श्री:
Jaya Garuda Suparna
श्रीमते निगमान्त महादेशिकाय नम:
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
विलुप्तमूर्धन्यलिपिक्रमाणां
सुरेन्द्रचूडापदलालितानाम् ।
त्वदंघ्रिराजीवरजःकणानां
भूयान् प्रसादो मयि नाथ! भूयात् ।। 20
पदच्छेदः
विलुप्त मूर्धन्य लिपिक्रमाणां
सुरेन्द्र चूडापद लालितानाम् ।
त्वत् अङ्घ्रि राजीव रजःकणानां
भूयान् प्रसाद: मयि नाथ! भूयात् ।। 20
नाथ - ஸ்வாமி !
विलुप्त मूर्धन्य लिपिक्रमाणां - தலையெழுத்தையும் அழிக்க வல்லனவாய்
सुरेन्द्र - பிரமன் முதலியோரின்
चूडापद - முடியினால்
लालितानाम् - கொண்டாடப் பெற்றனமையுள்ள
त्वत् अङ्घ्रि राजीव - உன் திருவடித்தாமரைகளின்
रजःकणानां - துகள்களின் அணுக்களின்
भूयान् - மிகுதியான
प्रसाद: - திருவருள்
मयि - என்பால்
भूयात् - சேரவேண்டும்.
ஸ்ரீ ஹயக்ரீவப் பெருமானே! ஒவ்வொருவனுடைய
தலையிலும் அவனது வாழ்க்கைமுறையைப் பற்றிப் பிரமன் எழுதி விடுகிறான். இவ்வெழுத்தே
தலையெழுத்தென வழங்கப்பெறும். அதைத் தழுவியே அவனது வாழ்க்கை நடைபெறும். அவ்வெழுத்தையும்
அழித்து நன்மையையே விளைவிக்கவல்லன உன் திருவடித்தாமரைகளின் துகள்கள். பிரமன்
முதலிய தேவர்களும் உன் திருவடிப் புழுதியைத் தம் முடியில் தாங்கிப்
போற்றுகின்றனர். இத்துணைப் பெருமை பெற்ற உன் திருவடித் துகள்களின் அணுக்கள்
அடியேனுடைய முடியிலும் படிந்து நின்று மிகுதியான திருவருளை என்பால்
சுரக்கவேண்டும்.
O Sri Hayagriva Perumal! Brahma is said to write each
person’s life story on their head, and this writing is known as fate. A
person’s life follows that writing. Yet, the sacred dust from Your lotus
feet has the power to erase that fate and bring only good. Even gods like
Brahma honor this dust by
wearing it on their heads. May the tiny particles of dust from Your holy feet,
which possess such greatness, also settle upon my head and shower abundant
divine grace upon me.”
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
SarvamSriKrishnarpanam