
अर्चनं - ஆராதநமாக 
परिगृहाण – ஏற்றுக்கொள்

குறையுள்ள அடியேனை அருளால் ஏற்க வேண்டுதல்

திருவரங்கப் பெருமானே! அடியேன் மிகக் குறைந்த அறிவுடையவன்.மதிமயக்கம் மிகுதியாய் அடியேனைச் சூழ்ந்துள்ளது. என் மனம்-வாக்கு-உடல் என்னும் முக்கருவிகளும் ஸத்துவம்- ரஜஸ்-தமஸ் என்னும் முக்குணங்களுக்குக் கட்டுப்பட்டுப் பல்வேறு செயல்களைச் செய்ய முற்படுகின்றன. அத்தகைய செயல்களுள் இப்பொழுது அடியேன் உன்னைத் துதிக்க முற்பட்டதும் ஒன்றாகும். "உன்னைப் போற்றுவதே சிறந்த செயல், மற்ற செயல்கள் தீயன" என்ற தெளிவு பெற்று இந்தத் துதியை அடியேன் இப்பொழுது தொடங்கவுமில்லை. ஆயினும் உனது இயற்கைக் கருணையால் இச்செயலையும் உனக்கு ஏற்ற திருவாராதநமாகத் திருவுள்ளத்தில் ஏற்றுக்கொண்டருளவேண்டும். 

A Humble plea to accept an imperfect devotee

    O Lord Ranganatha! I am a person of very little knowledge. Great confusion clouds my mind. My mind, speech, and body—the three instruments—are controlled by the three qualities: sattva, rajas, and tamas, and they push me to perform many different actions. Among those actions, my attempt to praise You is one. I have not begun this hymn with the clear understanding that praising You alone is the highest act and that all other actions are lesser. Even so, by Your natural compassion, please accept this effort also as a worthy act of worship and receive it in Your divine heart.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸