Friday, January 30, 2026

Hayagriva Stotram - 16 - The Blessed Jeevathmas Experience of Hayagriva

  श्री:

Jaya Garuda Suparna
श्रीमते निगमान्त महादेशिकाय नम: 
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

श्रीहयग्रीवस्तोत्रम् Hayagriva Stotram - ஹயக்ரீவ ஸ்தோத்ரம்

स्वामिन् भवद्ध्यानसुधाभिषेकात् 
वहन्ति धन्याः पुलकानुबन्धम् । 
अलक्षिते क्वापि निरूढमूलम् 
अङ्गेष्विवानन्दथुमङ्कुरन्तम् ।। 16

पदच्छेदः
स्वामिन् भवत् ध्यान सुधा अभिषेकात् 
वहन्ति धन्याः पुलक अनुबन्धम् । 
अलक्षिते क्व अपि निरूढ मूलम् 
अङ्गेषु इव आनन्दथुम् अङ्कुरन्तम् ।। 16

स्वामिन्  - ஸ்வாமி ! 
धन्याः - புண்யசாலிகள் 
 भवत् ध्यान - உன்னைத் தியானித்தலாகிய 
सुधा अभिषेकात्  - அமுதத்தில் நீராடுவதால் 
अलक्षिते - கண்ணுக்குப் புலப்படாத 
क्व अपि- ஓர் இடத்தில் 
निरूढ मूलम् - வேரூன்றி நிலைத்ததாய் 
अङ्गेषु — அவயவங்களில் 
अङ्कुरन्तम् - முளைத்து எழுவதாயுள்ள  
आनन्दथुम्  इव - மகிழ்ச்சியைப் போன்ற 
पुलक अनुबन्धम् - மயிர்க்குச்சின்  தொடர்ச்சியை 
वहन्ति - அடைகின்றனர். 

 ஸ்ரீ ஹயக்ரீவப் பெருமானே! புண்யசாலிகளான சிலர் உன்னை இடைவிடாது தியானித்துக் கொண்டே இருக்கின்றனர். அந்த நிலை அவர்களுக்கு அமுத வெள்ளத்தில் நீராடுவது போலிருக்கின்றது. அவ்வின்ப நிலையில் அவர்கள் மேனியில் மயிர்க்குச்சுத் தோன்றுகின்றது. அவர்கள் உன் திருமேனியைத் தம் உள்ளத்தில் கொண்டு அநுபவிக்கும்போது அவர்களின் இதயத்தில் வேரூன்றி நிற்கும் பெருமகிழ்ச்சியே புற உறுப்புக்களில் மயிர்க்குச்சுக்களாக முளைவிட்டதோ என்னும்படி உள்ளது. பாக்யசாலிகள் இவ்வாறு உன்னை அநுபவிக்கின்றனர்.

 O Sri Hayagriva Perumal! Some blessed Jeevathmas meditate upon You without pause. That state feels to them like bathing in a flood of nectar. In that joy-filled condition, their bodies experience goosebumps. When they hold and enjoy Your divine form in their hearts, the deep happiness rooted in their hearts seems to sprout outward as goosebumps on their bodies. Thus, the truly fortunate experience You in this way.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

SarvamSriKrishnarpanam