Thursday, February 26, 2026

Dashavathara Stotram - 10 – கிருஷ்ணாவதார வர்ணநம் - Krishnavataram

   श्री:

Jaya Garuda Suparna
श्रीमते निगमान्त महादेशिकाय नम: 
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

श्रीदशावतारस्तोत्रम् - Dasavathara Stothram - ஸ்ரீ தசாவதார ஸ்தோத்ரம்

10 – கிருஷ்ணாவதார வர்ணநம் - Krishnavataram

नाथायैव नमः पदं भवतु नश्चित्रैश्चरित्र क्रमैः 
भूयोभिर्भुवनान्यमूनि कुहना गोपाय गोपायते । 
काळिन्दी रसिकाय काळिय फणि स्फार स्फटा वाटिका- 
रङ्गोत्सङ्ग विशङ्क चंक्रम धुरा पर्याय चर्या यते ॥ 10 ॥

पदच्छेदः
नाथाय एव नमः पदं भवतु न: चित्रै: चरित्र क्रमैः 
भूयोभि: भुवनानि  अमूनि कुहना गोपाय गोपायते । 
काळिन्दी रसिकाय काळिय फणि स्फार स्फटा वाटिका- 
रङ्ग उत्सङ्ग विशङ्क चंक्रम धुरा पर्याय चर्या: यते ॥ 10 ॥

भूयोभि: - மிகுதியான 
चित्रै: - ஆச்சர்யமான
चरित्र क्रमैः  - செயல் முறைகளால் 
अमूनि  - இந்த 
भुवनानि  - உலகங்களை 
गोपायते - காக்கின்றவனாய் 
काळिन्दी रसिकाय - யமுனை நதியில் சுவை கண்டவனாய் 
काळिय फणि - காளியன் என்னும் ஸர்ப்பத்தின் 
स्फार स्फटा - அகன்ற படமாகிய 
वाटिका रङ्ग - நாட்டிய மண்டபத்தலத்தின் 
उत्सङ्ग - நடுவில் 
विशङ्क चंक्रम - அச்சமின்றி  நடம்புரிதலாகிய 
धुरा पर्याय - பெருஞ் செயல் போன்ற 
चर्या - செயல்களை 
यते - செய்பவனாயுள்ள 
कुहना गोपाय - இடைய வேடங் கொண்ட 
नाथाय एव - நாதனான கண்ணபிரானுக்கே 
 न:  - நம்முடைய 
नमः पदं  - நம: என்னும் சொல் 
भवतु - ஆகக்கடவது

கிருஷ்ணாவதார வர்ணநம்
எம்பெருமான் கிருஷ்ணாவதாரத்தில் உலகுக்குக் காட்ட இடைக்கோலங் கொண்டான்; மற்றவர்கள் உள்ளத்தால் நினைக்கவும் முடியாத பல விசித்திரமான அரும் பெருஞ் செயல்களைச் செய்தருளினான் ; யமுனைக் கரையில் பல திருவிளையாடல்களைப் புரிவதிலேயே ருசி கண்டான். அவனுடைய லீலைகளை அப்பொழுது உலகிலுள்ளவர் கண்டு களித்தும் பிற்காலத்தவர் அவற்றை அநுஸந்தித்தும் நற்கதி பெறலாயிற்று. மேலும் யமுனையாற்றின் மடுவில் காளியனென்னும் துஷ்ட ஸர்ப்பம் அந்நீர் முழுதும் நஞ்சினைக் கக்கி மக்களுக்குப் பெருந் தீங்கு விளைவித்தது. கண்ணபிரான் அந்தக் காளியனது அகன்ற படத்தை நடனம் புரியும் இடமாகக்கொண்டு அதன் நடுவில் சிறிதும் அச்சமின்றி நடம் புரிந்து அடக்கினான். இன்னும் இத்தகைய பல அருஞ்செயல்களைப் புரிந்து உலகைக் காத்தருளினான். இத்தகைய அருமையான பல லீலைகளைப் புரியும் கண்ணபிரானுக்கு நம் வணக்கம் உரித்தாகுக.

Krishna – The Lord of Sweet Divine Plays
When the Lord took the Krishna avatara, He chose the simple form of a cowherd to teach the world. He performed many wonderful and rare deeds that no one could even imagine in their minds. He especially delighted in doing divine plays on the banks of the river Yamuna. The people of that time saw His leelas and rejoiced, and people of later times remember and meditate on them to attain spiritual good. In the waters of the Yamuna lived a wicked serpent named Kaliya, who filled the river with deadly poison and caused great harm to the people. Krishna fearlessly climbed onto the serpent’s wide hoods and danced upon them, subduing and controlling him without any fear. In this way, He performed many amazing acts and protected the world. To such a wonderful Lord Krishna, who blesses the world through His sweet and powerful leelas, our humble salutations.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

SarvamSriKrishnarpanam