Showing posts with label Attachment. Show all posts
Showing posts with label Attachment. Show all posts

Thursday, June 25, 2026

162 - Daya Shatakam - 75- சிற்றின்பத்திலிருந்து மோக்ஷானந்தம் வரை வழிநடத்தும் தயை - Daya That Gradually Leads Jeevan from Lesser Joys to Moksha

 श्री:
जय गरुड सुपर्ण 
श्रीमते निगमान्त महादेशिकाय नम: 
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

75- சிற்றின்பத்திலிருந்து மோக்ஷானந்தம் வரை வழிநடத்தும் தயை - Daya That Gradually Leads Jeevan from Lesser Joys to Moksha

 अतिविधि शिवैरैश्वर्यात्मानुभूति रसैर्जनान् 
अहृदयमिहोपच्छन्द्यैषामसङ्ग दशार्थिनी । 
तृषित जनता तीर्थस्नान क्रम क्षपितैनसां 
वितरसि दये वीतातङ्का वृषाद्रि पतेः पदम् ॥ 75 ॥

पदच्छेदः
अति विधि शिवै: ऐश्वर्य आत्म अनुभूति रसै: जनान् 
अहृदयम् इह उपच्छन्य एषाम् असङ्ग दशा अर्थिनी । 
तृषित जनता तीर्थ स्नान क्रम क्षपित एनसां 
वितरसि दये वीत आतङ्का वृषाद्रि पतेः पदम् ॥ 75 ॥

दये — தயாதேவியே!
अति विधि शिवै: — பிரமனதுக்கும் சிவனுக்கும் மேம்பட்ட
ऐश्वर्य — செல்வம்
आत्म अनुभूति — கைவல்யம் இவற்றின்
रसै: — ஆநந்தங்களாலே
जनान् — சேதநர்களை
अहृदयम् — (உனக்கு) இஷ்டமின்றியே
उपच्छन्य — ஆசை காட்டி (இஷ்டப்படும்படி செய்து)
एषाम् — இவர்களுக்கு
इह — இப்போகங்களில்
असङ्ग दशा— பற்று ஒழிந்த நிலையை
अर्थिनी — விரும்பியவளாய்
तृषित — விடாயுற்ற
जनता — ஜநக்கூட்டத்தின்
 तीर्थ स्नान क्रम — புண்ணிய தீர்த்த ஸ்நாந முறையால்
क्षपित एनसां — பாபம் நீங்கப் பெற்ற இவர்களுக்கு
वीत आतङ्का — மனப்பதற்றம் நீங்கியவளாய்
वृषाद्रि पतेः — திருவேங்கடநாதனுடைய
पदम् — திருவடியை
वितरसि — அளிக்கின்றாய்.

சிற்றின்பத்திலிருந்து மோக்ஷானந்தம் வரை வழிநடத்தும் தயை

தயாதேவியே! மஹேசுவரனென்று பெயர் படைத்த சிவனுடைய செல்வம் மிகப் பெரிது. அதிலும் பெரிது பிரமனது ஐச்வர்யம். இது மற்ற எல்லா ஐச்வர்யங்களையும் விட மிகப் பெரியது. இச்செல்வங்களையும் காட்டிலும் மிக்க இன்பத்தைத் தருவது கைவல்யம். தன் ஆத்மஸ்வரூபத்தைக் கண்டு அநுபவிப்பதே கைவல்யமெனப்படும். இந்த ஆநந்தம் மற்ற ஆநந்தத்தைக் காட்டிலும் மிக அதிகமானது. உன்னை வழிபடுவோருக்குச் சிவன் - பிரமன் இவர்களைக்கட்டிலும் பெருத்த ஐச்வர்யத்தையும் அதிலும் மேம்பட்ட கைவல்யத்தையும் அவரவர் விருப்பத்திற்கு ஏற்றவாறு அளிக்கின்றாய். உண்மையில் இவற்றை அவர்களுக்கு மனப்பூர்வமாகவா கொடுக்கின்றாய்? இல்லை. ஏன்? இவை அனைத்தும் சாசுவதமல்லவே! ஒரு காலத்தில் அழிந்தே போகுமே! இவற்றுக்கும் மேம்பட்ட சாசுவதமான மோக்ஷ ஸாம்ராஜ்யத்தைச் சேதநர்களுக்குக் கொடுப்பதன்றோ உனக்கு ஆசை! ஆயினும் அவர்கள் போகும் வழியிலேயே செல்ல விட்டுப் பின்பு அவர்களை நேரிய வழியில் திருப்ப எண்ணுகின்றாய். உலகிலும் முரட்டுச் சிறுவர்களை அவர்கள் போகும் வழியிலேயே விட்டுப்பின் நேரிய வழிக்குக் கொண்டு வருவது உண்டு. அவ்வாறே சேதநர் விரும்பும் பலன்களையே நீ முதலில் அளித்து ஆசைகாட்டுகின்றாய். பின் அவர்களுக்கு அப்பலன்களில் பற்று ஒழியும் சூழ்நிலையை எதிர்பார்த்து நிற்கின்றாய். அவர்கள் அப்பலன்களைச் சுவைத்துப் பார்க்கின்றனர். நாளடைவில் அவர்களுக்கு நல்லறிவு உண்டாகின்றது. நல்லறிவுக்குத் தடையாயிருந்த பாபங்கள் கழிந்துவிடுகின்றன. இவர்கள் மற்றைப் பயன்களுக்காகவே எம்பெருமானை வழிபட்டிருந்தபோதிலும் எம்பெருமானது பெருமையால் இவர்களின் பாபங்கள் தொலைந்து போகின்றன. தன் விடாயைத் தணித்துக்கொள்ளவே ஒருவன் புண்ய தீர்த்தத்தில் ஸ்நாநம் செய்தாலும் தீர்த்தத்தின் பெருமை இவன் பாபங்களையும் ஒழித்துவிடுமன்றோ! அவ்வாறே இவர்களின் பாபங்கள் தொலைந்து நல்லறிவு வந்ததும் தாம் அநுபவிக்கும் ஸுகங்களின் நிலையாமையை உணருகின்றனர். இவ்வுண்மைநிலையை அறிந்ததும் இவர்களுக்கு அச்சுகங்களில் பற்று ஒழிகின்றது; எல்லாவற்றினும் மேம்பட்ட மோக்ஷநந்தத்தைப் பெற ஆசை உண்டாகின்றது. இப்படி நீ தான் அவர்களை நல்வழியில் மெல்லத் திருப்பி விடுகின்றாய். மோக்ஷத்தில் ஆசை வந்ததும் அதற்கு உபாயமான ப்ரபத்தியைச் செய்யுமாறு செய்கின்றாய். அவர்கள் ப்ரபத்தியைச் செய்யாதிருந்து மோக்ஷத்தைக் கொடுத்தால் ‘பக்ஷ பாதம் வருமே, சாஸ்த்ரம் முரண்படுமே’ என்ற அச்சமும் உனக்கு நீங்கிவிடுகின்றது. பின் அவர்களுக்குத் திருவேங்கட நாதனாகிய பரமபதநாதன் திருவடிகளில் இடையறாது கைங்கர்யம் செய்யும் மோக்ஷநந்தத்தை அளிக்கின்றாய். இப்படி வேறு பயனில் ஈடுபட்டவரையும் படிப்படியாக மோக்ஷம் பெறும்படி செய்யும் இந்த மஹோபகாரம் உன்னையன்றி வேறு யாருக்குக் கூடும்? (75)

 

Daya That Gradually Leads Jeevan from Lesser Joys to Moksha

O Daya Devi!

The wealth and glory of Mahesvara (Siva) are exceedingly great. Greater still is the sovereignty and splendor of Brahma, which surpasses all other forms of worldly greatness.

Yet even these are inferior to Kaivalyam, the bliss of experiencing one's own Aathma. The joy of directly experiencing one's true Self is far superior to worldly pleasures and positions.

To those who worship You, You grant, according to their desires, great wealth surpassing that of Siva, sovereignty exceeding that of Brahma, and even the bliss of Kaivalyam.

But do You grant these wholeheartedly as the final goal?

No.

Why?

Because none of these are eternal. All of them will eventually come to an end.

What You truly desire is to grant the eternal kingdom of Moksha, which surpasses every other attainment.

Yet You do not force Jeevans toward it immediately.

Instead, You allow them to proceed along the path they themselves desire, intending eventually to guide them toward the highest good.

Just as parents sometimes allow a stubborn child to follow his preference for a time and later gently guide him onto the right path, You act in the same manner.

You first grant the fruits that people desire and thereby draw them closer to Yourself.

Later, You patiently wait for the time when their attachment to those fruits begins to fade.

They enjoy the pleasures they sought. Gradually, true understanding dawns within them. The sins that obstructed wisdom are removed.

Although they initially worshipped Emperuman for worldly rewards, His greatness itself destroys their sins.

A person may enter a sacred Tirtham merely to cool his body or quench his thirst. Yet the sanctity of that holy water removes his sins whether he intended it or not.

Similarly, by worshipping the Lord, these Jeevans unknowingly begin to lose their accumulated sins.

As their understanding grows, they realize the impermanent nature of the pleasures they are enjoying.

Once they recognize this truth, attachment to those pleasures diminishes.

Then a longing arises for the highest and eternal bliss—Mokshanandam.

It is You who gently turns them in this direction.

When the desire for Moksha awakens, You inspire them to perform Prapatti, the means to attain it.

Only after they perform Prapatti do You grant Moksha. In this way, there is no partiality, and the teachings of the Shaastram remain fully upheld.

Then You bless them with the supreme joy of Moksha—the eternal opportunity to perform uninterrupted Kainkaryam at the divine feet of Tiruvengadanathan, the Lord of Paramapadam.

Who other than You could perform such a magnificent act of kindness?

Who else would patiently transform those seeking lesser rewards into seekers of Moksha and ultimately lead them to eternal service at the Lord’s feet?

Such is the incomparable greatness of Your compassion. (75)

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸