Tuesday, April 7, 2026

Abheethi Stavam - 25 - நித்யஸூரிகள், தலைவர்கள், திருவரங்கக் காவலர்களிடம் ப்ரார்த்தனை - Prayer to the NithyaSuris, Leaders and Guardians of Srirangam

  श्री:

जय गरुड सुपर्ण 
श्रीमते निगमान्त महादेशिकाय नम: 
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

 4.श्री अभीतिस्तवः Abheethi Stavam ஸ்ரீ அபீதிஸ்தவம்

25 - நித்யஸூரிகள், தலைவர்கள், திருவரங்கக் காவலர்களிடம் ப்ரார்த்தனை  - Prayer to the NithyaSuris, Leaders and Guardians of Srirangam

भुजङ्गम विहङ्गम प्रवर सैन्य नाथाः प्रभो 
तथैव कुमुदादयो नगर गोपुर द्वारपाः । 
अचिन्त्य बल विक्रमास्त्वमिव रङ्ग संरक्षकाः 
जितंत इति वादिनो जगदनुग्रहे जाग्रतु ॥ 25 ॥

पदच्छेदः
भुजङ्गम विहङ्गम प्रवर सैन्य नाथाः प्रभो 
तथा एव कुमुदादय: नगर गोपुर द्वार पाः । 
अचिन्त्य बल विक्रमा: त्वम् इव रङ्ग संरक्षकाः 
जितं ते इति वादिन: जगत् अनुग्रहे जाग्रतु ॥ 25 ॥

प्रभो - ப்ரபுவே! 
अचिन्त्य - மனத்துக்கு எட்டாத 
बल विक्रमा: - வலிமையையும் வீரச்செயலையுமுடையரான
भुजङ्गम विहङ्गम प्रवर - பாம்புகட்குத் தலைமையான ஆதிசேஷன்-பட்சிகட்குத் தலைவனான கருடன் 
सैन्य नाथाः - சேனைத்தலைவரான விஷ்வக்ஸேநர் இவர்களும் 
तथा एव - அவ்வாறே
कुमुदादय:  - குமுதன் முதலிய கூட்டத் தலைவர்களும் 
नगर गोपुर द्वार पाः - நகரம் கோபுரம் கோட்டை வாயில் இவற்றின் காவலர்களும்
त्वम् इव - உன்னைப்போலவே
रङ्ग संरक्षकाः  - திருவரங்கத்தைக் காப்பவர்களாய் 
जितं ते इति वादिन: - உனது வெற்றியை வாழ்த்திக்கொண்டு 
जगत् अनुग्रहे - உலகுக்கு  நன்மை புரிவதில் 
जाग्रतु - கருத்துடையராயிருக்க வேண்டும்.

நித்யஸூரிகள், தலைவர்கள், திருவரங்கக் காவலர்களிடம் ப்ரார்த்தனை

திருவரங்கத் தலைவனே! அநந்தன் - கருடன் - விஷ்வக்ஸேநர் இவர்கள்-குமுதன் முதலிய கூட்டத் தலைவர்கள்- நகரக் காவலர்-கோபுரக் காவலர்-வாயிற் காவலர் ஆகிய அனைவருக்கும் உள்ள வலிமையும் இவர்கள் புரியும் வீரச் செயலும் மனத்தால் சிந்திக்கவும் முடியாதன. இவர்களெல்லாம் உன்னைப் போலவே திருவரங்கத்தைக் காக்க மிக்க ஊக்கங் கொண்டுள்ளனர்.  இவர்கள் உனது வெற்றியையே முழக்கி உன்னை வாழ்த்திக் கொண்டிருக்கின்றனர். இவர்கள் இத் திருவரங்கத்தை மட்டுமன்றி உலகம் முழுவதையுமே காப்பதில் மிக்க ஊக்கமுள்ளவர்களாயிருக்க வேண்டுமென்று நாங்கள் வேண்டுகின்றோம். 

Prayer to the NithyaSuris, Leaders and Guardians of Srirangam

O Lord of Srirangam! Ananta, Garuda, Vishvaksena, Kumuda and the other leaders, along with the city guards, gopuram guards, and gatekeepers—all possess immense strength and perform heroic deeds beyond even our imagination. All of them are deeply eager, like You, to protect Srirangam. They constantly praise You, proclaiming Your victory. We pray that they not only protect Srirangam but also remain ever eager to protect the entire world.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸