Friday, January 16, 2026

Hayagriva Stotram - 2 - Form and Glow of Hayagrivan

 श्री:

Jaya Garuda Suparna
श्रीमते निगमान्त महादेशिकाय नम: 
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

श्रीहयग्रीवस्तोत्रम् Hayagriva Stotram - ஹயக்ரீவ ஸ்தோத்ரம்

स्वतः सिद्धं शुद्धस्फटिकमणिभूभृत्प्रतिभटं 
सुधासध्रीचीभिर्द्युतिभिरवदातत्रिभुवनम् । 
अनन्तैस्त्रय्यन्तैऱऩुविहितहेषाहलहलं 
हताशेषावद्यं हयवदनमीडीमहि महः ।। 2

पदच्छेदः
स्वतः सिद्धं शुद्ध स्फटिक मणि भूभृत् प्रतिभटं 
सुधा सध्रीचीभि: द्युतिभि: अवदात त्रिभुवनम् । 
अनन्तै: त्रय्यन्तै: अऩुविहित हेषा हलहलं 
हत अशेष अवद्यं हयवदनं  ईडीमहि महः ।। 2

स्वतः सिद्धं → தானே தோன்றியதாய் 
शुद्ध स्फटिक मणि→ மாசற்ற படிக மணியாலாகிய
भूभृत् प्रतिभटं→ மலையை ஓத்ததாய் 
सुधा सध्रीचीभि:→ அமுதம் போன்ற 
द्युतिभि:→ ஒளிகளால் 
अवदात त्रिभुवनम्→ மூவுலகையும் வெண்மையாக்குவதாய்
अनन्तै:→ அளவற்ற 
त्रय्यन्तै:→ வேதாந்தங்களால்  
अऩुविहित → தொடர்ந்து ஒலிக்கப்பெற்ற
हेषा हलहलं→ 'ஹலஹல' என்ற கனை குரலையுடையதாய்
हत अशेष अवद्यं→ எல்லாருடைய எல்லாத் தீங்கையும் ஒழிக்கவல்லதாய் 
हयवदनं → குதிரை போன்ற திருமுகத்தையுடையதாயுள்ள
 महः → ஒளிவடிவத்தை 
ईडीमहि→ துதிக்கக் கடவோம். 

    எம்பெருமான் அடியார்களை  உய்விக்க ஹயக்ரீவனாய்த் தானாகவே அவதரித்தான். இவனுடைய திருமேனி தூய படிக மணிகளாலாகிய ஒரு மலைபோல் விளங்குகின்றது. இவன் அமுதம் போன்ற தன் வெண்மையொளிகளை வீசச்செய்து மூவுலகும் வெண்மை நிறமாக்குகின்றான். இவன் குதிரை உருவுக்கு ஏற்றவாறு கனைக்கும் போது எழும்பும் 'ஹலஹல' என்னும் ஒலியில்,  எல்லையற்ற வேதாந்தங்களின் கருத்துக்கள் அடங்கியுள்ளனவாகத் தோன்றுகின்றன. இவ்வொலியைக் கேட்குமவர்களுக்கு வேதாந்தார்த்தங்கள் நன்கு விளங்குமாறு செய்கின்றான் இப்பெருமான்; அடியார்க்கு வரும் எல்லாத் தீங்குகளையும் ஒழிக்கின்றான். இவ்வாறு தேஜோமயனாய் நிற்கும் ஸ்ரீஹயக்ரீவனை நாம் துதிக்கக் கடவோம். 

      To uplift His devotees, our Lord willingly incarnated as Hayagriva. His divine body shines like a mountain made of pure crystal gems. By spreading His nectar-like white radiance, He makes all the three worlds glow with whiteness. When He neighs in a manner fitting His horse form, the sound ‘halahala’ that arises seems to contain the deep meanings of countless Vedantic truths. By hearing this sound, people clearly understand the truths of Vedanta, and the Lord removes all troubles that come to His devotees. We therefore praise and worship Sri Hayagriva, who stands as a radiant form of divine light.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

SarvamSriKrishnarpanam