श्री:
Jaya Garuda Suparna
श्रीमते निगमान्त महादेशिकाय नम:
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
प्राची सन्ध्या काचिदन्तर्निशायाः
प्रज्ञादृष्टेरञ्जनश्रीरपूर्वा ।
वक्त्री वेदान् भातु मे वाजिवक्त्रा
वागीशाख्या वासुदेवस्य मूर्तिः ।। 4
पदच्छेदः
प्राची सन्ध्या काचित् अन्तर्निशायाः
प्रज्ञा दृष्टे: अञ्जन श्री: अपूर्वा ।
वक्त्री वेदान् भातु मे वाजि वक्त्रा
वाक् इश आख्या वासुदेवस्य मूर्तिः ।। 4
अन्तर्निशायाः → அஞ்ஞானம் என்னும் உள் இரவுக்கு
काचित् → அற்புதமான
प्राची सन्ध्या → கிழக்கு விடிவு காலமாய்,
प्रज्ञा दृष्टे: → ஞானக் கண்ணுக்கு
अपूर्वा → ஒப்பற்ற
अञ्जन श्री: → வஸ்துக்களைக் காட்டும் மை போன்றதாய்,
वेदान् → வேதங்களை
वक्त्री → உபதேசிக்கின்றதாய்,
वाक् इश आख्या → கல்விக் கடவுள் என்று வழங்குமதாய்,
वाजि वक्त्रा → குதிரை போன்ற முகத்தை உடையதான
वासुदेवस्य → பரவஸுதேவனுடைய
मूर्तिः → திருமேனி
मे → எனக்கு
भातु → காட்சி தர வேண்டும்
ஸ்ரீவைகுண்ட நாதனான பரவாஸுதேவனே ஸ்ரீஹயக்ரீவப் பெருமானாக அவதரித்துள்ளான். இவனது திருமேனியைத் தியானித்தால் "கிழக்கு விடிந்தால் இரவு கழிவது போல்" மக்களின் பொருள்களை மையிட்டுக் காண்பதுபோல் அபூர்வமான இந்தத் அஞ்ஞானம் அறவே ஒழிந்துபோம். கண்ணுக்குப் புலப்படாத திருமேனியைச் சிந்தித்துத் துதிப்பவன், தன் அகக் கண்ணால் ஸகலமான அர்த்தங்களையும் நன்கு அறியப்பெறுவான். இந்தத் திருமேனி கொண்டு எம்பெருமான் பிரமனுக்கு வேதங்களை உபதேசித்தருளினான். இங்ஙனம் கலைத் தெய்வமாய் வழங்கும் ஹயக்ரீவனுடைய திருமேனி அடியேனுக்குக் காட்சி தந்தருள
வேண்டும்.
The Supreme Lord of Sri Vaikunta, Para-Vasudeva Himself, has incarnated as Sri Hayagriva Peruman. When one meditates on His divine form, ignorance
that clouds the understanding of meanings is completely removed, just as night
disappears when the east becomes bright at dawn. A person who thinks upon and
praises this divine form, which is not seen by the outer eyes, comes to
understand all truths clearly through the inner eye of wisdom, as if collyrium were applied to the eyes. With this very
divine form, the Lord taught the Vedas to Brahma. May this Hayagriva, who is worshipped as the deity of all arts
and knowledge, graciously grant the vision of His divine form to me.
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸