श्री:
जय गरुड सुपर्ण
श्रीमते निगमान्त महादेशिकाय नम:
श्रीमते निगमान्त महादेशिकाय नम:
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
4.श्री अभीतिस्तवः Abheethi Stavam ஸ்ரீ அபீதிஸ்தவம்
19 - சரணாகதியால் காக்கப்படும் பக்தர்கள் - Devotees Protected by Surrender
कयाधुसुत वायस द्विरद पुङ्गव द्रौपदी-
विभीषण भुजङ्गम व्रजगणाम्बरीषादयः ।
भवत्पद समाश्रिता भय विमुक्तिमापुर्यथा
लभेमहि तथा वयं सपदि रङ्गनाथ त्वया ॥ 19 ॥
पदच्छेदः
कयाधु सुत वायस द्विरद पुङ्गव द्रौपदी
विभीषण भुजङ्गम व्रज गण अम्बरीष आदयः ।
भवत् पद समाश्रिता: भय विमुक्तिम् आपु: यथा
लभेमहि तथा वयं सपदि रङ्गनाथ त्वया ॥ 19 ॥
रङ्गनाथ - திருவரங்கத் தலைவனே !
कयाधु सुत - கயாதுவின் புத்திரனான ப்ரஹ்லாதன்
वायस - காகன்
द्विरद पुङ्गव - கஜேந்திரன்
द्रौपदी - த்ரௌபதி
विभीषण - விபீஷணன்
भुजङ्गम - காளியன்
व्रज गण - இடையர் குழு
अम्बरीष - அம்பரீஷன்
आदयः - முதலியவர்கள்
भवत् पद - உன் திருவடியை
समाश्रिता: - சரணமடைந்தவராய்
यथा - எவ்வாறு
भय विमुक्तिम् - பயத்தினின்று விடுதலையை
आपु: - பெற்றார்களோ
तथा - அவ்வாறே
वयं - நாங்களும்
सपदि - உடனே
त्वया - உன்னால் (பயம் நீங்குதலை)
लभेमहि - பெறக்கடவோம்.
சரணாகதியால் காக்கப்படும் பக்தர்கள்
திருவரங்கப்பெருமானே! உன் திருவடிகளைச் சர மடைந்ததால் பலர் பலவகையில் தத்தம் அச்சம் நீங்கப் பெற்றனர். ப்ரஹ்லாதாழ்வானுக்குத் தந்தையான ஹிரண்ய கசிபுவால் வந்த அச்சம் நீங்கியது. பிராட்டியிடம் அபராதியான காகம் இராமனது ப்ரஹ்மாஸ்த்ரத்தால் வந்த பயம் நீங்கப் பெற்றது. கஜேந்திரன் முதலை வாயினின்று விடுபட்டான். த்ரௌபதிக்குத் துச்சாஸநன் முதலியவர்களால் வந்த துன்பம் நீங்கியது. விபீஷணனுக்கு ராவணனது துன்பம் ஒழிந்தது. உன்னுடைய திருவடியால் துகைக்கப்பட்ட காளியனுக்கு அத் துன்பம் நீங்கியது. கோவலர் கூட்டம் பல துன்பத்தினின்று விடுபட்டது; அம்பரீஷன் துர்வாஸ முனிவர் சாபத்துக்குத் தப்பினான். இன்னும் பலர் உன்னைச் சரணமடைந்து, அச்சம் நீங்கி நன்மை பெற்றனர். அவ்வாறே நாங்களும் உன்னைச் சரணமடைந்தவுடன் அச்சமின்றி வாழ்வோம்.
Devotees Protected by Surrender
O Lord Ranganatha! Many people have had their fears removed in different ways by surrendering at Your sacred feet. Prahlada was freed from the fear caused by his father Hiranyakashipu. The crow that offended Sita was saved from the fear of Rama’s Brahmastra. Gajendra was rescued from the mouth of the crocodile. Draupadi was saved from the suffering caused by Dushasana and others. Vibhishana was freed from the troubles caused by Ravana. Kaliya was relieved of his suffering when You subdued him. The cowherds were saved from many dangers. Ambarisha escaped the curse of Sage Durvasa. Many others have surrendered to You and were freed from fear and gained good fortune. In the same way, we too, by surrendering to You, will live without fear.
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸