Thursday, March 26, 2026

Abheethi Stavam - 13 - ஸம்ஸாரத்தின் அச்சமூட்டும் இயல்பு - The Fearful Nature of Samsara

    श्री:

जय गरुड सुपर्ण 
श्रीमते निगमान्त महादेशिकाय नम: 
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

 4.श्री अभीतिस्तवः Abheethi Stavam ஸ்ரீ அபீதிஸ்தவம்

13 - ஸம்ஸாரத்தின் அச்சமூட்டும் இயல்பு - The Fearful Nature of Samsara
न वक्तुमपि शक्यते नरक गर्भ वासादिकं 
वपुश्च बहु धातुकं निपुण चिन्तने तादृशम् । 
त्रिविष्टप मुखं तथा तव पदस्य देदीपतः 
किमत्र न भयास्पदं भवति रङ्ग पृथ्वीपते ॥ 13 ॥

पदच्छेदः
न वक्तुम् अपि शक्यते नरक गर्भ वास आदिकं 
वपु: च बहु धातुकं निपुण चिन्तने तादृशम् । 
त्रिविष्टप मुखं तथा तव पदस्य देदीपतः 
किम् अत्र न भय आस्पदं भवति रङ्ग पृथ्वी पते ॥ 13 ॥

रङ्ग पृथ्वी पते - திருவரங்கத்தரசே !  
नरक गर्भ वास आदिकं  - நரக வாஸம் கர்ப்ப வாஸம் முதலியன 
वक्तुम् अपि - வாயினால் கூறக்கூட
न  शक्यते - முடியவில்லை. 
निपुण चिन्तने  - ஊன்றிச் சிந்தித்தால் 
बहु धातुकं - பல தாதுக்கள் நிறைந்த 
वपु: च - சரீரமும் 
तादृशम् - அவ்வாறே உள்ளது. 
देदीपतः  — மேம்பட்டு விளங்குகின்ற 
तव पदस्य - உன் ஸ்தாநமாகிய ஸ்ரீவைகுண்டத்தை நினைக்கும் போது 
त्रिविष्टप मुखं - சொர்க்க லோகம் முதலியனவும் 
तथा - அவ்வாறே உள்ளன. 
अत्र - இவற்றில் 
किम् -  எது 
भय आस्पदं — அச்சத்தைத் தருவதாக 
न भवति — இருக்கவில்லை ? 

ஸம்ஸாரத்தின் அச்சமூட்டும் இயல்பு
    திருவரங்கப் பெருமானே ! மனிதன் தான் செய்த கருமத்திற்கு ஏற்றவாறு இறப்பதும் பிறப்பதுமாயுள்ளான். இறந்தால் நரகவாஸமும் பிறக்கும்போது கர்ப்பவாஸமும் அடைய நேருவதைப்பற்றி வாயினால் பேசக்கூடக் கூச்சம் ஏற்படுகின்றது. ஆய்ந்து சிந்தித்தால் மாம்ஸம் - இரத்தம் கொழுப்பு - எலும்பு முதலியவற்றால் ஆகிய இச்சரீரத்தைப் பற்றிப் பேசவும் கூச நேரும். எப்பொழுதும் சோதிவடிவமாய் விளங்கும் ஸ்ரீவைகுண்டமென்னும் உன் ஸ்தாநத்துடன் ஒப்பிட்டு நோக்குவதானால் ஸ்வர்க்கலோகம் முதலிய ஸ்தாநங்களும் நரகம் போன்றவையாகி வாயினால் பேசவும் தகுதியற்றனவாகும். இவ்வாறு இருக்க, இந்த ஸம்ஸார மண்டலத்தில் உள்ள எந்த ஸ்தாநம்தான் அச்சத்தைத் தரவில்லை? எல்லாம் ஸம்ஸார பயத்தையே பெருக்கவல்லன. 

The Fearful Nature of Samsara

            O Lord Ranganatha! A person is born and dies according to his own karma. After death, he may have to experience life in hell, and before birth, he must stay in the womb—both of which are so painful that one feels ashamed even to speak about them. When we think deeply, even this body, made of flesh, blood, fat, and bones, feels unworthy to speak about. When compared to Your divine abode, Sri Vaikuntha, which always shines in pure radiance, even places like heaven seem low and unfit to be praised, almost like hell. In such a situation, which place in this samsara can truly be free from fear? Everywhere only increases the fear of samsara.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸