Monday, March 23, 2026

Abheethi Stavam - 10 - அறியாமையிலும் காக்கும் கருணை - Compassion that Saves the Ignorant

 श्री:

जय गरुड सुपर्ण 
श्रीमते निगमान्त महादेशिकाय नम: 
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

 4.श्री अभीतिस्तवः Abheethi Stavam ஸ்ரீ அபீதிஸ்தவம்

10 - அறியாமையிலும் காக்கும் திருவரங்கனின் அளவற்ற கருணை - Compassion that Saves the ignorant

बिभेति भवभृत् प्रभो त्वदुपदेश तीव्रौषधात् 
कदध्व रस दुर्विषे बळिश भक्षवत् प्रीयते । 
अपथ्य परिहार धी विमुखमित्थमाकस्मिकी 
तमप्यवसरे क्रमादवति वत्सला त्वद्दया ॥ 10 ॥

पदच्छेदः
बिभेति भवभृत् प्रभो त्वत् उपदेश तीव्र औषधात् 
कदध्व रस दुर्विषे बळिश भक्षवत् प्रीयते । 
अपथ्य परिहार धी विमुखम् इत्थम् आकस्मिकी 
तम् अपि अवसरे क्रमात् अवति वत्सला त्वत् दया ॥ 10 ॥

प्रभो - ப்ரபுவே ! 
भवभृत् - ஸம்ஸாரியான சேதநன் 
त्वत् उपदेश - உன் உபதேசமென்னும் 
तीव्र औषधात्  - கடுமையான மருந்துக்கு 
बिभेति - அஞ்சுகின்றான். 
कदध्व - இழிவான வழியில் பெறப்படும் 
रस दुर्विषे - சுவையென்னும் கொடிய விஷத்தில் 
बळिश भक्षवत् - தூண்டியில் உள்ள உணவை உண்ணும் மீன்போல் 
प्रीयते - மகிழ்வுறுகின்றான். 
इत्थम् —இவ்வாறு 
अपथ्य -  தீய செயலினின்று 
परिहार धी विमुखम् — விலகவும் எண்ணம் கொள்ளாத 
तम् अपि - அவனையும் 
वत्सला - அன்புகலந்ததாய் 
आकस्मिकी - காரணம் அறிய முடியாதவாறு தோன்றிய 
त्वत् दया - உன் கருணை 
अवसरे - உரிய காலத்தில் 
क्रमात् - நாளடைவில் 
अवति — காத்துவிடுகின்றது.

அறியாமையிலும் காக்கும் திருவரங்கனின் அளவற்ற கருணை

திருவரங்கனென்னும் பிரபுவே! நீ சேதநர்களை வாழ்விப்பதற்காகப் பகவத்கீதை-பாஞ்சராத்ரம் முதலிய நூல்களின் வாயிலாகப் பல உயரிய உபதேசங்களைச் செய்தருளியுள்ளாய். அவ்வுபதேசங்கள் சேதனனுக்கு ஸம்ஸார பந்தத்தை விரைவில் போக்கவல்ல மிக்க வீர்யமுடைய மருந்துகளாயுள்ளன. சேதநனோ உலக ஸுகங்களை நெடுநாளாய் அநுபவித்து வந்த பழக்கத்தால் மேன்மேலும் அவற்றிலேயே ஈடுபட்டு ஸம்ஸார பந்தத்தைப் போக்கிக்கொள்ள மனமற்றவனாயுள்ளான். அவனுக்கு உன் அரிய உபதேசங்கள் கைக்கின்றன(கசக்கின்றன). அவற்றைக் கண்டு அவன் அஞ்சுகின்றான்; இழிவான வழியில் நடப்பதிலேயே சுவைகொண்டு மகிழ்கின்றான். தன்னுடைய இச்செயல், செம்படவர் தூண்டிமுள்ளில் வைத்துள்ள உணவை மீன் உண்ண வருவது போன்றதாகுமென்பதை உணரவில்லை. தனக்குத் தீங்கு விளைவிக்கும் இச்செயலை விட்டொழிக்கவேண்டுமென்ற எண்ணம்கூட அவனுக்கு உண்டாவதில்லை. இத்தகைய சேதநன் கதி யாது? இவனையும் உன் கருணை அன்புடன் கூடி நின்று காத்துவிடுகின்றது. எப்படி? உன் அன்பு சேதனனிடம் உள்ள குற்றங்களைப் பொருட்படுத்தாது. உன் கருணை சேதநன் துன்பத்தைப் போக்க முற்படுகின்றது. பாபியான ஜீவனுக்கு ஏதாவது சிறிய புண்ணியம் ஏற்படும்போது உன் கருணை பிறரால் காரணம் அறிய முடியாதவாறு அவன்மீது பாய்கின்றது; பின் அவனை நாளடைவில் நல்வழிப்படுத்திப் பிரபத்தியைத் தலைக்கட்டிவைத்து மோக்ஷம் பெறும்வரை பெறும்வரை உதவி அவனைக் காத்துவிடுகின்றது. என்னே உன் கருணை !!! 

The Perumal’s Boundless Compassion that Saves Even the Ignorant

O Lord Ranganatha! To uplift all beings, You have given great teachings through sacred texts like the Bhagavad Gita and Pancharatra. These teachings are like powerful medicines that can quickly remove the bondage of samsara. But the jiva, due to long habit of enjoying worldly pleasures, becomes more attached to them and loses the desire to free himself from samsara. Your teachings feel difficult and unpleasant to him, and he even fears them. Instead, he enjoys following low and harmful paths. He does not realize that his actions are like a fish going after bait placed on a hook, which will only bring harm. He does not even think of giving up such harmful ways. What will happen to such a person? Even him, Your compassion protects with love. Your love does not look at his faults, and Your compassion works to remove his suffering. When even a small good deed arises in such a sinful soul, Your grace flows towards him in a way that others cannot understand. Slowly, You guide him to the right path, help him perform prapatti, and protect him until he attains moksha. Oh, how great is Your compassion!

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸