Tuesday, February 24, 2026

Dashavathara Stotram - 08 – இராமாவதார வர்ணநம் - Ramavataram

 श्री:

Jaya Garuda Suparna
श्रीमते निगमान्त महादेशिकाय नम: 
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

श्रीदशावतारस्तोत्रम् - Dasavathara Stothram - ஸ்ரீ தசாவதார ஸ்தோத்ரம்

08 – இராமாவதார வர்ணநம் - Ramavataram

पारावार पयो विशोषण कला पारीण कालानल- 
ज्वाला जाल विहार हारि विशिख व्यापार घोर क्रमः । 
सर्वावस्थ सकृत् प्रपन्न जनता संरक्षणैक व्रती 
धर्मो विग्रहवानधर्म विरतिं धन्वी स तन्वीत नः ॥ 8 ॥

पदच्छेदः
पारावार पय: विशोषण कला पारीण काल अनल
ज्वाला जाल विहार हारि विशिख व्यापार घोर क्रमः । 
सर्व अवस्थ सकृत् प्रपन्न जनता संरक्षण एक व्रती 
धर्म: विग्रहवान् अधर्म विरतिं धन्वी स: तन्वीत नः ॥ 8 ॥

पारावार पय: - கடலின் நீரை 
विशोषण कला  - வற்றச் செய்யும் கலையில் 
पारीण - வல்லமையுடையதாய் 
काल अनल - ப்ரளயகாலத்து அக்நியின் 
ज्वाला जाल - ஜ்வாலைக் கூட்டத்தின் 
विहार हारि  - விளையாட்டை வெல்வதாயுள்ள ( அதற்கும் மேலான) 
विशिख व्यापार  - அம்புகளின் செயல்களின் 
घोर क्रमः - கொடிய முறையுடையவனாய் 
सर्व अवस्थ - எந்த நிலையிலுமுள்ள 
सकृत् प्रपन्न - ஒரு முறை சரணமடைந்த 
जनता - சேதநக் கூட்டத்தை 
संरक्षण - காத்தலையே 
एक व्रती - முக்கிய விரதமாகவுடையனாய் 
विग्रहवान् - உருவமெடுத்து வந்த 
धर्म: - தர்மமாய் உள்ளவனாய் 
धन्वी - ஒப்பற்ற வில்லாளனாய் உள்ள 
स:  - அந்த இராமபிரான் 
नः - நமக்கு 
अधर्म विरतिं  - அதர்மத்தின் ஒழிதலை 
तन्वीत - செய்தருளவேண்டும்

இராமாவதார வர்ணநம்:
    ஒப்பற்ற வில்லாளன் இராமபிரான்; தர்மமே வடிவெடுத்து வந்ததென்னலாம்படி தர்மஸ்வரூபமாய் நிற்பவன். அவனுடைய அம்புகளின் செயல்கள் மிகப் பயங்கரமானவை ; அணை கட்டுவதற்காக இராமபிரான் ஸமுத்ரராஜனைச் சரணமடைந்தான். ஸமுத்ரராஜன் முதலில் முகங்காட்டவில்லை. அந்நிலையில் அவன் மீது இராமனுக்குச் சீற்றம் பொங்கியது. தன் அம்புகளால் கடல் நீர் முழுவதையும் வற்றச் செய்ய முற்பட்டான் இராமபிரான். கடலையும் வற்றச் செய்யும் ஆற்றல் படைத்தவை அவனுடைய அம்புகள். மேலும் பிரளய காலத்தில் அக்நியின் கொடுமையை அளவிட முடியாது. சுடர் கொழுந்துவிட்டு உலகத்தையழித்து லீலைகள் புரியும் அக்நி. இவ்வக்நியின் சுடர்த் தொகுதிகளைக் காட்டிலும் பன்மடங்கு கொடிய செயல்களைச் செய்யவல்லன இராமனுடைய அம்புகள். இத்தகைய வீரமும் பெருமையும் பொருந்திய இராமபிரான் எந்த நிலையிலும் சேதநர்கள் ஒரு முறை சரணமடைந்து விட்டால் அவர்களைக் காப்பதையே தனது முக்கிய விரதமாகக் கொண்டவன். இவ்வாறு பெருமையும் எளிமையும் சேர்ந்து உறையும் இடமாகிய இராமபிரான் நம்மை அதர்மத்தில் இழியாதவாறு காத்தருளவேண்டும்.

The Peerless Archer Rama’s Valour and Compassion
    Rama is an unmatched archer and is said to be Dharma itself in human form. His arrows were extremely powerful and fearsome. When he wanted to build a bridge to Lanka, he first surrendered to Samudra Raja, the king of the ocean, and prayed for help. But when the ocean did not respond, Rama became angry. He prepared to dry up the entire ocean with his arrows. His arrows had the power to dry even the vast sea. During Pralaya, the fire of destruction burns fiercely and destroys the worlds in a playful act of power. Yet, Rama’s arrows were said to be even more powerful than those flames of fire. Even with such great strength and heroism, Rama had one firm vow: if any being surrendered to him even once, he would surely protect them. In him, both greatness and simplicity lived together. May Lord Rama protect us always and keep us from falling into adharma.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

SarvamSriKrishnarpanam