Sunday, March 29, 2026

Abheethi Stavam - 16 - பாபம் விலக வழி வேண்டுதல் - Seeking a Way to Remove Sin

   श्री:

जय गरुड सुपर्ण 
श्रीमते निगमान्त महादेशिकाय नम: 
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

 4.श्री अभीतिस्तवः Abheethi Stavam ஸ்ரீ அபீதிஸ்தவம்

16 - பாபம் விலக வழி வேண்டுதல் - Seeking a Way to Remove Sin

अनुक्षण समुत्थिते दुरित वारिधौ दुस्तरे 
यदि क्वचन निष्कृतिर्भवति साऽपि दोषाविला । 
तदित्थमगतौ मयि प्रतिविधानमाधीयतां 
स्वबुद्धि परिकल्पितं किमपि रङ्गधुर्य त्वया ॥ 16 ॥

पदच्छेदः
अनुक्षण समुत्थिते दुरित वारिधौ दुस्तरे 
यदि क्वचन निष्कृति: भवति सा अपि दोष आविला । 
तत् इत्थम् अगतौ मयि प्रतिविधानम् आधीयतां 
स्व बुद्धि परिकल्पितं किमपि रङ्गधुर्य त्वया ॥ 16 ॥

रङ्गधुर्य — திருவரங்கனே ! 
अनुक्षण - ஒவ்வொரு கணப்பொழுதிலும் 
समुत्थिते - பொங்கியெழுகின்ற 
दुस्तरे  - கடக்கமுடியாத 
दुरित वारिधौ  - பாபக்கடல் விஷயத்தில்
क्वचन - எங்காவது
निष्कृति: - பிராயச்சித்தம் 
भवति यदि - நடக்குமேயாகில் 
सा अपि  - அதுவும் 
दोष आविला -  குற்றங்களால் கெடுகின்றது. 
तत् - ஆதலால் 
इत्थम् - இவ்வாறு 
अगतौ - கதியற்றவனான 
मयि  - என் விஷயத்தில் 
स्व बुद्धि — உன் ஸங்கல்பத்தால் 
परिकल्पितं - ஏற்படுத்தப்பட்ட 
किमपि  - ஏதேனுமொரு 
प्रतिविधानम् - பிராயச்சித்தம் 
त्वया- உன்னால் 
आधीयतां — விதிக்கப்பட வேண்டும்.

பாபம் விலக வழி வேண்டுதல்

திருவரங்கநகரத் தலைவனே! இந்த ஸம்ஸார மண்டலத்தில் மனிதன் செய்யும் பாபங்கள் க்ஷணந்தோறும் கடல் போல் வளர்ந்து கொண்டேயிருக்கின்றன. அவற்றை எளிதில் ஒழிக்க முடியாது. அந்தப் பாபங்களைப் போக்கச் சாஸ்த்ரங்களில் பிராயச்சித்தம் விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதைச் செய்வதில் ஏதாவது குற்றம் நேர்ந்து அந்தப் பிராயச்சித்தமும் கெட்டு விடுகின்றது. நேரிய முறையில் அதைச் செய்துமுடிக்க மனிதனுக்குச் சக்தியுமில்லை. ஆகவே அடியேனும் அத்தகைய பாபங்களைச் செய்தவனாய் உன்னையன்றி வேறு கதியற்றவனாயிருக்கின்றேன். என் பாபங்கள் கழிவதற்கு உன் ஸங்கல்பத்தால் எனக்கு உரிய ஏதாவது ஒரு வழியை நீ கண்டு எனக்குக் காட்டியருள வேண்டும். 

Seeking a Way to Remove Sin

O Lord of Srirangam! In this samsara, the sins committed by a person keep growing every moment like the ocean. They are not easy to remove. The shastras have prescribed acts of atonement (prayaschitta) to remove these sins. But while performing them, mistakes may occur, and the atonement itself may become ineffective. Also, a person may not have the strength to perform them properly. Therefore, I too, having committed such sins, have no refuge other than You. For my sins to be removed, please, by Your divine will, show me a proper way and guide me.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸