Friday, March 13, 2026

Bhagavad Dhyana Sopanam - 12 - பலன் கூறுதல் – The Benefits of chanting Bhagavad Dhayana Sopanam

   श्री:

जय गरुड सुपर्ण 
श्रीमते निगमान्त महादेशिकाय नम: 
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

श्रीभगवद्धयान सोपानम् Bhagavad Dhyana Sopanam ஸ்ரீ பகவத் த்யாந ஸோபாநம்

रङ्गास्थाने रसिक महिते रञ्जिताशेष-चित्ते 
विद्वत्सेवा-विमल-मनसा वेङ्कटेशेने क्लॄप्तम् । 
अक्लेशेन प्रणिहित-धियामारुरुक्षोरवस्थां 
भक्तिं गाढां दिशतु भगवद्ध्यान-सोपानमेतेत् ।। 12

पदच्छेदः
रङ्ग आस्थाने रसिक महिते रञ्जित अशेष चित्ते 
विद्वत् सेवा विमल मनसा वेङ्कटेशेने क्लॄप्तम् । 
अक्लेशेन प्रणिहित धियाम् आरुरुक्षो: अवस्थां 
भक्तिं गाढां दिशतु भगवत् ध्यान सोपानम् एतेत् ।। 12

रसिक - (பகவத் விஷயத்தில்) சுவையுடையவர்களால் 
महिते - போற்றப்பட்டதாய் 
रञ्जित अशेष चित्ते - எல்லோருடைய உள்ளத்தையும் மகிழ்விப்பதாயுள்ள
रङ्ग आस्थाने- திருவரங்கமென்னும் க்ஷேத்ரத்தில்
विद्वत् सेवा - ப்ரஹ்ம வித்துக்களின் பணிவிடையால்
विमल मनसा - தூய உள்ளம் பெற்ற 
वेङ्कटेशेने - வேங்கடேச  கவியால் 
क्लॄप्तम्  - இயற்றப்பட்ட 
एतेत् - இந்த 
भगवत् ध्यान सोपानम् - பகவத் த்யாந ஸோபாநமென்னும் தோத்திரம்
प्रणिहित धियाम् - யோகத்தில் ஆழ்ந்த யோகிகளின் 
अवस्थां - நிலையை 
अक्लेशेन  - கஷ்டமின்றி 
आरुरुक्षो: - ஏறவிரும்புமவனுக்கு
गाढां - உறுதியான 
भक्तिं - பக்தியை 
दिशतु  - அளிக்கவேண்டும்

பலன் கூறுதல்

 திருவரங்கமென்னும் இந்தத் திவ்வியத்தலம் பகவதநுபவத்தில் சுவை மிகுத்தவர்களான பாகவதர்களால் வாஸத்திற்கு உரியதெனப் போற்றப் பெற்றது; இங்கு வசிக்கும் அனைவருடைய உள்ளத்தையும் மிக மகிழ்விப்பது இத்தலம். இதில் வசிக்கும் பேறு பெற்ற ஸ்ரீ வேங்கடேசன், அப்புள்ளார் முதலிய ப்ரஹ்மவித்துக்களுக்குப் பணிவிடைசெய்து அவர்களின் திருவருளால் பெற்ற ஞானத்தால் தூய உள்ளம் பெற்றவன். இக்கவி இயற்றியது இந்தப் பகவத் த்யாந ஸோபாநம் என்னும் ஸ்தோத்ரம். இதைப் பாராயணம் செய்தால் எம்பெருமானுடைய திருவடிகளில் உறுதியான பக்தி உண்டாகும். சிறந்த யோகிகளின் நிலையில் எளிதாய் ஏற விரும்புமவன் கூட இதைப் படித்து வந்தால் அந்த நிலையைப் பெறுவதற்கு ஏற்ற பக்தியைப் பெற்றுப் படிப்படியாக அந்த யோக நிலையையும் பெறலாம்.

 ஸ்ரீ பகவத் த்யாந ஸோபாநம் முற்றும் 

The Benefits of chanting Bhagavad Dhayana Sopanam

    This sacred place known as Srirangam is praised as the proper dwelling place for Bhagavatas who deeply relish the experience of the Lord. It brings great joy to the hearts of all who live there. Sri Venkatesa, who was blessed to live in this holy place, served great knowers of Brahman such as Appullar and others. By their divine grace, he gained true knowledge and a pure heart. He composed this hymn called Bhagavad Dhyana Sopanam. Those who recite this stotra will develop firm devotion at the sacred feet of the Lord. Even one who wishes to rise to the level of great yogis can, by regularly studying this hymn, gain the devotion needed and gradually attain that exalted yogic state.

Thus concludes the Sri Bhagavad Dhyana Sopanam

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

SarvamSriKrishnarpanam