यन्मूलमीदृक् प्रतिभाति तत्त्वं
या मूलमाम्नायमहाद्रुमाणाम् ।
तत्त्वेन जानन्ति विशुद्ध सत्त्वाः
तामक्षरामक्षरमातृकां त्वाम् ।।
(Pata Bhedham - त्वामक्षरामक्षरमातृकां ते, तामक्षरामक्षरमातृकां ते)
पदच्छेदः
यत् मूलं ईदृक् प्रतिभाति तत्त्वं
या मूलं आम्नाय महाद्रुमाणाम् ।
तत्त्वेन जानन्ति विशुद्ध सत्त्वाः
ताम् अक्षराम् अक्षर मातृकां त्वाम् ।।
(त्वाम् अक्षरां अक्षर मातृकां ते , तामक्षरामक्षरमातृकां ते)
ईदृक् - இத்தகைய
तत्त्वं - ப்ரபஞ்சம்
यत् मूलं - எதைக் காரணமாகக் கொண்டதாய்
प्रतिभाति — விளங்குகின்றதோ
या- எது
आम्नाय - வேதங்களாகிய
महाद्रुमाणाम् - பெரிய மரங்களுக்கு
मूलं - வேராக உள்ளதோ
तां - அந்த
अक्षराम् - அழிவற்ற
अक्षर मातृकां -- எழுத்துக்களுக்கு முதன்மையான ப்ரணவமாக (அக்ஷரத்தொகுதியாக)
त्वां - உன்னை
विशुद्ध - தூய்மையான
सत्त्वाः - ஸத்துவகுணமுள்ளவர்கள்
तत्त्वेन - உண்மையாக
जानन्ति - அறிகின்றனர்.
ஸ்ரீ ஹயக்ரீவப் பெருமானே! இந்தப் பிரபஞ்சம் தேவர்- மானிடர்-விலங்கு-தாவரம் ஆகிய பொருள்களாகவும், ஆகாயம். காற்று-அக்நி-ஜலம் - பூமி முதலிய தத்துவங்கள் வடிவமாகவும் காணப்படுகிறதே, இவற்றை வேதத்தைக் கொண்டுதானே படைக்கவேண்டும்! வேதங்களோ பற்பல பிரிவுகளையுடையன. ஆதலின் அவை பற்பல கிளைகளையுடைய பெரிய மரங்கள் போன்றவை. அந்த வேதங்களாகிய மரங்களுக்கு அடிவேர் போன்றது ப்ரணவம் என்னும் மந்த்ரம். இந்தப் பிரணவம் என்றும் அழியாததாய் அக்ஷரங்களுக்கு முதன்மையாயுள்ளது. உத்தம குணம் நிரம்பிய பெரியோர்கள் 'அத்தகைய ப்ரணவ வடிவாய் நிற்பவன் நீ, அக்ஷரங்களின் தொகுதியாக இருப்பவனும் நீ' என்ற உண்மையை அறிந்துள்ளனர்.
O Sri Hayagriva Peruman! This
universe is seen in the forms of Devas, humans, animals, and plants, as well as
in the elements like sky, air, fire, water, and earth. All of these must be
created through the Vedas! The Vedas themselves have many divisions, like large
tree with many branches. The root of this Vedic tree is the sacred mantra
called Pranava. This Pranava is imperishable and is foremost among all letters
(aksharas). Great sages,
full of excellent qualities, have realized this truth: ‘You are that Pranava
mantra itself, standing as the embodiment of all letters.