श्री:
Jaya Garuda Suparna
श्रीमते निगमान्त महादेशिकाय नम:
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
समाहारः साम्नां प्रतिपदमृचां धाम यजुषां
लयः प्रत्यूहानां लहरिविततिर्बोधजलधेः ।
कथादर्पक्षुभ्यत्कथककुलकोलाहलभवं
हरत्वन्तर्ध्वान्तं हयवदनहेषाहलहलः ।। 3
पदच्छेदः
समाहारः साम्नां प्रतिपदं ऋचां धाम यजुषां
लयः प्रत्यूहानां लहरि वितति: बोध जलधेः ।
कथा दर्प क्षुभ्यत् कथक कुल कोलाहल भवं
हरतु अन्तर्ध्वान्तं हयवदन हेषा हलहलः ।। 3
साम्नां → ஸாம வேதங்களின்
समाहारः → தொகுதியாய்
ऋचां → ருக் வேதங்களுக்கு
प्रतिपदं → ஒரு பொருட் கிளவியாய்
यजुषां → யஜுர் வேதங்களுக்கு
धाम → உறைவிடமாய்
प्रत्यूहानां → தடைகளின்
लयः → அழிவுக்குக் காரணமாய்
बोध जलधेः → ஞானக் கடலின்
लहरि वितति: → அலைவரிசையாயுள்ள
हयवदन हेषा हलहलः → ஹயக்ரீவனுடைய "ஹல ஹல" என்னும் கனைப்பொலி
कथा → வாதம் புரிவதில் உண்டான
दर्प → செருக்கினால்
क्षुभ्यत् → கலங்கி நிற்கின்ற
कथक कुल → வாதிகளின் கூட்டத்தின்
कोलाहल भवं → ஆரவாரத்தால் உண்டான
अन्तर्ध्वान्तं → அஜ்ஞான இருளை
हरतु → ஒழிக்க வேண்டும்
ஸ்ரீஹயக்ரீவனுடைய கனைப்பொலி ஸாமவேதத்தின் எல்லாக் கிளைகளும் ஒன்றுகூடிய வடிவமாயுள்ளது; ருக்வேத மந்த்ரங்களின் பொருளைக் கூறும மற்றொரு சொல்லோ என்னும்படி விளங்குகின்றது; யஜுர்வேத மந்த்ரங்களின் கருத்துக்கள் அனைத்தும் தன்னுள் அடங்கப்பெற்றது; கல்வி கற்பதற்கு வரும் தடைகளை எல்லாம் ஒழிக்கவல்லது; ஞானமெனும் கடலின் அலைவரிசையோ என்னும்படி நிற்பது. இவ்வாறு மூன்று வேதங்களின் ஸாரமென்னலாம்படி நின்று கல்வியின் தடைகளைப் போக்கி அறிவுச்சுடரை ஏற்றும் வல்லமையுடையது. பிற மதத்தினர் குயுக்திகளைக் கொண்டு வாதம் புரிவதில் செருக்குக் கொண்டுள்ளனர். அவர்களின் ஆரவாரத்தால் பல மக்கள் மதிமயங்குகின்றனர். அவர்களின் அஞ்ஞான இருளை ஸ்ரீஹயக்ரீவனுடைய கனைப்பொலி அறவே ஒழித்தருள்க.
The neighing sound of Sri Hayagriva appears to be the combined form of all the branches of the Sama Veda;
it sounds like another voice explaining the meanings of the mantras of the Ṛig Veda; and it contains within itself all the
teachings of the Yajur Veda. It has the power to remove every obstacle that
comes in the way of learning and stands like the rising waves of the vast ocean
of knowledge. Thus, it embodies the essence of the three Vedas, removes
obstacles to education, and lights the lamp of wisdom. Followers of other paths
take pride in arguing through clever but misleading reasoning, and because of
their loud claims, many people become confused. May the powerful neighing sound
of Sri Hayagriva completely remove this darkness of ignorance.
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸