Saturday, January 24, 2026

Hayagriva Stotram - 10 - The Mantra, Yagna Fire, Receiver & giver of Havis to Devas

  श्री:

Jaya Garuda Suparna
श्रीमते निगमान्त महादेशिकाय नम: 
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

श्रीहयग्रीवस्तोत्रम् Hayagriva Stotram - ஹயக்ரீவ ஸ்தோத்ரம்

अग्नौ समिद्धार्चिषि सप्ततन्तोः 
आतस्थिवान् मन्त्रमयं शरीरम् । 
अखण्डसारैर्हविषा प्रदानैः 
आप्यायनं व्योमसदां विधत्से ।। 10

पदच्छेदः
अग्नौ समिद्ध अर्चिषि सप्ततन्तोः 
आतस्थिवान् मन्त्रमयं शरीरम् । 
अखण्ड सारै: हविषाम्  प्रदानैः 
आप्यायनं व्योम सदां विधत्से ।। 10

समिद्ध अर्चिषि - கொழுந்து விட்டு எரிகின்ற
सप्ततन्तोः अग्नौ - வேள்வியின் அக்நியில்
मन्त्रमयं - மந்த்ரங்களாகிய
शरीरम् - திருமேனியை
आतस्थिवान् - கொண்டு நின்று
अखण्ड सारै: - முழுதும் சுவை நிறைந்துள்ள
हविषाम्  प्रदानैः  - ஹவிஸ்ஸுக்களின் கொடைகளால்
व्योम सदां - வானத்தில் உறையும் தேவர்களுக்கு
आप्यायनं  - திருப்தியை
विधत्से – விளைவிக்கின்றாய்

     ஸ்ரீ ஹயக்ரீவப் பெருமானே! உலகில் மானிடர்கள் வேள்விகளைச் செய்யும்போது சுடர் கொழுந்து விட்டு எரியும் அக்நியில் ஹவிஸ்ஸுக்களை ஹோமம் செய்கின்றனர். அப்பொழுது அவர்கள் உச்சரிக்கும் மந்திரங்களின் வடிவத்தில் நீயே இருந்து,  அந்த ஹவிஸ்ஸுக்களைப் பெறுகின்றாய். பின், நிறைந்த சுவையுள்ள அந்த ஹவிஸ்ஸுக்களை அந்த அந்தத் தேவர்களுக்கு நீயே கொடுத்தருளி அவர்கள் பரிபூர்ண திருப்தி பெறும்படி செய்தருள்கின்றாய்.

    O Sri Hayagriva Perumal! When people in this world perform sacrificial rituals, they offer oblations into the blazing sacrificial fire. At that time, You Yourself are present in the form of the mantras they chant, and You receive those offerings (Havisu). Then, You personally distribute those richly flavored offerings to the respective Devas and grant them complete satisfaction.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

SarvamSriKrishnarpanam