श्री:
जय गरुड सुपर्ण
श्रीमते निगमान्त महादेशिकाय नम:
श्रीमते निगमान्त महादेशिकाय नम:
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
4.श्री अभीतिस्तवः Abheethi Stavam ஸ்ரீ அபீதிஸ்தவம்
12 - உலக பந்தமும் பரமானந்தமும் - Worldly Ties vs Divine Bliss
लघिष्ठ सुख सङ्गदैः स्वकृत कर्मनिर्वर्तितैः
कळत्र सुत सोदरानुचर बन्धु संबन्धिभिः ।
धन प्रभृतिकैरपि प्रचुर भीति भेदोत्तरैः
न बिभ्रति धृतिं प्रभो त्वदनुभूति भोगार्थिनः ॥ 12 ॥
पदच्छेदः
लघिष्ठ सुख सङ्गदैः स्व कृत कर्म निर्वर्तितैः
कळत्र सुत सोदर अनुचर बन्धु संबन्धिभिः ।
धन प्रभृतिकै: अपि प्रचुर भीति भेद उत्तरैः
न बिभ्रति धृतिं प्रभो त्वत् अनुभूति भोग अर्थिनः ॥ 12 ॥
प्रभो - பிரபுவே!
त्वत् अनुभूति - உன்னை இடைவிடாது அநுபவித்தலென்னும்
भोग अर्थिनः - மோக்ஷாநந்தத்தை விரும்புமவர்கள்
लघिष्ठ - மிக அற்பமான
सुख सङ्गदैः - ஸுகத்தைத் தருவனவும்
स्व कृत - தாங்கள் செய்த
कर्म निर्वर्तितैः - கர்மத்தால் வந்தனவும்
प्रचुर भीति भेद — மிகுதியான பல்வகை அச்சத்தையே
उत्तरैः - விளைவிப்பனவுமான
कळत्र सुत — மனைவியர் புதல்வர்
सोदर अनुचर - ஸஹோதரர் பணியாளர்
बन्धु संबन्धिभिः - உறவினர் மற்றுமுள்ள சுற்றத்தார் ஆகியவர்களாலும்
धन प्रभृतिकै: अपि - செல்வம் முதலியவற்றாலும்
धृतिं - மனமகிழ்ச்சியை
न बिभ्रति - பெறமாட்டார்கள்
உலக பந்தமும் பரமானந்தமும்
திருவரங்கநகரப்பனே ! இவ்வுலகில் மானிடர் தாங்கள் முன் செய்த கர்மங்களுக்கு ஏற்ப மனைவியர்-புதல்வர்-ஸஹோதரர்-பணியாளர்-உறவினர் · மற்றுமுள்ள சுற்றத்தார் இவர்களை அடைகின்றனர். இவ்வாறே மானிடர் தங்கள் முந்திய வினைகளுக்கேற்ற செல்வம் முதலிய சிறப்புக்களையும் பெறுகின்றனர். இந்தச் சுற்றத்தார்களாலும் செல்வங்களாலும் வரும் இன்பம் மிக அற்பமாய் நிலையற்றதாயுள்ளது. மேலும் பல உறவினர்களையும் சுற்றத்தாரையும் படைத்தவர்க்கும் செல்வத்தை மிகுதியாகப் பெற்றவர்க்கும் பற்பல துன்பங்களும் பகைவர்களும் ஏற்படுவது இயற்கையாதலால் எப்பொழுதும் மிகுதியான அச்சம் தொடர்ந்துகொண்டேயிருக்கும். நல்ல அறிவுடையர் 'உறவினர்களாலும் செல்வங்களாலும் நிலையான இன்பமில்லை " என உணர்ந்து இவற்றில் சிறிதும் மனமகிழ்ச்சியோ விருப்பமோ கொள்வதில்லை. அவர்கள் பரம புருஷனான உன்னை இடைவிடாது அநுபவித்துக் கொண்டிருப்பதிலேயே ஆர்வம் கொண்டிருப்பார்கள்.
Worldly Ties vs Divine Bliss
O Lord of Srirangam! In this world, people gain wives, children, brothers, servants, relatives, and other relationships based on their past karma. In the same way, they also receive wealth and other advantages according to their previous actions. But the happiness that comes from these relationships and riches is very small and does not last. In fact, those who have many relatives and great wealth often face many troubles and enemies, and so they live with constant fear. Wise people understand that lasting happiness cannot come from relationships or wealth, and so they do not develop attachment or joy in them. Instead, they find true interest only in continuously experiencing and enjoying You, the Supreme Lord.
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸