Saturday, March 21, 2026

Abheethi Stavam - 08 - தவத்திற்குத் தலம் - Place for Penance

   श्री:

जय गरुड सुपर्ण 
श्रीमते निगमान्त महादेशिकाय नम: 
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

 4.श्री अभीतिस्तवः Abheethi Stavam ஸ்ரீ அபீதிஸ்தவம்

8- தவத்திற்குத் தலம் - Place for Penance

कदाचिदपि रङ्गभू रसिक यत्र देशे वशी 
त्वदेक नियताशयस्त्रिदश वन्दितो वर्तते । 
तदक्षत तपोवनं तव च राजधानी स्थिरा 
सुखस्य सुखमास्पदं सुचरितस्य दुर्गं महत् ॥ 8 ॥

पदच्छेदः
कदाचित् अपि रङ्गभू रसिक यत्र देशे वशी 
त्वत् एक नियत आशय: त्रिदश वन्दित: वर्तते । 
तत् अक्षत तप: वनं तव च राजधानी स्थिरा 
सुखस्य सुखम् आस्पदं सुचरितस्य दुर्गं महत् ॥ 8 ॥

रङ्गभू रसिक - திருவரங்கத்தில் களிப்புடன் அமர்ந்தவனே! 
वशी - இந்திரியங்களை  வென்றவனாய் 
त्वत् एक - உன்னிடத்திலேயே 
 नियत आशय: - கருத்தை ஈடு படுத்தியவனாய் 
त्रिदश वन्दित: - தேவர்களும் வணங்கும் பெருமை பெற்றவனான பாகவதன் 
यत्र देशे - எந்த இடத்தில் 
कदाचित् अपि - ஒரு பொழுதாவது 
वर्तते - வசிக்கின்றானோ 
तत् - அந்த இடம் 
अक्षत तप: वनं - இடையூறின்றித் தவம் புரிய ஏற்ற இடமாகும். 
तव - உன்னுடைய 
स्थिरा - உறுதியான 
राजधानी च - தலைநகராகவும் ஆகும். 
सुखस्य - சுகத்திற்கெல்லாம் மேம்பட்ட 
सुखम् - ஸுகத்தைத் தரும் 
आस्पदं - இடமாகும்
सुचरितस्य - புண்ணியத்துக்கு 
महत् - பெரிய 
दुर्गं - கோட்டையாகும்.

பக்தன் வாழும் இடம் தவத்திற்குத் தலம்

    திருவரங்கப்பெருமானே ! ஒரு சேதநன் தன் இந்த்ரியங்களை வெளிப் பொருள்களில் செல்லவிடாது அடக்கித் தன் மனத்தை உன்னிடமே ஈடுபடுத்துவானாயின் அவனைத் தேவர்களும் வணங்கி நிற்பார்கள். அத்தகைய பாகவதன் இவ்வுலகில் ஓர் இடத்தில் ஒருபொழுது வஸித்தாலும் அந்த இடம் எவ்வகை இடையூறுமின்றித் தவம் புரிதற்கு ஏற்ற வனமாய் விளங்கும். அந்த இடம் நீ எந்நாளும் உறைதற்கு ஏற்ற தலைநகராகும். அவ்விடத்தில் வஸித்தலால் வரும் இன்பம் மற்ற எல்லா இன்பத்தினும் மேம்பட்டதாகும். பகவத்-பாகவத கைங்கர்யம் முதலிய புண்யச் செயலைச் செய்ய ஓர் இடரும் வராமல் காக்கும் கோட்டையுமாகும். 

A Devotee’s Dwelling Becomes a Place for Penance

O Lord Ranganatha! If a person controls his senses so that they do not run after external objects and instead fixes his mind firmly on You, even the devas will stand in reverence before him. Such a great devotee, even if he lives in a place for a short time, will make that place become like a sacred forest fit for performing penance without any obstacles. That place will become like a great capital city worthy of Your constant presence. The joy experienced there will be greater than all other forms of happiness. It will also become a strong fortress that protects devotees and allows them to perform virtuous acts such as service to the Lord and to His devotees without any hindrance.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸