श्री:
Jaya Garuda Suparna
श्रीमते निगमान्त महादेशिकाय नम:
श्रीमते निगमान्त महादेशिकाय नम:
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
श्रीदशावतारस्तोत्रम् - Dasavathara Stothram - ஸ்ரீ தசாவதார ஸ்தோத்ரம்
09 – பலராமாவதார வர்ணநம் - Balaramavataram
फक्कत्कौरव पट्टण प्रभृतयः प्रास्त प्रलम्बादयः
तालाङ्कस्य तथाविधा विहृतयस्तन्वन्तु भद्राणि नः ।
क्षीरं शर्करयेव याभिरपृथग्भूताः प्रभूतैर्गुणैः
आकौमारकमस्वदन्त जगते कृष्णस्य ताः केलयः ॥ 9 ॥
पदच्छेदः
फक्कत्कौरव पट्टण प्रभृतयः प्रास्त प्रलम्ब आदयः
तालाङ्कस्य तथाविधा: विहृतयस: तन्वन्तु भद्राणि नः ।
क्षीरं शर्करया इव याभि: अपृथक् भूताः प्रभूतै: गुणैः
आकौमारकम् अस्वदन्त जगते कृष्णस्य ताः केलयः ॥ 9 ॥
फक्कत्कौरव पट्टण प्रभृतयः - கெளரவர்களின் நகரம் முதலியவற்றைக் கவிழ்த்தனவாய்
प्रास्त प्रलम्ब आदयः - பிரலம்பாசுரன் முதலியவர்களை ஒழித்தவனாய்
तथाविधा: - இன்னும் அத்தகையனவான
तालाङ्कस्य - பலராமனுடைய
विहृतयस: - லீலைகள்
नः - நமக்கு
भद्राणि - நன்மைகளை
तन्वन्तु - செய்ய வேண்டும்
याभि: - எந்த(ப் பலராமனுடைய) லீலைகளாலே
शर्करया - சருக்கரை கலந்த
क्षीरं इव - பால் போல
आकौमारकम् - இளம் பருவம் தொடங்கி
अपृथक् भूताः - பிரியாமல் கலந்தனவான
कृष्णस्य - கண்ணனுடைய
ताः केलयः - அந்த லீலைகள்
प्रभूतै: - மிக அதிகமான
गुणैः - குணங்களால்
जगते - உலகுக்கு
अस्वदन्त - சுவைமிக்கு இருந்தனவோ!
பலராமாவதார வர்ணநம்
எம்பெருமான் கண்ணனுக்குத் தமையனாக ஓர் அவதாரம் செய்தான். இதுவே பலராம அவதாரமெனப்படும். இவன் தன் தம்பியான கண்ணனை விட்டுச் சிறுபொழுதும் பிரியாது கூடவே இருந்து அவனுக்குப் பெரிய பாதுகாப்பாக இருந்தான். இவனுக்குக் கலப்பையே ஆயுதமாகவும் பனைமரமே கொடியாகவும் இருந்தன. பாண்டவர்களுக்கு எதிரிகளான கௌரவர்களுக்குத் தலைநகர் ஹஸ்திநாபுரம். ஒருகால் பலராமன் தன் கலப்பையால் அந்த நகரத்தையே பிடித்திழுத்து யமுநா நதியில் கவிழ்த்து நின்றான்; கண்ணனது சிறு பருவத்தில் அவனைக் கொல்ல வந்த பிரலம்பன் முதலிய அசுரர்களைக் கொன்றுபோட்டான். இவன் புரிந்த லீலைகளும் கண்ணனுடைய லீலைகளும் தனித்தனியே சுவை மிக்கனவாகும். கண்ணனுடைய பால்ய லீலைகள் பலராமனுடைய லீலைகளுடன் பிரியாது சேரும்போதுதான் கண்ணனுடைய எளிமை அன்பு முதலிய குணங்கள் உலகுக்கு நன்கு வெளிப்பட்டு உலகம் முழுவதும் அநுபவிக்க வாய்ப்பு வந்து கண்ணனுடைய லீலைகளின் சுவை எல்லையற்றதாகின்றது. பாலும் சர்க்கரையும் தனித்தனியே இனியனவாயினும் சர்க்கரை கூடிய பின் பாலின் சுவை மிகுத்து நிற்குமன்றோ? இவ்வாறு கண்ணபிரானுடைய லீலைகளைச் சுவைமிக்கனவாக்கும் பலராமனுடைய லீலைகள் நமக்கு நன்மைகளைப் புரிந்தருள வேண்டும்.
Balarama – The Loving Elder Brother
The Lord Mahavishnu took birth as the elder brother of Krishna. This avatara is known as Balarama. He never left his younger brother Krishna even for a short time and always stayed by his side as strong protection. His weapon was the plough, and his flag carried the symbol of a palm tree. The capital city of the Kauravas, who were enemies of the Pandavas, was Hastinapura. Once, Balarama used his plough to pull that entire city of Hastinapura toward the river Yamuna and almost overturned it. During Krishna’s childhood, when demons like Pralamba came to kill Krishna, Balarama destroyed them. The divine plays (leelas) of Balarama and Krishna are each sweet in their own way. But when Krishna’s childhood leelas are joined with Balarama’s, Krishna’s simplicity and loving nature shine even more brightly, and the whole world gets to enjoy their sweetness without limit. Milk and sugar are each sweet on their own, but when sugar is added to milk, the sweetness increases greatly. In the same way, Balarama’s leelas make Krishna’s leelas even more delightful. May Balarama’s sacred plays bring us goodness and blessings.
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
SarvamSriKrishnarpanam