Monday, February 2, 2026

Hayagriva Stotram - 19 - The glory of Hayagriva’s Holy feet

   श्री:

Jaya Garuda Suparna
श्रीमते निगमान्त महादेशिकाय नम: 
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

श्रीहयग्रीवस्तोत्रम् Hayagriva Stotram - ஹயக்ரீவ ஸ்தோத்ரம்

प्राङ्निर्मितानां तपसां विपाकाः 
प्रत्यग्रनिःश्रेयस संपदो मे । 
समेधिषीरंस्तव पादपद्मे 
संकल्पचिन्तामणयः प्रणामाः ।। 19

पदच्छेदः
प्राक् निर्मितानां तपसां विपाकाः 
प्रत्यग्र निःश्रेयस संपद: मे । 
समेधिषीरं तव पाद पद्मे 
संकल्प चिन्तामणयः प्रणामाः ।। 19

प्राक् -- முற்பிறவிகளில் 
निर्मितानां - செய்யப்பட்ட 
तपसां - தவங்களின் 
विपाकाः   - பயன்களாய் 
प्रत्यग्र - இதுவரை பெறத 
निःश्रेयस - மோக்ஷமென்னும் 
संपद: - செல்வத்தை அளிக்க வல்லனவாய் 
संकल्प - நினைத்த பயனை அளிப்பதில் 
चिन्तामणयः - சிந்தாமணியென்னும் இரத்தினம் போன்றவையாயுள்ள 
मे प्रणामाः  - என் வந்தநங்கள் 
तव - உன்னுடைய 
पाद पद्मे  -- திருவடித் தாமரையில் 
समेधिषीरन् — வளர்ந்து கொண்டேயிருக்கக்கடவன. 

 ஸ்ரீ ஹயக்ரீவப் பெருமானே! உன் திருவடிகளைத் தொழும் பாக்கியம் எளிதில் பெறக்கூடியதா? முற்பிறவிகளில் பெருந்தவம் புரிந்திருக்கவேண்டும். உன் திருவடிகளை வணங்கினால் இது வரை பெறாதிருந்த மோக்ஷமென்னும் பெருஞ்செல்வத்தைப் பெறக்கூட வழியுண்டாகும். இதுமட்டுமோ? உலகில் சிந்தாமணியென்னும் இரத்தினம் தன்னை உடையவர் விரும்பும் எல்லாப் பொருள்களையும் தரும் என்பர். அவ்வாறே உன் திருவடிகளைப் பணிந்தால் தாம் விரும்பிய மற்றைப் பலன்களையும் எளிதில் பெறலாம். இத்தகைய நமஸ்காரங்களை உன் திருவடித் தாமரைகளில் அடியேன் மேன்மேலும் செய்துகொண்டேயிருக்குமாறு நீயே அருள் புரிய வேண்டும்.

 O Sri Hayagriva Perumal! Is the blessing of worshipping Your divine feet easy to obtain? One must have performed great penance in past lives to receive it. By bowing at Your sacred feet, one gains the path to the great treasure called moksha, which was not attained before. And is that all? In this world, the wish-fulfilling gem called Chintamani is said to grant whatever its owner desires. In the same way, by surrendering at Your lotus feet, one can easily obtain many other desired blessings as well. May You Yourself graciously allow me to continue offering such reverent prostrations again and again at Your lotus feet. 

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

SarvamSriKrishnarpanam