श्री:
Jaya Garuda Suparna
श्रीमते निगमान्त महादेशिकाय नम:
श्रीमते निगमान्त महादेशिकाय नम:
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
श्रीदशावतारस्तोत्रम् - Dasavathara Stothram - ஸ்ரீ தசாவதார ஸ்தோத்ரம்
07 – பரசுராமாவதார வர்ணநம் - Parasuramavataram
क्रोधाग्निं जमदग्नि पीडन भवं संतर्पयिष्यन् क्रमात्
अक्षत्रामिह सन्ततक्ष य इमां त्रिः सप्त कृत्वः क्षितिम् ।
दत्त्वा कर्मणि दक्षिणां क्वचन तामास्कन्द्य सिन्धुं वसन्
अब्रह्मण्यमपाकरोतु भगवान् आब्रह्म कीटं मुनिः ॥ 7 ॥
पदच्छेदः
क्रोध अग्निं जमदग्नि पीडन भवं संतर्पयिष्यन् क्रमात्
अक्षत्राम् इह सन्ततक्ष य इमां त्रिः सप्त कृत्वः क्षितिम् ।
दत्त्वा कर्मणि दक्षिणां क्वचन ताम् आस्कन्द्य सिन्धुं वसन्
अब्रह्मण्यम् अपाकरोतु भगवान् आब्रह्म कीटं मुनिः ॥ 7 ॥
य: - எந்த முனிவர்
जमदग्नि - (தந்தையான) ஜமதக்நி முனிவரை
पीडन भवं - கொன்றதால் உண்டான
क्रोध अग्निं - கோபக்கனலை
संतर्पयिष्यन् - திருப்தி செய்விப்பவராய்
इमां क्षितिम् - இந்தப் பூமியை
इह - இவ்வுலகில்
अक्षत्राम् - க்ஷத்த்ரியப் பூண்டே அற்றுப்போகும்படி
त्रिः सप्त कृत्वः - இருபத்தொன்று (தலை) முறை
क्रमात् - வரிசையாக
सन्ततक्ष - வெட்டியெறிந்தாரோ
क्वचन कर्मणि - ஒரு வேள்வியில்
ताम् - அந்தப் பூமியை
दक्षिणां - தக்ஷிணையாக
दत्त्वा - கொடுத்து
सिन्धुं - கடலை
आस्कन्द्य - தன் வசமாக்கிக் கொண்டு
वसन् - வசிப்பவரான
भगवान् - பெருமை பொருந்திய
मुनिः - அந்த முனிவர்
आब्रह्म कीटं - பிரமன் முதல் புழுவரையில்
अब्रह्मण्यम् - தீங்கை
अपाकरोतु - ஒழித்தருள வேண்டும்.
பரசுராமாவதார வர்ணநம்
கார்த்தவீர்யன் என்னும் அரசன் பரசுராமரின் தந்தையான ஜமதக்நி முனிவரிடம் தவறு செய்தான். அதனால் சினங்கொண்ட முனிவர் அவனது பலத்தை அடக்கி அவனையும் ஒழித்தார். இதையறிந்து அவ்வரசனுடைய புதல்வர்கள் பரசுராமர் இல்லாத சமயம் பார்த்து வந்து ஜமதக்நி முனிவரைக் கொன்றுபோயினர். இதை அறிந்த பரசுராமரது கோபம் பெருந் தீயாகக் கிளர்ந்தெழுந்தது. அவர் அந்தக் கோபக் கனலுக்கு இறை கொடுக்க விரும்பித் தமது கோடரியால் 21 முறை வரிசையாக அரசர்களை வெட்டி வீழ்த்தி உலகில் க்ஷத்திரியப் பூண்டே இல்லாமற் செய்து பூமி முழுதையும் தம் வயமாக்கிக் கொண்டார். பிறகு தாம் செய்த ஒரு வேள்வியில் கச்யப முனிவருக்குப் பூமி முழுதையும் தக்ஷிணையாகக் கொடுத்துவிட்டார். தானம் கொடுத்தபின் அந்த இடத்தில் (தாம்) இருப்பது உசிதமன்றெனக் கருதினார். மேற்குக் கடலுக்குச் சென்று தம் கோடரியைக் கடலில் வீசியெறிந்தார். அந்த அளவுக்குக் கடல் இடமளித்தது. அவ்விடத்தைத் தம தாகக் கொண்டு அதில் வாழ்ந்தார். அதுவே இப்பொழுது கேரள நாடு என வழங்குகின்றது. இப்படி மஹாவீரரான பரசுராமர், பிரமன் முதல் புழு வரையில் உள்ள உலகுக்குத் தீமை வராது காத்தருளவேண்டும். [பரசுராமாவதாரம் மற்ற அவதாரங்களைப் போன்றதன்று. சிறந்த ஓர் அந்தணரிடம் எம்பெருமான் தன் சக்தி முதலியவற்றைப் புகச் செய்து பல அதிசயச் செயல்களைச் செய்வித்தான். பின்பு சக்கரவர்த்தித் திருமகனாக அவதரித்தபோது பரசுராமரிடமிருந்த தெய்விகச் சக்தி முதலியவற்றைப் பறித்துக்கொண்டான். ஆதலின் இவ்வவதாரம் மற்ற அவதாரங்களைப்போல் எம்பெருமானுடைய நேர் அவதாரமன்று.]
The Warrior Sage Parashurama
King Kartavirya did wrong to the sage Jamadagni, who was the father of Parashurama. Because of this, the sage became angry and destroyed the king’s strength and killed him. Later, the king’s sons came when Parashurama was not at home and killed Jamadagni. When Parashurama heard this, his anger rose like a great fire. To satisfy his burning anger, he used his axe and destroyed the kshatriya kings 21 times, removing their rule from the earth and bringing the whole world under his control. Later, during a yajna, he gave the entire earth as a gift (dakshina) to Sage Kashyapa. After giving it away, he felt it was not right for him to stay there. So, he went to the western sea and threw his axe into the ocean. The sea moved back as far as the axe went, creating new land. Parashurama lived there, and that land is known today as Kerala. May the great and powerful Parashurama protect the world—from Brahma down to the smallest worm—so that no harm may come to it.
[ The Parashurama avatara is different from other avataras. The Lord entered a great brahmin and gave him divine power to perform many wonderful acts. Later, when the Lord was born as Rama, He withdrew those divine powers from Parashurama. So, this avatara is not considered a direct avatara like the others.]
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
SarvamSriKrishnarpanam