Thursday, April 2, 2026

Abheethi Stavam - 20 - பாதுகாப்பும் செழிப்பும் வேண்டுதல் - Prayer for protection & Prosperity

     श्री:

जय गरुड सुपर्ण 
श्रीमते निगमान्त महादेशिकाय नम: 
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

 4.श्री अभीतिस्तवः Abheethi Stavam ஸ்ரீ அபீதிஸ்தவம்

20- பாதுகாப்பும் செழிப்பும் வேண்டுதல் - Prayer for protection & Prosperity

भयं शमय रङ्गधाम्न्यनितराभिलाष स्पृशां 
श्रियं बहुळय प्रभो श्रित विपक्षमुन्मूलय । 
स्वयं समुदितं वपुस्तव निशामयन्तः सदा 
वयं त्रिदश निर्वृतिं भुवि मुकुन्द विन्देमहि ॥ 20 ॥

पदच्छेदः
भयं शमय रङ्गधाम्नि अनितर अभिलाष स्पृशां 
श्रियं बहुळय प्रभो श्रित विपक्षम् उन्मूलय । 
स्वयं समुदितं वपु: तव निशामयन्तः सदा 
वयं त्रिदश निर्वृतिं भुवि मुकुन्द विन्देमहि ॥ 20 ॥

प्रभो - பிரபுவே 
मुकुन्द - முகுந்தனே!
रङ्गधाम्नि - திருவரங்க நகரில் 
अनितर अभिलाष स्पृशां - வேறொன்றையும் விரும்பாதவற்கு 
भयं - அச்சத்தை 
शमय - ஒழித்தருள 
श्रियं - வைணவச் செல்வத்தை 
बहुळय - வளரச் செய் 
श्रित विपक्षम् - அடியார்களுக்கு எதிரியை 
उन्मूलय - வேரோடு களைந்தருள் 
वयं - அடியோங்கள் 
स्वयं समुदितं - தானாகத் தோன்றிய 
तव वपु: - உன் திருமேனியை 
सदा - எப்பொழுதும் 
निशामयन्तः - ஸேவித்துக் கொண்டு 
त्रिदश निर्वृतिं - நித்ய ஸூரிகள் பெரும் இன்பத்தை 
भुवि - இப்புவியிலேயே  
विन्देमहि – பெறுவோம்

பாதுகாப்பும் செழிப்பும் வேண்டுதல்
திருவரங்க நகரப்பனே ! இந்நகரில் உன்னையன்றி வேறொன்றிலும் மனம் சிறிதும் நாடாத பரமைகாந்திகள் பலர் உளர் ; அவர்களுக்கு உன்னை அநுபவிப்பதற்குத் தடையாக இப்பொழுது அச்சம் உண்டாகியுள்ளது. அந்தப் பயத்தை நீ போக்கியருள். ஸ்ரீ வைஷ்ணவர்கள் நகரில் நிறைந்திருந்தால் அது ஓர் உயரிய செல்வமாகும். இச்செல்வத்தை வளரச் செய். பாகவதர்களுக்கு எதிரியாயுள்ள அனைத்தையும் வேரறுத்தருள். நீ இம்மையிலும் மறுமையிலும் வேண்டிய பலனை அளிப்பவன். நீ இவ்வாறு செய்தருளினால் நாங்கள் மன அமைதி பெறுவோம். இந்நகரில் தானே அவதரித்து 'ஸ்வயம் வ்யக்தம்' என வழங்கும் உன் அர்ச்சைத் திருமேனியை எப்பொழுதும் கண்ணாரக் கண்டு அநுபவிப்போம். அதனால் நித்யஸூரிகள் ஸ்ரீவைகுண்டத்தில் பெறும் ஆநந்தத்தை நாங்கள் இவ்வுலகிலேயே பெற்று இன்புறுவோம்.

Prayer for protection & Prosperity
O Lord of Srirangam! In this sacred city, there are many great devotees (Paramaikantis) whose minds do not seek anything other than You. Now, fear has arisen as an obstacle to their experience of You—please remove that fear. When Sri Vaishnavas fill a city, it is the greatest wealth; please help this wealth to grow. Remove all that stands against the Bhagavatas, root and all. You are the One who grants the desired fruits in this world and the next. If You bless us in this way, we will gain peace of mind. Here itself, we will joyfully behold and experience Your Svayam Vyakta archa form with our own eyes at all times. By that, we will enjoy, even in this world, the same bliss that the Nitya Suris experience in Sri Vaikuntha.


🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸