Friday, March 20, 2026

Abheethi Stavam - 07 - நாமஸங்கீர்தன மகிமை - The glory of NamaSankeerthanam

  श्री:

जय गरुड सुपर्ण 
श्रीमते निगमान्त महादेशिकाय नम: 
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

 4.श्री अभीतिस्तवः Abheethi Stavam ஸ்ரீ அபீதிஸ்தவம்

7 - நாமஸங்கீர்தன மகிமை - The glory of NamaSankeerthanam

रमा दयित रङ्गभू रमण कृष्ण विष्णो हरे 
त्रिविक्रम जनार्दन त्रियुग नाथ नारायण । 
इतीव शुभदानि यः पठति नामधेयानि ते 
न तस्य यम वश्यता नरक पात भीतिः कुतः ॥ 7 ॥

पदच्छेदः
रमा दयित रङ्गभू रमण कृष्ण विष्णो हरे 
त्रिविक्रम जनार्दन त्रियुग नाथ नारायण । 
इति इव शुभदानि यः पठति नामधेयानि ते 
न तस्य यम वश्यता नरक पात भीतिः कुतः ॥ 7 ॥

रमा दयित - பெரிய பிராட்டிக்கு நாயகனே ! 
रङ्गभू रमण - திருவரங்கத்தை விரும்பி வாழுமவனே ! 
कृष्ण - கண்ணபிரானே!
विष्णो - எங்கும் வியாபித்து நிற்பவனே! 
हरे - பாபங்களைப் போக்குமவனே! 
त्रिविक्रम - மூவடிகள் வைத்து அளந்தவனே! 
जनार्दन பிறவியை ஒழிக்குமவனே! 
त्रियुग - ஆறு குணங்களையுடையவனே! 
नाथ - தலைவனே! 
नारायण - நாராயணனே! 
इति इव - இவை போன்ற 
शुभदानि - நன்மையைத் தரவல்ல 
ते नामधेयानि - உன் திருநாமங்களை 
यः - எவன் 
पठति - படிக்கின்றானோ
तस्य - அவனுக்கு 
यम वश्यता - யமனுக்கு வசப்படும் தன்மை 
न - இல்லை 
नरक पात भीतिः - நரகத்தில் விழும் அச்சம்  
कुतः - ஏது?

நாமஸங்கீர்தன மகிமை

திருவரங்கனே! "பெரிய பிராட்டிக்கு நாயகனே! திருவரங்கத்தில் மகிழ்ச்சியோடு உறைபவனே! கண்ணபிரானே ! எல்லாப் பொருள்களிலும் வியாபித்திருப்பவனே! எல்லாருடைய பாபங்களையும் போக்குமவனே! த்ரிவிக்ரமாவதாரத்தில் மூவடிகளால் உலகை அளந்தவனே! பிறவியை ஒழிக்குமவனே ! ஜ்ஞாநம் - சக்தி - பலம் - ஐச்வர்யம் - வீர்யம்-தேஜஸ் என்னும் ஆறு குணங்களையுடையவனே! எல்லோர்க்கும் தலைவனே! நாராயணனே !" என்பன போன்ற பொருள் தருவனவாய், சேதநர்க்கு நன்மை பயப்பனவான உன் திருநாமங்களை உச்சரிப்பவன் யமன் கையில் அகப்படமாட்டான். இப்படியிருக்க நரகத்தில் விழவேண்டுமே என்ற அச்சத்திற்கு இடம் ஏது? 

The glory of NamaSankeerthanam

O Lord Ranganatha! O Consort of Periya Piratti! O One who joyfully resides in Srirangam! O Krishna! O One who pervades all things! O Remover of the sins of all beings! O One who measured the worlds with three strides in the Trivikrama incarnation! O One who ends the cycle of birth! O One who possesses the six divine qualities—knowledge, power, strength, wealth, valor, and radiance! O Supreme Lord of all! O Narayana! Whoever utters these sacred names of Yours—which carry such meanings and bring great benefit to all beings—will never fall into the hands of Yama. If this is so, where is the place for the fear of falling into hell?

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸