श्री:
Jaya Garuda Suparna
श्रीमते निगमान्त महादेशिकाय नम:
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
स्वामिन् प्रतीचा हृदयेन धन्याः
त्वद्धयानचन्द्रोदयवर्धमानम् ।
अमान्तमानन्दपयोधिमन्तः
पयोभिरक्ष्णां परिवाहयन्ति ।। 17
पदच्छेदः
स्वामिन् प्रतीचा हृदयेन धन्याः
त्वत ध्यान चन्द्र उदय वर्धमानम् ।
अमान्तम् आनन्द पयोधिम् अन्तः
पयोभि: अक्ष्णां परिवाहयन्ति ।। 17
स्वामिन् - ஸ்வாமி!
धन्याः - புண்யசாலிகள்
प्रतीचा —உள் நோக்குகின்ற
हृदयेन — மனத்தால்
त्वत ध्यान - உன்னைத் தியானித்தலாகிய
चन्द्र उदय - சந்திரனது உதயத்தாலே
वर्धमानम् - பொங்குகின்றதாய்
अन्तः - இதயத்திலே
अमान्तम् - அடங்காததாயுள்ள
आनन्द पयोधिम् - மகிழ்ச்சிக் கடலை
अक्ष्णां पयोभि: - கண்ணீர்களால்
परिवाहयन्ति - வெள்ளமிடச் செய்கின்றனர்.
ஸ்ரீஹயக்ரீவப் பெருமானே! பாக்யசாலிகளான
சிலருடைய மனம் வெளிவிஷயங்களில் செல்லாது உள்நோக்கியதாயுள்ளது. அத்தகைய உள்ளத்தால்
அவர்கள் உன் திருமேனியை த்யானித்துக் கொண்டே இருக்கின்றனர். அப்பொழுது சந்திரனது உதயத்தைக் கண்டு கடல்
பொங்கி எழுவது போல் அவர்களது உள்ளத்தே மகிழ்ச்சி பொங்கி உள்ளடங்காது வெளியே
எழுகின்றது. ஆற்றில் வெள்ளம் மிகுத்தால் மிகுதி நீரைக் கால்வாய் வழியே செல்ல
விடுவது உலக வழக்கம். அவ்வாறே அவர்கள் உள்ளடங்காத மகிழ்ச்சிக்குப் போக்குவீடாக
ஆநந்தக் கண்ணீரை வெள்ளமாகப் பெருக்குகின்றனர்.
O Sri Hayagriva Perumal! The minds of some blessed people do not go toward outer objects but
turn inward. With such focused hearts, they continue to meditate upon Your
divine form. At that time, just as the ocean rises and swells on seeing the
moonrise, joy overflows in their hearts and cannot be contained. Just as
excess water in a river flows out through channels, their overflowing joy finds
an outlet and pours out as streams of tears of bliss.
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
SarvamSriKrishnarpanam