श्री:
जय गरुड सुपर्ण
श्रीमते निगमान्त महादेशिकाय नम:
श्रीमते निगमान्त महादेशिकाय नम:
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
4.श्री अभीतिस्तवः Abheethi Stavam ஸ்ரீ அபீதிஸ்தவம்
17- உலக சுகத்தில் சிக்கியவன் ப்ரார்த்தனை - A Prayer of One Trapped in Worldly Pleasures
विषाद बहुळादहं विषय वर्गतो दुर्जयात्
बिभेमि वृजिनोत्तर: त्वदनुभूति विच्छेदतः ।
मया नियत नाथवान् अयमिति त्वमर्थापयन्
दयाधन जगत्पते दयित रङ्ग संरक्ष माम् ॥ 17 ॥
पदच्छेदः
विषाद बहुळात् अहं विषय वर्गत: दुर्जयात्
बिभेमि वृजिन उत्तर: त्वत् अनुभूति विच्छेदतः ।
मया नियत नाथवान् अयम् इति त्वम् अर्थापयन्
दया धन जगत्पते दयित रङ्ग संरक्ष माम् ॥ 17 ॥
दया धन - கருணைச் செல்வமுடையவனே !
जगत्पते - எல்லாவுலகுக்கும் தலைவனே!
दयित रङ्ग - திருவரங்கத்தை விரும்புமவனே !
वृजिन उत्तर: - பாபங்கள் நிறைந்த
अहं - நான்
विषाद बहुळात् - துன்பம் மிகுத்ததும்
दुर्जयात् - வெல்ல முடியாததுமான
विषय वर्गत: - உலக சுகத் தொகுதியினால்
त्वत् अनुभूति विच्छेदतः - உன் அநுபவத்திற்குத் தடை வருமேயென்று
बिभेमि - அஞ்சுகின்றேன்.
अयम् - இவன்
मया - என்னால்
नियत नाथवान् - எப்பொழுதும் தலைவனையுடையன்
इति - என்ற சொல்லை
त्वम् - நீ
अर्थापयन् - பொருளுடையதாக்கிக் கொண்டு
माम् - என்னை
संरक्ष - நன்கு காத்தருள்.
உலக சுகத்தில் சிக்கியவன் ப்ரார்த்தனை
திருவரங்கநகரை விரும்பி வாழும் அரங்கனே! அடியேன் அளவற்ற பாபங்களைச் செய்துகொண்டேயிருப்பவன். இவ்வுலகச் சுகங்களோ துன்பம் நிறைந்தவை. அவற்றை விட்டொழிப்பதும் எளிதன்று. அவற்றுள் அடியேனும் அகப்பட்டு நிற்கின்றேன். இதனால் உன்னை நான் அநுபவிப்பதற்குத் தடை வருவதைக் கண்டு அஞ்சுகின்றேன். நீ ஸர்வேசுவரன்; கருணையையே பெருஞ் செல்வமாகக் கொண்டவன். நீதான் என் விஷயத்தில் கருணைகொண்டு என்னைக் காத்தருளவேண்டும். நீ செய்வதை யாரும் ஆக்ஷேபிக்க முடியாது. "இவன் எப்பொழுதும் என்னையே நாதனாகக் கொண்டவனாதலின் இவனைக் காக்கும் கடமை என்னுடையதாகிவிட்டது" என்ற உன் கருத்தை வெளிப்படையாக்கிக்கொள்ளலாம்.
A Prayer of One Trapped in Worldly Pleasures
O Lord Ranganatha, who lovingly resides in Srirangam! I am one who continues to commit countless sins. The pleasures of this world are filled with suffering, yet they are not easy to give up. I too am caught in them. Because of this, I fear that I am being prevented from experiencing You. You are the Supreme Lord, whose greatest wealth is compassion. Therefore, You alone must show mercy and protect me. No one can question Your actions. You may openly declare, “This person has always accepted Me as his Lord, and so it is My duty to protect him.”
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸