Friday, February 27, 2026

Dashavathara Stotram - 11 – கல்கியவதார வர்ணநம் - Kalkiavataram

    श्री:

Jaya Garuda Suparna
श्रीमते निगमान्त महादेशिकाय नम: 
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

श्रीदशावतारस्तोत्रम् - Dasavathara Stothram - ஸ்ரீ தசாவதார ஸ்தோத்ரம்

11 – கல்கியவதார வர்ணநம் - Kalkiavataram

भाविन्या दशया भवन्निह भव ध्वंसाय नः कल्पतां 
कल्की विष्णुयशस्सुतः कलि कथा कालुष्य कूलंकषः । 
निःशेष क्षत कण्टके क्षितितले धारा जलौघैर्ध्रुवं 
धर्मं कार्तयुगं प्ररोहयति यन्निस्त्रिंश धाराधरः ॥ 11 ॥

पदच्छेदः
भाविन्या दशया भवन्  इह भव ध्वंसाय नः कल्पतां 
कल्की विष्णुयश: सुतः कलि कथा कालुष्य कूलंकषः । 
निःशेष क्षत कण्टके क्षितितले धारा जल ओघै: ध्रुवं 
धर्मं कार्तयुगं प्ररोहयति यत्  निस्त्रिंश धाराधरः ॥ 11 ॥

विष्णुयश: - விஷ்ணுயசஸ் என்னும் அந்தணனுக்கு 
सुतः  - புத்திரனாய் (அவதரிக்கப் போகின்றவனும்) 
कलि कथा - கலியுகத்தின் ஸந்தர்ப்பத்தால் வரும் 
कालुष्य - குழப்பத்தை 
कूलंकषः - முற்றிலும் ஒழிப்பவனுமான
कल्की - கல்கி பகவான் 
भाविन्या - வரப்போகின்ற 
दशया - நிலைமையோடு 
इह - இவ்வுலகில் (அர்ச்சையாய்) 
भवन् - இருப்பவனாய்  
नः - நம்முடைய 
भव ध्वंसाय - ஸம்ஸார பந்தத்தை ஒழிப்பதற்கு 
कल्पतां  - முற்படட்டும் 
यत्  निस्त्रिंश -  எவனுடைய கத்தியாகிய 
धाराधरः - மேகம் 
निःशेष क्षत कण्टके - துஷ்டர்களாகிய முட்கள் மீதியில்லாமல் ஒழியப்பெற்ற 
क्षितितले  -  பூமண்டலத்தில் 
धारा जल ओघै: - தன் முனையாகிய நீர் வெள்ளத்தால் 
कार्तयुगं - கிருதயுகத்தினுடைய 
धर्मं - தர்மத்தை 
ध्रुवं - நிச்சயமாக 
प्ररोहयति  - முளைக்கச் செய்கின்றதோ?

கல்கியவதார வர்ணநம்
இதுவரை கூறிய ஒன்பது அவதாரங்களும் முன்பு நடந்தவை. பத்தாவதான கல்கியவதாரம் இனி வரப் போகின்றது. எதிர்காலத்தில் 'சம்பளம்' என்னும் ஊரில் விஷ்ணுயசஸ் என்னும் அந்தணனுக்குப் புதல்வனாய் எம்பெருமான் அவதரிக்கப்போகிறான். கண்ணபிரான் தன் அவதார கார்யத்தை முடித்து ஸ்ரீவைகுண்டத்திற்கு எழுந்தருளியபின் இவ்வுலகில் கலிபுருஷனது ஆட்சித்திறன் உச்சநிலைக்கு வந்து கொண்டிருக்கின்றது. மக்களிடம் அநாசாரம் - நாஸ்திகக் கொள்கை கெட்ட எண்ணம் முதலிய தீய குணங்கள் தலையெடுத்து நிற்கின்றன. உலகில் பாபிகள் மிகுத்துப் பெரிய குழப்பம் பின்னும் உண்டாக இருக்கின்றது. எம்பெருமான் குதிரை முகத்துடன் கல்கியாக அவதரித்துக் கலியின் ஆர்பாட்டத்தை வேரறுக்கப் போகின்றான். அவன் ஒரு வெண் குதிரையின்மீது ஏறித் தன் கையில் ஒரு கத்தியைப் பிடித்து அதனால் பூமிக்கு முள்ளுப் போன்றிருக்கும் பாபிகளை மீதியில்லாமல் ஒழித்துத் தீர்ப்பான். அவன் கையில் பிடித்த கத்தி, காளமேகம் தன் நீர்த்தாரைகளால் பயிர்களைச் செழிக்கச் செய்வதுபோல் தன் முனையால் அதர்மத்தை அழித்துக் கிருதயுகதர்மத்தை நிச்சயமாய் ஓங்கச் செய்யப்போகின்றது. இனி வரப்போகும் கல்கியவதாரத் திருமேனியுடன் இப்பொழுது அர்ச்சையாக ஸேவை தரும் எம்பெருமான் நம்முடைய ஸம்ஸாரபந்தத்தை நீக்கியருள வேண்டும்.

Kalki – The Future Savior
The nine avataras spoken till now have already taken place. The tenth avatara, Kalki, is yet to come. In the future, the Lord will be born in a village called Shambhala as the son of a brahmin named Vishnuyasas. After Lord Krishna completed His avatara and returned to Sri Vaikuntha, the rule of Kali Purusha has been growing stronger in this world. Wrong practices, atheistic ideas, and evil thoughts are rising among people. Sin and confusion are increasing everywhere. To end this chaos, the Lord will appear as horse faced Kalki. He will ride a white horse and hold a sharp sword in His hand. With that sword, He will remove the sinners who are like thorns to the earth. Just as dark rain clouds pour water to help crops grow well, His sword will destroy adharma and firmly establish the dharma of Krita Yuga once again. May that Lord, who will appear as Kalki in the future and who even now blesses us in temple form, remove our bondage in this cycle of birth and death.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

SarvamSriKrishnarpanam