Friday, March 27, 2026

Abheethi Stavam - 14 - பெருமாளின் அருளால் அச்சமின்மை வேண்டுதல் - A Prayer for Fearlessness through the Perumal’s Grace

     श्री:

जय गरुड सुपर्ण 
श्रीमते निगमान्त महादेशिकाय नम: 
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

 4.श्री अभीतिस्तवः Abheethi Stavam ஸ்ரீ அபீதிஸ்தவம்

14 - பெருமாளின் அருளால் அச்சமின்மை வேண்டுதல் - A Prayer for Fearlessness through the Perumal’s Grace

भवन्ति मुख भेदतो भय निदानमेव प्रभो 
शुभाशुभ विकल्पिता जगति देश कालादयः । 
इति प्रचुरसाध्वसे मयि दयिष्यसे त्वं न चेत् 
क इत्थमनुकम्पिता त्वदनुकम्पनीयश्च कः ॥ 14 ॥

पदच्छेदः
भवन्ति मुख भेदत: भय निदानम् एव प्रभो 
शुभ अशुभ विकल्पिता: जगति देश काल आदयः । 
इति प्रचुर साध्वसे मयि दयिष्यसे त्वं न चेत् 
क इत्थम् अनुकम्पिता त्वत् अनुकम्पनीय: च कः ॥ 14 ॥

प्रभो  - பிரபுவே! 
जगति - இவ்வுலகில் 
शुभ अशुभ -  நல்லனவென்றும் தீயனவென்றும் 
विकल्पिता: - பிரிக்கப்பட்ட 
देश काल आदयः  - தேசம் காலம் முதலியனவெல்லாம் 
मुख भेदत:  - வெவ்வேறு வகையில் 
भय निदानम् एव - பயத்தைத் தருவனவாகவே 
भवन्ति - ஆகின்றன 
इति  - என்று 
प्रचुर साध्वसे - மிக்க அச்சம் கொண்ட 
मयि - என் மீது 
त्वं - நீ 
न दयिष्यसे चेत् - இரக்கம் கொள்ளாயேயாகில் 
इत्थम् -  இவ்வாறு 
 अनुकम्पिता - அருள் புரியுமவன் 
 कः - வேறு யாவன் உளன் ? 
त्वत् अनुकम्पनीय: च - உன் இரக்கத்தைப் பெறத் தகுதியுடையவனும் 
 कः - வேறு எவன் உளன் ? 

பெருமாளின் அருளால் அச்சமின்மை வேண்டுதல்

திருவரங்கநகரப்பனே! இவ்வுலகில் ஸ்வர்க்கம் முதலிய லோகத்தை நல்ல ஸ்தாநமென்றும் நரகம் முதலியவற்றைத் தீய ஸ்தாநங்களென்றும் பிரித்துள்ளனர். இவ்வாறே கிருதயுகம் முதலியவற்றை நல்ல காலமென்றும் கலியுகம் முதலியவற்றைத் தீய காலமென்றும் கூறுவர். உண்மையை ஆராய்ந்தால் இவையனைத்துமே வெவ்வேறு வழிகளில் தீமையையே செய்து அச்சத்தை விளைவிப்பன. இதை நினைந்து அடியேன் மிக்க அச்சங்கொண்டுள்ளேன். அடியேன் மீது கருணை கொண்டு அபயமளித்தருளவேண்டும். இவ்வாறு நீ செய்யாவிடின் அடியேன் மீது கருணை புரிபவன் வேறு எவன் உளன்? உனது திருவருளைப் பெறத் தகுதியுடையவன்தான் துன்பப்படும் அடியேனையன்றி வேறு எவன் உளன்? ஆதலின் உன் கருணையால் அடியேனைக் காத்தருளவேண்டும்.

A Prayer for Fearlessness through the Perumal’s Grace

O Lord of Srirangam! In this world, people say that places like heaven are good and places like hell are bad. In the same way, they say that times like Krita Yuga are good and Kali Yuga is bad. But when we think deeply, all these can bring fear in different ways. Thinking about this, I am filled with great fear. Please show compassion to me and grant me fearlessness. If You do not do this, who else is there to show mercy to me? Who else is more deserving of Your grace than this suffering servant? Therefore, out of Your compassion, please protect me.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸