Sunday, February 22, 2026

Dashavathara Stotram - 06 – வாமநாவதார வர்ணநம் - Vamanavatharam

      श्री:

Jaya Garuda Suparna
श्रीमते निगमान्त महादेशिकाय नम: 
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

श्रीदशावतारस्तोत्रम् - Dasavathara Stothram - ஸ்ரீ தசாவதார ஸ்தோத்ரம்

06 – வாமநாவதார வர்ணநம் - Vamanavatharam

व्रीडा विद्ध वदान्य दानव यशो नासीर धाटीभटः
त्रैयक्षं मकुटं पुनन्नवतु नस्- त्रैविक्रमो विक्रमः । 
यत्प्रस्ताव समुच्छ्रित ध्वज पटी वृत्तान्त सिद्धान्तिभिः 
स्रोतोभिः सुरसिन्धुरष्टसु दिशा सौधेषु दोधूयते ॥ 6 ॥

पदच्छेदः
व्रीडा विद्ध वदान्य दानव यश: नासीर धाटीभटः 
त्रैयक्षं मकुटं पुनन् न अवतु न: त्रैविक्रम: विक्रमः । 
यत्प्रस्ताव समुच्छ्रित ध्वज पटी वृत्तान्त सिद्धान्तिभिः 
स्रोतोभिः सुरसिन्धु: अष्टसु दिशा सौधेषु दोधूयते ॥ 6 ॥

व्रीडा - வெட்கத்தால்
विद्ध - மனம் வருந்திய 
वदान्य - பெருங்கொடையாளனான  
दानव - மஹாபலியென்னும் அசுரனுடைய 
यश: नासीर धाटीभटः - புகழாகிற சேனை முனையில் முன் செல்லும் சேவகன் போன்றதாய் 
त्रैयक्षं - முக்கண்ணனான சிவனுடையதான 
मकुटं - முடியை 
पुनन् - தூய்மையாக்குவதாய் 
न 
त्रैविक्रम: - திரிவிக்கிரமப் பெருமானுடையதான  
विक्रमः - திருவடி வைப்பு  
न:  - நம்மை 
अवतु - காத்தருளவேண்டும்
यत्प्रस्ताव - எதன் தொடக்கத்திலேயே 
समुच्छ्रित - உயரத் தூக்கப்பட்ட 
ध्वज पटी - கொடி வஸ்த்ரத்தின்
वृत्तान्त सिद्धान्तिभिः  - செய்கையையுடைய 
स्रोतोभिः - வெள்ளங்களாலே 
सुरसिन्धु: - தேவ கங்கையானது 
अष्टसु - எட்டு 
दिशा सौधेषु - திசைகளாகிய மேன்மாடங்களில்
दोधूयते - விரைவாக ஆடியசைகின்றதோ?

வாமநாவதார வர்ணநம்
ப்ரஹ்லாதாழ்வானுடைய பேரனான பலிசக்கரவர்த்தி பகவத் பக்தியுடையவன்; பெருங்கொடையாளன். ஆனால் தேவர்களை நலிந்துவந்தான். அதனால் அவனை அடக்கவேண்டியதாயிற்று. எம்பெருமான் வாமன வடிவுகொண்டு பிரமசாரி வேடத்தில் பலி செய்த வேள்வியில் போய் நின்றான். இவனது திருமேனியொளியிலும் பேச்சிலும் பலி மிக ஈடுபட்டான். தன் செல்வம் அனைத்தையும் பிரமசாரி கேட்டாலும் மகிழ்ச்சியுடன் அளிக்க அவன் மனங்கொண்டான். ஆனால் வாமநப்பெருமான் பலியைத் தன் பாதத்தளவில் மூன்றடி மண் யாசித்தான். இதைக் கேட்ட பலி தன் பெருமைக்குப் பொருந்தாத அற்பப் பொருளை யாசித்ததற்கு வெட்கி மிக வருந்தினான். பின் பலி தாரை வார்த்துக்கொடுத்த மூவடி மண்ணை ஏற்ற வாமநன் த்ரிவிக்ரம வடிவுகொண்டு மேன்மேலும் வளர்ந்துகொண்டே போனான். ஓரடியால் பூமி முழுதும் அளந்து மற்றோர் அடியால் தேவ லோகத்தை அளக்க முற்பட்டான். அப்பொழுது மஹாபலியின் புகழ் உலகம் முழுதும் பரவியது. சேனைக்கு முன்னால் ஒரு வீரன் ஓடிச்சென்று அரசனது வீரத்தை உரக்கப் பறைசாற்றுவதுபோல் த்ரிவிக்ரமனது திருவடி அளப்பதற்குச் செல்லுமிடமெல்லாம் மஹாபலியின் புகழ் பரவும்படி அத்திருவடி செய்கின்றது. மஹாபலி மனமுவந்து செய்த தானத்தாலன்றோ அத்திருவடி விண்ணுலகத்தையும் அளக்கச் சென்றது. அப்படிச் செல்லும் போது ஸத்யலோகத்தில் பிரமதேவன் அத் திருவடிக்குத் திருமஞ்சனம் செய்தான். அதிலிருந்து தேவகங்கை பெருகியது. அந்த நீரை ஏந்திய சிவனுடைய முடி தூய்மைபெற்றது. அத்திருவடியாகிய கொடிமரத்தினின்று வானத்தில் தோன்றிய வெண்ணிறமான கங்காநதி எம்பெருமானது வெற்றியைக் குறிக்கவல்ல வெண்கொடி வஸ்த்ரம் என்னும்படி விளங்குகின்றதாம். அக் கங்கை வெள்ளம் எட்டுத் திசைகளாகிய மேன் மாடங்களில் அலை வீசிப் புனிதமாக்குகின்றது. இத்துணைப் பெருமையுடைய வாமந (த்ரிவிக்ரம)னது திருவடிவைப்பு நம்மைக் காத்தருள வேண்டும்.

The Lord Who Measured the Worlds
Mahabali, the grandson of Prahlada, was a great devotee of the Lord and a very generous king. But he troubled the devas, so he had to be controlled. The Lord came as Vamana, a young brahmachari, and stood before Bali during a yajna. Bali was deeply attracted by the Lord’s shining form and sweet speech. He was ready to give away all his wealth if the young brahmachari asked. But Vamana only asked for three steps of land measured by His own feet. Bali felt ashamed that such a small thing was asked from him, as it did not suit his greatness. After Bali promised and poured water to grant the gift, Vamana grew into the huge Trivikrama form. With one step He measured the whole earth, and with the second step He measured the heavens. As His divine foot went everywhere, Bali’s fame spread throughout the worlds, just like a warrior announcing a king’s bravery before the army. Because of Bali’s willing charity, the Lord’s foot reached even the heavenly worlds. When that holy foot reached Satyaloka, Brahma washed it with sacred water. From that came the holy river Ganga. The water then flowed onto Lord Shiva’s head and made it pure. The white Ganga flowing from the Lord’s raised foot looked like a white victory flag in the sky, showing His triumph. Its waters spread in all eight directions and purified everything. May the holy feet of Vamana, the great Trivikrama, always protect us.
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

SarvamSriKrishnarpanam