Saturday, February 21, 2026

Dashavathara Stotram - 05 – நரஸிம்ஹாவதார வர்ணநம் - Nrusimhavataram

     श्री:

Jaya Garuda Suparna
श्रीमते निगमान्त महादेशिकाय नम: 
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

श्रीदशावतारस्तोत्रम् - Dasavathara Stothram - ஸ்ரீ தசாவதார ஸ்தோத்ரம்

05 – நரஸிம்ஹாவதார வர்ணநம் - Nrusimhavataram

प्रत्यादिष्ट पुरातन प्रहरण ग्रामः क्षणं पाणिजैः 
अव्यात् त्रीणि जगन्त्यकुण्ठ महिमा वैकुण्ठ कण्ठीरवः । 
यत्प्रादुर्भवनादवन्ध्य जठरा यादृच्छिकात् वेधसां 
या काचित् सहसा महासुर गृह स्थूणा पितामह्यभूत् ॥ 5 ॥

पदच्छेदः
प्रत्यादिष्ट पुरातन प्रहरण ग्रामः क्षणं पाणिजैः 
अव्यात् त्रीणि जगन्ति अकुण्ठ महिमा वैकुण्ठ कण्ठीरवः । 
यत् प्रादुर्भवनात् अवन्ध्य जठरा यादृच्छिकात्  वेधसां 
या काचित् सहसा महासुर गृह स्थूणा पितामही अभूत् ॥ 5 ॥

क्षणं - கணப்பொழுது 
पाणिजैः - நகங்களால்
प्रत्यादिष्ट - மறுக்கப்பட்ட 
पुरातन - பழமையான 
प्रहरण ग्रामः -  ஆயுதக் கூட்டத்தையுடையனாய் 
अकुण्ठ महिमा - வீணாகாத சக்தியுடையவனாயுள்ள 
वैकुण्ठ कण्ठीरवः - நரசிங்க வடிவுகொண்ட எம்பெருமான் 
त्रीणि  - மூன்று 
जगन्ति - உலகங்களையும் 
अव्यात् - காத்தருளவேண்டும்
यादृच्छिकात् - எதிர்பாராது உண்டான 
यत् प्रादुर्भवनात् - எவனுடைய அவதாரத்தால்
या काचित् - எதோ ஒரு 
 महासुर गृह स्थूणा - பெரிய அசுரனுடைய வீட்டுத் தூண் 
अवन्ध्य जठरा - மலட்டுத் தன்மை நீங்கியதாய் 
सहसा - விரைவில் 
वेधसां - பிரமதேவர்களுக்கு
पितामही - தந்தையைப் பெற்ற பாட்டியாக
अभूत् - ஆயிற்றோ

நரஸிம்ஹாவதார வர்ணநம்
ஹிரண்யகசிபு தேவனாலோ மனிதனாலோ விலங்கினாலோ ஆயுதங்களாலோ ஒன்றாலும் தனக்கு மரணம் வராதவாறு பெற்ற வரத்திற்கு ஏற்ப எம்பெருமான் நரவடிவு கலந்த சிங்கமாக ஆகி அவ்வசுரனது வீட்டுத் தூணில் அவதரித்துத் தன் திருக்கை நகங்களாலே அவனது உயிரை வாங்கவேண்டியதாயிற்று. ஒருவரும் எதிர்பாராத வகையில் தானும் முன் நினைக்காமல் அந்தத் தூணில் நரசிங்கனாய் அவதரித்தான் எம்பெருமான்; தன்னுடைய சாச்வதமான திருவாழி திருச்சங்கு முதலிய திவ்யாயுதங்களைக்கூட அசுரனைக் கொல்லக் கருவிகளாகக் கொள்ளாது கணப்பொழுது அவற்றை விலக்கிவிட்டான்; தன் திருநகங்கள் அவற்றினும் வலிமைமிக்கனவென்று துணிந்து அவற்றைப் புறக்கணித்தான்போலும்; அவனது சக்தி வீணாவதுண்டா? தன் திருநகங்களைக்கொண்டே அசுரனைப் பிளந்து அவன் புதல்வனாய்ப் பரம பாகவதனான ப்ரஹ்லாதாழ்வானுக்கு அருள்புரிந்தான். இவ்வாறு தற்செயலாக எம்பெருமான் செய்த அவதாரத்தால், உலகிலுள்ள மற்றைத் தூண்களுக்குக் கிட்டாத பாக்யம் அசுரன் வீட்டுத் தூணுக்கு வாய்த்தது. அசுரன் வீட்டுத் தூண் மலடு நீங்கியதாயிற்றாம். அது எல்லாப் பிரமதேவர்களுக்கும் தந்தையான நரசிங்கப் பெருமானைப் பெற்றதால் பாட்டியாக ஆயிற்று. இந்த நரசிங்கப்பெருமான் மூவுலகையும் காத்தருள்க. [பிரமனுக்குப் பிதாமஹன் என்று பெயர். பிதாமஹன் என்றால் பாட்டன். பாட்டன்மார்களுக்கும் தூண் பாட்டியாயிற்று என்ற சுவை காண்க.]

The Fierce Lord Who Came from a Pillar
Demon Hiranyakashipu received a boon that he should not die by any god, human, animal, or weapon. To honor that boon, the Paramathma took a special form that was neither man nor animal, but a mix of both — Narasimha, the Man-Lion. He appeared suddenly from a pillar in the demon’s palace, in a way no one expected, even without planning it beforehand. The Lord did not even use His usual divine weapons like the discus or the conch. It was as if He set them aside, confident that His sharp nails were stronger than any weapon. Could His power ever fail? With His holy nails alone, He tore the demon apart and killed him. Then He showed great kindness to Prahlada, the demon’s son, who was a true and devoted bhakta. Because the Lord appeared from that pillar, it received a great blessing that no other pillar in the world received. The pillar in the demon’s house lost its infertility, became sacred, as it gave birth to Narasimha, who is the Father of all Brahmas (Brahma is called “Pitamaha,” meaning grandfather). In this sweet way, the pillar became like a grandmother! May Lord Narasimha protect all the three worlds.


🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

SarvamSriKrishnarpanam