श्री:
श्रीमते निगमान्त महादेशिकाय नम:
9- பெருமாளின்
திருக்குணங்களின் காப்பாற்றும் சக்தி - The Protecting Power of the
Perumal’s gunas
பெருமாளின் திருக்குணங்களின் காப்பாற்றும் சக்தி
திருவரங்கனென்னும் பிரபுவே! இவ்வுலகில் அறம் - பொருள் - இன்பம் ஆகிய இம்மைப் பயன்களையே விரும்பி அவற்றுக்காக முயற்சி கொள்கின்றனர் பலர். சிலர் ஸத்துவம் - ரஜஸ் - தமஸ் ஆகிய முக்குணங்களையுடைய இந்த ஸம்ஸார மண்டலத்தைக் கடந்து மோக்ஷம் பெற விரும்பி அதற்கான செயலைச் செய்கின்றனர். இன்னும் சிலர் அர்ச்சை வடிவு கொண்டு இங்கு எழுந்தருளியுள்ள உன்னை அநுபவித்து மகிழத் தடையாய் நிற்கும் பகைவர்கள் ஒழியவேண்டுமென்று விரும்பு கின்றனர். அவர்கள் தாம் விரும்பும் பலன்களுக்காக ஏற்ற சாதனங்களைச் செய்யும்போதும் மற்ற காலங்களிலும் தவறுகள் நேருவதும் அதனால் அவர்களுக்குப் பலன் வராமற்போகுமோ, என்ன தீங்கு வருமோ?” என்ற அச்சம் விளைவதும் இயற்கையே. அவ்வாறு அச்சம் வரும்போது அவர்கள் இத்தலத்தில் அமர்ந்துள்ள உன் திருக்கல்யாண குணங்களை அநுஸந்திக்கின்றனர். உன் குணங்கள் அவர்களின் முயற்சியில் தவறு நேரும்போது விழித்திருந்து அவர்களின் அச்சத்தைப் போக்கிக் கைதூக்கி விட்டுக் காப்பதை விரதமாகக் கொண்டுள்ளன. ஆதலின் அவர்கள் விரும்பிய பலனைப் பெறுகின்றனர். உன்னுடைய எந்தக் குணம்தான் இத்தகைய சிறப்புடையதன்று? எல்லாக் குணங்களும் ஒப்பற்று உயர்ந்து விளங்குகின்றன.
The Protecting Power of the Perumal’s gunas
O Lord
Ranganatha! In this world, many people try to gain the worldly goals of dharma
(virtue), artha (wealth), and kama (pleasure). Some others wish to cross
this samsara, which is ruled by the three qualities—sattva, rajas, and tamas—and
try to attain moksha. There are also some who want their enemies and
obstacles removed so that they can happily experience You, who are present here
in the archa form.
While
trying to achieve these goals, people may make mistakes in their efforts.
Because of this, they may feel afraid and wonder, “Will we fail? Will
something bad happen?” When such fear arises, they think about Your divine
and auspicious qualities as You reside in this holy place. Your qualities stay
alert and remove their fears when mistakes happen. They protect them and help
them succeed. Because of this, they receive the results they desire. Indeed,
which of Your qualities does not have such greatness? All of them shine with
unmatched glory.