Sunday, February 1, 2026

Hayagriva Stotram - 18 - The Wise Remain unimpacted by Maya through the Hayagrivan’s grace

    श्री:

Jaya Garuda Suparna
श्रीमते निगमान्त महादेशिकाय नम: 
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

श्रीहयग्रीवस्तोत्रम् Hayagriva Stotram - ஹயக்ரீவ ஸ்தோத்ரம்

स्वैरानुभावास्त्वदधीनभावाः 
समृद्धवीर्यास्त्वदनुग्रहेण । 
विपश्चितो नाथ तरन्ति मायां 
वैहारिकीं मोहनपिञ्छिकां ते ।। 18

पदच्छेदः
स्वैर अनुभावा: त्वत् अधीन भावाः 
समृद्ध वीर्या: त्वत् अनुग्रहेण । 
विपश्चित: नाथ तरन्ति मायां 
वैहारिकीं मोहन पिञ्छिकां ते ।। 18

नाथ - ஸ்வாமி ! 
स्वैर अनुभावा: - தடையற்ற பெருமையுடையராய் 
त्वत् अधीन भावाः  - (தம்) உள்ளத்தை உன் வசமாக்கியவர்களாயுள்ள 
वैहारिकीं - உன் லீலைக்குச் சாதனமாயும் 
मोहन - மயக்குகின்ற 
पिञ्छिकां - மயில்தோகை போன்றதாயுமுள்ள 
 ते  मायां - உன்னுடைய ப்ரக்ருதியை 
विपश्चित: - ஞானிகள் 
समृद्ध वीर्या: - மன வலிமை வளரப்பெற்றவர்களாய் 
त्वत् अनुग्रहेण  - உன் திருவருளால் 
तरन्ति - கடக்கின்றனர். 

    ஸ்ரீ ஹயக்ரீவப் பெருமானே! உலகில் ஜாலவித்தைக்காரர்கள் மயில் தோகையை வைத்துக்கொண்டு சபையோரை மயங்கச் செய்வர். அவ்வாறே நீ ப்ரக்ருதியென்னும் மாயையைக்கொண்டு சேதநர்களை அதில் மயங்கி ஈடுபடச்செய்து திருவிளையாடல்களைப் புரிகின்றாய். ஆனால் சிறந்த ஞானிகள் அந்த மாயையில் மயங்குவதில்லை. அவர்களின் பெருமையை யாரும் குறைக்க முடியாது. அவர்கள் உன்னிடமே தங்கள் மனத்தை ஈடுபடுத்தி விடுகின்றனர். அதனால் அவர்களின் மனவுறுதி மேன்மேலும் வளர்ந்துபோகின்றது. அவர்கள்பால் உன் திருவருள் சுரக்கின்றது. ஆதலின் மாயைக்கு அவர்கள் அகப்படாது அதைக் கடந்து விடுகின்றனர். இதற்கு உன் பெருமையன்றே காரணம்? 

Sri Hayagriva Perumal! In this world, magicians use peacock feathers and amaze the audience with their tricks. In the same way, You use maya, known as prakruti, to draw living beings into it and perform Your divine play. However, great sages do not get deluded by this maya, and no one can reduce their greatness. They fix their minds only on You, and because of this, their inner strength grows more and more. Your divine grace flows toward them, and therefore they are not caught by maya but rise above it. Is not Your greatness the true reason for this?

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

SarvamSriKrishnarpanam