Friday, January 23, 2026

Hayagriva Stotram - 9 -The Saviour of Bruhaspathi

  श्री:

Jaya Garuda Suparna
श्रीमते निगमान्त महादेशिकाय नम: 
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

श्रीहयग्रीवस्तोत्रम् Hayagriva Stotram - ஹயக்ரீவ ஸ்தோத்ரம்

वितर्कडोलां व्यवधूय सत्वे (तत्वे)
बृहस्पतिं वर्तयसे यतस्त्वम् ।
तेनैव देव त्रिदशेश्वराणाम्
अस्पृष्टडोलायितमाधिराज्यम् ।। 9
 
पदच्छेदः
वितर्क डोलां व्यवधूय सत्वे (तत्वे)
बृहस्पतिं वर्तयसे यत: त्वम् ।
तेन एव देव त्रिदश ईश्वराणाम्
अस्पृष्ट डोलायितम् आधिराज्यम् ।। 9
 
देव - எம்பெருமானே !
त्वम् - நீ
वितर्क - ஸந்தேஹத்தால்
डोलां - மனம் ஊசலாடும் தன்மையை
व्यवधूय - ஒழித்து
बृहस्पतिं - ப்ருஹஸ்பதியை
सत्वे- நல்ல மார்க்கத்தில் ( तत्वे - ஸ்திர மனோ நிலையில்)
यत: - எதனால்
वर्तयसे   - நிலைநிறுத்துகின்றாயோ
तेन एव - அதனாலேயே
 त्रिदश ईश्वराणाम् - தேவர் தலைவர்களின்
आधिराज्यम् - தேவலோகஆட்சி
अस्पृष्ट डोलायितम् - ஊசலாடுவருற்கு இடமில்லாததாயிற்று 

ஸ்ரீஹயக்ரீவப் பெருமானே! தேவர்களுக்கெல்லாம் குரு ப்ரூஹஸ்பதி. அவருடைய மந்திராலோசனை முதலிய உதவியாலேயே தேவேந்திரன் முதலிய தலைவர்கள் தத்தம் லோகங்களில் ஆட்சி புரிகின்றனர். அந்த ப்ருஹஸ்பதியும் சில சமயங்களில் தர்மவிஷயத்தில் ஸந்தேகம் வந்து கலங்கி நிற்பதுண்டு. அப்பொழுதெல்லாம் நீ அவருக்கு நல்லுபதேசம் செய்து அவர் கலக்கத்தைப் போக்கி நேர்வழியில் நிலைநிறுத்துகின்றாய். அதனால் அவர் இந்திரன் முதலியோருக்கு நல்வழி காட்டி அவர்கள் தத்தம் இராச்சியங்களை நன்கு ஆளுமாறு செய்கின்றார். ஆகவே அசுரர்களால் அவ்விராச்சியங்கள் நிலைகுலையாதிருக்கின்றன. இவையனைத்தும் உன் திருவருளாலல்லவோ நடக்கின்றன?

O SriHayagriva Perumal! Bṛuhaspati is the teacher of all the gods, and with his guidance and wise counsel, leaders like Indra rule their respective worlds. Even Bṛuhaspati sometimes becomes confused and doubtful in matters of dharma. At such times, You give him right instruction, remove his confusion, and firmly place him on the correct path. Because of this, Bṛuhaspati is able to guide Indra and the other Devas properly, helping them rule their kingdoms well. As a result, those kingdoms remain stable and are not shaken by the asuras. Is it not true that all this happens only by Your divine grace?

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

SarvamSriKrishnarpanam