श्री:
श्रीमते निगमान्त महादेशिकाय नम:
15
- தவறாத
பாதுகாப்பு வாக்கு - The Unfailing Promise of Protection
தவறாத பாதுகாப்பு வாக்கு
திருவரங்கநகரப்பனே ! நீ முன்பு இராமாவதாரத்தில் ஒரு முறை ஒருவன் உன்னைச் சரணமடைந்தால் அவனுக்கு அபயமளிப்பதே உனக்குச் சாசுவதமான விரதமென்றும் நீ ஒரு முறை பேசிய பேச்சுக்கு மாறிப் பேசமாட்டாயென்றும் நீ உன் வாயினாலேயே கூறியுள்ளாயென்பதை உலகமறியும். நீ சொல்லிய காரியத்தைச் செய்தே தீருவாய் என்பதை உன்னிடம் பயன் பெற்ற விபீஷணனென்னும் அரக்கன், சுக்ரீவன் முதலியோர் அறிவர். இங்ஙனம் இருக்க, கைம்முதலில்லாதவர்களுள் முதன்மை பெற்றவனாய் உன் கருணைக்கு ஏற்ற பாத்திரமாயுள்ள அடியேன் விஷயத்தில் மட்டும் உன் வ்ரதம் எப்படிப் பொய்யாகலாம்? அவச்யம் நீ என்னைக் காத்தருளவேண்டும்.
The Unfailing Promise of
Protection
O Lord of
Srirangam! In Your Rama avatar, You declared that if a person surrenders to You
even once, it is Your eternal vow to grant him fearlessness. You also said that
You will never go back on Your word. The whole world knows this. Those who have
received Your grace, like Vibhishana and Sugriva, know that You always fulfill
what You promise. If that is so, how can Your vow fail only in my case, when I
am the most helpless and truly fit to receive Your compassion? Therefore, You
must surely protect me.