Thursday, January 15, 2026

Hayagriva Stotram - 1 - Form & nature of Hayagrivan

 श्री:

Jaya Garuda Suparna
श्रीमते निगमान्त महादेशिकाय नम: 
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

श्रीहयग्रीवस्तोत्रम् Hayagriva Stotram - ஹயக்ரீவ ஸ்தோத்ரம்

ज्ञानानन्दमयं देवं निर्मलस्फटिकाकृतिम् । 
आधारं सर्वविद्यानां हयग्रीवमुपास्महे ।।     1

पदच्छेदः
ज्ञान आनन्द मयं देवं निर्मल स्फटिक आकृतिम् । 
आधारं सर्व विद्यानां हयग्रीवं उपास्महे ।।     

ज्ञान आनन्द मयं  →  ஞானம் ஆனந்தம் இவற்றின் வடிவமாய் 
निर्मल →  மாசற்ற 
स्फटिक →  படிகமணி போன்ற 
आकृतिम् →  திருமேனி உடையவனாய் 
सर्व विद्यानां →  எல்லா கலைகளுக்கும் 
आधारं → உறைவிடமாய் 
हयग्रीवं  →  குதிரை போன்ற திருக்கழுத்தை  உடையனான 
देवं → எம்பெருமானை 
उपास्महे → வழிபடுகின்றோம். 

    எம்பெருமான் அடியார்கள் உஜ்ஜீவிப்பதற்காகச் செய்த பல்வேறு அவதாரங்களுள் திருமுகமண்டலம் மட்டும் குதிரையினது போன்ற அவதாரமும் ஒன்று. இவ்வவதாரத்தில் 'ஹயக்ரீவன்' என வழங்கப்பெறும் இவ்வெம்பெருமான் ஞானம் ஆநந்தம் இவற்றின் வடிவமாய் நிற்பதோடு இக்குணங்கள் எல்லையில்லாதனவாய்த் தன்னிடம் இருக்கவும் பெற்றவன். இவனது திருமேனியோ சிறிதும் மாசற்ற படிகமணிபோல் வெண்மை நிறத்தோடு விளங்குவது. கலைகளுக்கும் உறைவிடமாகவும் அவற்றை அனைவருக்கும் அருளும் தெய்வமாகவும் நிற்பவன் இவ்வெம்பெருமான். இத்தகைய பரிமுகப் பெருமானை நாம் இடைவிடாது தியானிக்கின்றோம். 

    Among the many incarnations taken by our Lord to uplift His devotees, one is the incarnation in which His divine face is like that of a horse. In this form, He is known as Hayagriva. In this incarnation, the Lord stands as the very form of knowledge and bliss, and these qualities exist in Him without any limit. His divine body shines in pure white, like a flawless crystal, without even the slightest impurity. He is the abode of all arts and the divine giver who blesses everyone with knowledge and skills. We continuously meditate upon this glorious and compassionate Lord Hayagriva.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

SarvamSriKrishnarpanam