Thursday, January 22, 2026

Hayagriva Stotram - 8 - The Saviour of Brahma

   श्री:

Jaya Garuda Suparna
श्रीमते निगमान्त महादेशिकाय नम: 
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

श्रीहयग्रीवस्तोत्रम् Hayagriva Stotram - ஹயக்ரீவ ஸ்தோத்ரம்

मन्दोऽभविष्यन्नियतं विरिञ्चो
वाचां निधे वञ्चितभागधेयः ।
दैत्यापनीतान् दययैव भूयोऽपि
अध्यापयिष्यो निगमान् न चेत् त्वम् ।। 8
 
पदच्छेदः
मन्द: अभविष्यत् नियतं विरिञ्च:
वाचां निधे वञ्चित भागधेयः ।
दैत्य अपनीतान् दयया एव भूय: अपि
अध्यापयिष्य: निगमान् न चेत् त्वम् ।। 8
 
वाचां निधे  - கலைகளுக்கு உறைவிடமானவனே !
त्वम् -நீ
दैत्य अपनीतान्  - அசுரர்களால் கவரப்பட்ட
निगमान् - வேதங்களை
दयया एव - கருணையாலேயே
भूय: अपि - மறுபடியும்  (பிரமனுக்கு)
न अध्यापयिष्य:   चेत्  - உபதேசித்திராவிட்டால்
विरिञ्च: - பிரமதேவன்
वञ्चित भागधेयः - பாக்யத்தை இழந்தவனாய்
नियतं  - நிச்சயமாக
मन्द: - மூடனாக
अभविष्यत् – ஆகியிருப்பான்

 கலைகளுக்கு உறைவிடமான ஸ்ரீஹயக்ரீவப் பெருமானே! மதுகைடபர்கள் என்னும் இரண்டு அசுரர்கள்  தம் வலிமையால் பிரமனிடமிருந்து அவ்வேதங்களைக் கவர்ந்து சென்றுவிட்டனர்.  அதனால் பிரமன் செய்வதறியாது திகைத்து நிற்கும்போது நீ முதலில் பிரமனுக்கு வேதங்களை உபதேசித்தருளினாய்.   நீ அவன்பால் கருணைகொண்டு மறுபடி வேதங்களை அவனுக்கு உபதேசித்துக் காத்தருளினாய். நீ அவ்வாறு செய்திராவிடில் பிரமனது கதி யாதாக இருந்திருக்கும்? வேதங்களை இழந்ததால் படைத்தல் முதலிய எச்செயலையும் செய்யமுடியாது திகைத்து நின்றிருப்பான்.

O SriHayagriva Perumal, the abode of all arts! When the two demons Madhu and Kaiabha, through their great strength, stole the Vedas from Brahma, he stood confused and helpless, not knowing what to do. Out of compassion, You first taught the Vedas to Brahma, and then once again protected him by restoring the Vedas to him. If You had not done this, what would have been Brahma’s fate? Having lost the Vedas, he would have stood confused, unable to carry out any act of creation or other duties.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

SarvamSriKrishnarpanam