Saturday, February 28, 2026

Dashavathara Stotram - 12 – ஒன்றுசேர அவதார வர்ணநம் - Dashavataram

    श्री:

Jaya Garuda Suparna
श्रीमते निगमान्त महादेशिकाय नम: 
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

श्रीदशावतारस्तोत्रम् - Dasavathara Stothram - ஸ்ரீ தசாவதார ஸ்தோத்ரம்

12 – ஒன்றுசேர அவதார வர்ணநம் - Dashavataram

इच्छा मीन विहार कच्छप महा पोत्रिन् यदृच्छा हरे 
रक्षा वामन रोष राम करुणा काकुत्स्थ हेला हलिन् । 
क्रीडा वल्लव कल्क वाहन दशा कल्किन्निति प्रत्यहं 
जल्पन्तः पुरुषाः पुनन्ति भुवनं पुण्यौघ पण्यापणाः ॥ 12 ॥

पदच्छेदः
इच्छा मीन विहार कच्छप महा पोत्रिन् यदृच्छा हरे 
रक्षा वामन रोष राम करुणा काकुत्स्थ हेला हलिन् । 
क्रीडा वल्लव कल्क वाहन दशा कल्किन् इति प्रत्यहं 
जल्पन्तः पुरुषाः पुनन्ति भुवनं पुण्य ओघ पण्य आपणाः ॥ 12 ॥

इच्छा मीन - தன் ஸங்கல்பத்தாலேயே மீனாக அவதரித்தவனே! 
विहार कच्छप  - விளையாடல் புரிய ஆமையானனே ! 
महा पोत्रिन्  - மிகப் பெரிய பன்றியுருக்கொண்டவனே !
यदृच्छा हरे  - எதிர்பாராது தோன்றிய நரசிங்கப்பெருமானே ! 
रक्षा वामन - காப்பதற்கே வாமனனாய் உதித்தவனே!  
रोष राम  - கோபம் மிகுத்த பரசுராமனே ! 
करुणा काकुत्स्थ  - கருணா மூர்த்தியான இராமபிரானே ! 
हेला हलिन् । - கலப்பையால் விளையாடிய பலராமனே ! 
क्रीडा वल्लव - கோவலனாய் விளையாடிய கண்ண! பிரானே !
कल्क वाहन दशा कल्किन्  - வெண் குதிரை ஏறப்போகின்ற கல்கிப்பெருமானே! 
इति - என்று 
प्रत्यहं  - தினந்தோறும் 
जल्पन्तः - அநுஸந்திக்கின்றவர்களாய் 
पुण्य ओघ - புண்ணியக் கூட்டத்தையே 
पण्य - விலைப்பொருள்களாகக் கொண்ட 
आपणाः  - கடை போன்றவர்களாய் உள்ள 
पुरुषाः - மனிதர்கள் 
भुवनं - உலகத்தை 
पुनन्ति - தூய்மையாக்குகின்றனர்

ஒன்றுசேர அவதார வர்ணநம்
பத்து அவதாரங்களையும் ஏற்ற அடைமொழிகளுடன் ஒன்று சேர ஸ்ரீ தேசிகன் அநுஸந்தாநம் செய்கிறார் இச்சுலோகத்தில். தானே ஸங்கல்பித்து மத்ஸ்யாவதாரம் செய்த பிரானே !  மந்தர மலையை மத்தாக்கிக் கடலைக் கடைந்து விளையாட ஆமையாய் அவதரித்த பெருமானே ! உலக முழுதும் சூழ்ந்து நிற்குமாறு பெரிய வராஹமாய்த் தோன்றிய எம்பெருமானே ! ஒருவரும் எதிர்பாராதிருக்கும் நிலையில் சடக்கெனத் தோன்றிய நரசிங்க வடிவனே! மூவுலகும் நல்வாழ்வு பெறக் கங்கையைப் பெருக்கிக் காத்த வாமன - த்ரிவிக்ரமப் பெருமானே ! க்ஷத்திரியப்பூண்டே உலகில் இல்லாமற் செய்தற்கு ஏற்ற கோபமூர்த்தியான பரசு ராமனே! கருணையே வடிவெடுத்த இராமபிரானே ! கலப்பையைக் கொண்டு பல லீலைகளைச் செய்த பலராமனே ! ஆயர்குலத்துத் தோன்றிப் பல அற்புத லீலைகள் புரிந்த கண்ணபிரானே! வெண்குதிரையேறித் தருமத்தை நிலைநிறுத்தப்போகும் கல்கிப் பெருமானே! என்று இவ்வாறு தினந்தோறும் துதித்துக் கொண்டிருக்கும் மனிதர்கள் புண்யக்கூட்டத்தையே விலைப் பொருளாகக் கொண்டுள்ள கடைகள் போன்றவராவர். கடைகளை அணுகினால் வேண்டிய பண்டங்களைப் பெறலாம். அவ்வாறே இந்தப் புண்ய புருஷர்களை அணுகி வழிபட்டால் மிகுந்த புண்யங்களைப் பெறலாம். இவர்கள் தாம் வசிக்கும் உலகம் முழுவதையுமே புனிதமாக்குகின்றனர்.

Praising the Ten Avataras – Devotees Who Chant the Dashavatara Are Like Treasure Houses of Punya
In this verse, Sri Desika beautifully remembers all the ten avataras together, each with a special title. “O Lord who chose on Your own to take the Matsya avatara! O Lord who became a tortoise to hold Mount Mandara and help churn the ocean! O great Varaha who grew so vast and lifted the earth! O Narasimha who suddenly appeared when no one expected! O Vamana–Trivikrama who measured the worlds and brought the holy Ganga for the good of all! O fierce Parashurama who removed the kshatriyas from the earth! O Rama who is the very form of compassion! O Balarama who performed many leelas with His plough! O Krishna who was born in the cowherd clan and did countless wonderful acts! O Kalki who will ride a white horse and establish dharma!” In this way, those who praise these avataras every day are like shops filled only with heaps of merit (punya). Just as we get the things we need from a shop, we receive great spiritual merit by going near such holy people and worshipping them. These blessed mahatmas make the whole world where they live pure and sacred.


🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

SarvamSriKrishnarpanam