श्री:
श्रीमते निगमान्त महादेशिकाय नम:
பெருமாள் நினைவையும் மோக்ஷத்தையும் தரும் சரணாகதி
அரங்க நகரப்பனே! சேதநன் மோக்ஷம் பெறவேண்டுமானால் ப்ரபத்தியைச் செய்தேயாகவேண்டும். இதை எப்பொழுது செய்யவேண்டும்? மனம் நல்ல நிலையில் இருக்கும் பொழுது, சரீரம் உரிய வலிமையுடன் இருக்கும்பொழுது, கபம் வாதம் பித்தம் முதலியன தத்தமக்கு உள்ள முறையோடு இருக்கும்பொழுது ப்ரபத்தியை மோக்ஷம் பெறுதற்காக எம்பெருமானுடைய திருவடிகளில் செய்யவேண்டும். இதையும் ஒரு முறை தான் செய்யலாம். எல்லாப் பொருள்களுக்கும் அந்தர்யாமியாய்ப் பிறப்பற்றவனான உன்னை இவ்வாறு ஒரு முறை சரணமடைந்த சேதநனுக்கு நீ செய்யும் நன்மைகள் பல. அவன் செய்த ப்ரபத்தியை நீ நினைவில் வைத்திருந்து அவனுக்கு மரண காலம் வந்து எல்லா இந்திரியங்களும் ஒடுங்கிவிட்ட நிலையிலும் அவனுக்கு உன்னைப்பற்றிய நினைவை நீயாகவே உண்டாக்குகின்றாய்; உன்னைப்பற்றிய நினைவுடனேயே மரணமடைந்து மோக்ஷத்திற்குச் செல்லுமாறு செய்கின்றாய்.
Sarangathi
that brings divine Remembrance & moksham
O Lord of
Srirangam! For a Jeevathma to attain moksha, he must perform prapatti
(complete surrender). When should this be done? It should be done when the mind
is in a clear and steady state, when the body has proper strength, and when the
bodily elements such as kapha, vata, and pitta are in balance. At such a time,
one should perform prapatti at the sacred feet of the Lord for the sake of
attaining moksha. This act of surrender needs to be done only once. You, who
are the indwelling Lord (Antaryami) of all beings and are birthless, grant many
blessings to the jiva who surrenders to You in this manner. You remember the
prapatti he performed. Even at the time of death, when all his senses fail and
he is unable to think on his own, You Yourself create in him the remembrance of
You. With that remembrance of You, he leaves his body and attains moksha
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸