Wednesday, February 4, 2026

Hayagriva Stotram - 21 – The Glory of Lord Hayagriva’s Divine Feet and Anklets That Remove Ignorance

  श्री:

Jaya Garuda Suparna
श्रीमते निगमान्त महादेशिकाय नम: 
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

श्रीहयग्रीवस्तोत्रम् Hayagriva Stotram - ஹயக்ரீவ ஸ்தோத்ரம்

परिस्फुरन्नूपुर चित्रभानु
प्रकाश निर्धूत तमोनुषङ्गाम् ।
पदद्वयीं ते परिचिन्महेऽन्तः
प्रबोध राजीव विभात सन्ध्याम् ।। 21

 
पदच्छेदः
परिस्फुरत् नूपुर चित्रभानु
प्रकाश निर्धूत तम: अनुषङ्गाम् ।
पदद्वयीं ते परिचिन्महे अन्तः
प्रबोध राजीव विभात सन्ध्याम् ।। 21
 
परिस्फुरत्  — ஒளிவிடுகின்ற
नूपुर - சதங்கையாகிய
चित्रभानु - சூரியனது
प्रकाश - ப்ரகாசத்தால்
निर्धूत — ஒழிக்கப்பெற்ற
तम: अनुषङ्गाम् - அஞ்ஞான இருளின் ஸம்பந்தத்தையுடையனவாய்
प्रबोध - ஞானமாகிய
राजीव - தாமரைக்கு
 विभात सन्ध्याम् - காலைவேளை ஸந்த்யை போன்றனவாயுள்ள
ते पदद्वयीं  - உன் இரண்டு திருவடிகளையும்
अन्तः  - உள்ளத்தில்
परिचिन्महे - இடைவிடாது தியானிக்கின்றோம்.

 ஸ்ரீ ஹயக்ரீவப் பெருமானே ! உன் திருவடிகள் அழகிய சதங்கைகளை அணிந்துள்ளன. அந்தச் சதங்கைகள் சூரியனைப் போல் ஒளி உமிழ்கின்றன. அவ்வொலியால் மக்களின் அஞ்ஞானமாகிய இருள் சிறிதுமின்றி அகல்கின்றது. காலைப்பொழுது தாமரையை மலரச் செய்வதுபோல் உன் திருவடிகள் மக்களுக்கு நல்லறிவை வளரச் செய்கின்றன. இத்துணைப் பெருமைபெற்ற உன் இரண்டு திருவடிகளையும் எப்பொழுதும் உள்ளத்தில்  தியானித்துக் கொண்டேயிருக்கிறோம்.

     O Lord Hayagriva, your divine feet are adorned with beautiful anklets that shine like the sun. The sound of these anklets removes the darkness of ignorance from the minds of people completely. Just as the morning sun makes the lotus bloom, your sacred feet help good knowledge and wisdom grow in everyone. Remembering the greatness of your two divine feet, we always keep meditating on them in our hearts.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

SarvamSriKrishnarpanam